Monday, August 29, 2011

தூக்குதண்டனைக்கு இடைக்கால தடை வரலாம்..

தமிழகத்து இன ஆர்வ மக்களுக்கு கடந்த சில தினங்களாக பல்வேறு குழப்பங்கள்,கொதிப்புகள்,மன உளைச்சல்கள்.. சில பழம் தின்று கோட்டை போட்ட அரசியல் புள்ளிகள் குழம்பிய குட்டையில் தங்களால் இயன்றவரை மீன் பிடிக்க பார்கிறார்கள்.. ஒரு சிறு பெண்மணி அதீத உணர்ச்சியால் தீக்குளித்தது வருந்தத்தக்கது.. மனம் வெதும்பிய உள்ளங்களே சற்று நிதானியுங்கள் ...

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பல்வேறு கருத்துக்களை உள்வாங்கி வடிவமைக்கபட்டுள்ளது.. குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்தாலும் சில காரணங்களுக்காக கருணை மனுவை நிராகரித்ததற்கு ஏற்பட்ட தாமதம் இன்ன பிற வழிகளில் மேல்முறைஈட்டிற்கு வழி செய்கிறது..

நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புகள் , கைதிகளிடம் இருந்து வாங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலும், வாதாடும் வக்கீல்களின் திறன்களின் அடிப்படையிலும் இன்ன பிற சாட்சியங்களின் அடிப்படையிலும் , வகுக்கப்பட்ட சட்டம் வரையரம்புகளை பொறுத்து தீர்ப்பு வழங்க வழி செய்கிறது.. மேல் முறைஈடிற்கும் வழி செய்கிறது ..

குற்றம் உறுதி செய்யபடுகின்ற போது தண்டனைகள் உறுதி செய்யப்பட்டு அதிக பட்ச தண்டனைகளுக்கு நீதிமன்ற வழக்குகளுக்கு, நடைமுறைகளுக்கு மாறாக மனிதாபிமான மற்றும் நாட்டு நடப்பு, சமூகத்தில் தண்டனையின் பாதிப்பு இவற்றை கருத்தில் கொண்டு அந்த தண்டனைகளை மன்னித்து வீரியத்தை குறைக்க ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் சில பிரத்தியேக அதிகாரங்களை கொடுக்கிறது ..
சாந்தன், பேரறிவாளன்,முருகன் ஆகியோரது வழக்கில் காலம் தாழ்த்தப்பட்ட தண்டனை என்பது உச்ச தண்டனையை ஒத்தி வைக்க சில வழி வகைகளை செய்கிறது ..அதே சமயம் கடுமையான வாதங்களினால் சில சாதகமான தீர்ப்புகளும் வந்து சேரலாம்..
குடியரசு தலைவர் பிரதிபா பாட்டிலால் இந்த ஆண்டு வேறு இரண்டு வழக்குகளிலும் கருணை மனு நிராகரிகபட்டது. அந்த இரண்டு வழக்கும் நீதிமன்றத்தில் கருணை மனு நிராகரிக்க பட்டதற்கான கால தாமதத்தால் மேல் முறையீட்டில் உள்ளன. அதனால் விதிக்கப்பட தூக்கு தண்டனைக்கு இடை கால தடை உள்ளது .
1. சீக்கிய விடுதலை படை தலைவர் புல்லார் வழக்கு, ஜெர்மனியில் பணி புரிந்த இவர் மும்பையில் குண்டு வெடிப்புக்கு சதிசெய்து ஒன்பது பேரை கொன்றதாக தடா பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டவர்
2. அஸ்ஸாமை சேர்ந்த மகேந்திர நாத் தாஸ் என்பவர் ஒரு நபரை கடை தெருவில் வைத்து கழுத்தை அறுத்து தலையை எடுத்து சென்று காவல் நிலையத்தில் கொடுத்ததாக உள்ள கொடுர வழக்கு

மேற்கண்ட இரண்டு வழக்கிற்கும் காலம் கடந்த கருணை மனு நிராகரிபிர்க்கு கால தாமதத்துக்கான காரணம் கேட்டு நீதிமன்றம் உள்துறைக்கும்,மாநில அரசிற்கும், சிறை துறைக்கும் விளக்கம் அழிக்க கேட்டு உள்ளது .. இந்த விளக்கங்களின் அடிப்படையில் இதில் தீர்ப்பு வழங்கப் படலாம் ...மத்திய, மாநில அரசு துறைகளின் பதில்களின் கால அளவை பொறுத்து வழக்கு நீளலாம்..
இதே போல் இந்த பேரறிவாளன் இன்ன பிறர் மரண தண்டனை வழக்கும் சில காலம் ஒத்தி வைக்கப்பட்டு வழக்கு நடக்க வாய்ப்பு உள்ளது பின் வக்கீலின் வாத திறமையை பொறுத்து,வழக்கின் கால அளவை சில சாதக தீர்ப்பும் குற்றம் சாட்ட பட்டவர்களுக்கு வரலாம்..

56 வது நபராக சுதந்திர இந்தியாவில் தூக்கில் இடபடுபவர் யார் என்ற வினா அனைவர் மனதிலும் எழுந்து உள்ளது . இந்தியாவில் இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு தனஞ்செய் எனும் ஒரு காவலாளி ஒரு சிறு பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் சனாதிபதி அப்துல் கலாம் அவர்களால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டான் அதற்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு ஆட்டோ சங்கர் தமிழகத்தில் தூக்கில் இடப்பட்டான்.. இதற்கு அடுத்து கருணை மனு நிராகரிகபட்ட வழக்குகள் யாவும் மேல் முறையீட்டில் உள்ளன.
இந்த நிலுவையில் உள்ள வழக்குகளை புறந்தள்ளி மத்திய உள்துறை பேரறிவாளன், இன்ன பிறர் வழக்குகளில் சிரத்தை எடுத்து விரைவு படுத்துமாயின் அதன் பின் அரசியல் இருப்பது அர்த்தமாகிறது.. இதற்கு இடையில் தமிழாக அரசியல் புள்ளிகள் இந்த விவகாரத்தை எடுத்து ஜெயலலிதாவிற்கு நெருக்கடி கொடுக்க தயார் ஆகிறார்கள்.. முந்தைய கருணாநிதி தலைமையின் கீழ் உள்ள அரசால் அங்கிகரிக்பட்ட மூவரின் மரண தண்டனையை மற்றொரு அரசு மறுப்பது முரணாக தோன்றும் .. அதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது மீண்டும் விவாதத்திற்கு ஆகிறது .. அப்படி ஒரு முடிவை எடுத்தாலும் அதற்கு எதிராக காங்கிரச்சாரல் கொண்டு வரப்படும் மேல்முரைஈடிற்கு சட்டம் என்ன பதில் சொல்லும்?

தற்போது தமிழர்கள் ஒன்று இணைந்து கட்சி பாகுபாடுகளை மறந்து ஒரே குரலாக உலகமெங்கும் இருந்து ஒலித்து இந்திய குடியரசு தலைவருக்கு [ சோனியா அம்மையார் கீழ் உள்ள ] அரசுக்கு தங்கள் வேண்டுகோளை, கண்டனங்களை ஒட்டு மொத்தமாக பதிவு செய்தால் குடியரசு தலைவரின் மறு பரிசீலனையின் பெயரில் அல்லது ஆளுநர் பரிசீலனையின் பெயரில் அல்லது தண்டனையை குறைக்க செய்யும் தீர்மானம் என்று அப்படி ஒரு வாய்ப்பு உறுதியாக இருந்தால் தமிழக முதல்வருக்கும் ஒரு குரலாக ஒழித்தால் சில வழி பிறக்க வாய்ப்பு உள்ளது ..

மிக அதிக காலம் கடந்த தண்டனை என்பதும்,
மிக பெரிய மன உளைச்சலுக்கு ஆளான ஒரு இனத்திற்கு , அதன் சமூக மக்களின் மனங்களுக்கு இதனால் மேலும் ஒரு பாதிப்பு என்ற கோணத்திலும்
இந்த வழக்கிற்கு சில சாதகங்கள் வந்து சேரலாம் தமிழர்கள் , தமிழக அரசியல், இயக்க தலைவர்கள் ஒன்று இணைந்து செயற்பட்டால் மட்டுமே சாத்தியாமாகும்


Monday, April 25, 2011

ஜெயலலிதா வெற்றி உறுதியாகிறது!!

ஜெயலலிதா வெற்றி உறுதியாகிறது!!
----------------------------------------------
சமீபத்தில் நடந்த தமிழக வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கி,ஆளும் கட்சி மீதான் எதிர் அலை , ஈழா ஆதரவு என பல்வேறு சூழ்நிலைகளுக்கு மத்தியில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த முறையினை அடிப்படையாக வைத்து நடந்த ஒரு ஆய்வில் ஓவொரு தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் அடிப்படையில் , சில கள ஆய்வின் அடிப்படையில் நடந்த புள்ளியியல் ஆய்வில் அடுத்த முதல்வராக தமிழக சட்ட சபைக்கு ஜெயலலிதா வாகை சூடுவது உறுதி ஆகிவுள்ளது















Link for the statistics:-
------------------------
https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0ByADmIfqM6uxNDRhZjY1OWMtZjhiNi00MWQwLTk4ZGMtNDE1OWNjYWZkZDhh&hl=en

Friday, April 22, 2011

ராஜபக்சேவிற்கு சர்வதேச பத்திரிக்கை சாட்டையடி !!

டைம்ஸ் மேகசின் என்னும் சர்வதேச பத்திரிக்கை நடத்திய உலகின் சிறந்த முக்கிய பிரமுகர்களின் தரவரிசை பட்டியலில் இருந்து இந்த கொடுங்கோலன் பெயர் நீக்கப் பட்டது. முன்னதாக ராஜபக்சே இணைய தரவரிசை பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்தது குறிபிடத்தக்கது..

இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு ராஜபக்செவே காரணம் என்பதால் உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது .. ஆயினும் தந்திர ராஜபக்ஷே ஆட்களை வைத்து போலியாக இணையத்தில் ஆதரவை கூட்டி காண்பித்து இருப்பார் என சந்தேகம் வலுக்கிறது

http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2066367,00.html.

Tuesday, April 12, 2011

ஈழம் கொன்ற பித்தலாட்ட துரோகி 'வைகோ!! '

கொன்று ஒழிக்கப்பட்ட ஈழத்தின் இறுதி நிமிடம் வரை அண்ணன் நடசேன் அவர்களும் இன்ன பிற தலைவர்களின் நேரடி உரையாடலில் இருந்த ஒருவர் இந்த 'பித்தலாட்ட' வைகோ. ஒரூ தலைவனின் திறமை தோல்வி வரும் பொது அதற்கு முழு பொறுப்பு ஏற்கும் பக்குவத்தில் உள்ளது . புலிகளின் அரசியல் தோல்விக்கு மிக பெரிய பொறுப்பு இந்த பித்தலாட்ட வைகோவிற்கு உண்டு ...ஆனால் அதனை இவர் இன்னும் மறுத்து மீண்டும் போர் வெடிக்கும் , ஈழப் படை ஆயத்தம் ஆகி கொண்டு இருக்கிறது என்று உதார் விட்டுக் கொண்டு தனக்கு வரை வேண்டிய நிதிகள் அடிபடாதவாறு கிளறி விட்டு கொண்டு இருப்பார்

அரசியலில் கில்லாடியான கலைஞ்சரையே தூக்கி சாப்பிட போன காரணாத்தால் இவரை விரட்டி அடித்தார் அரசியல் பிதாமகர்... தமிழகத்தில் ஈழ வேட்கை பற்றி எரிந்த எண்பதுகளில் தமிழர்களுக்கு தனி நாடு கிடைக்கும் எனும் வேளைகளில் ஈழத் தலைவர்களுடன் நெருக்கம் பேணிய வைகோ ஈழ ஆதரவையே தனது அரசியல் சக்தியாக மாற்றி காட்டியவர் .. இந்த ஈழ ஆதரவு வெளிப்பாடு பிறப்பால் இவர் தினமும் தெலுங்கு பேசும் நாயக்கர் என்பதை பலரும் மறக்க உதவியது ..

இவர் ஒன்றும் கரை படியாத கரங்களுக்கு சொந்த காரார் கிடையாது. இவர் பலமாக பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் பொது திண்டிவனம் ராமமூர்த்திக்கு வலது கரமாக விளங்கிய இவர் மச்சினன் மூலம் இவர் அடித்த கோடிகள் தாராளம் .. திண்டிவனம் இராமமூர்த்தி ஒருகாலத்தில் பதவி இறக்கம் செய்யப்பட்டது பலருக்கும் நினைவு இருக்கும். அன்றைய கால கட்டத்தில் இவர் சகாயத்தால் நாயகர்கள் பலரும் பல அரசு பணிகளில் அமர்ந்தனர் , இவர் பினாமிகள் பலரும் பல்வேறு வகைகளில் சொத்து, கல்லூரி என செல்வா செழிப்பு ஆனார்கள்.

பலம் இருக்கும் போதும் , பதவி இருக்கும் போதும் பல இனத்து மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டியது ஒரு நல்ல தலைவரின் கடமை ஆனால் இந்த பிதலாட்டக்காறார் தனது சமூகத்திற்கு மட்டும் சகாயம் செய்வதால் இவர் கட்சி பல இடங்களில் மூன்றாம் நிலை, நான்காம் நிலை கட்சியாக ஒரு ஜாதி ரீதியான ஒட்டு வங்கியாக இருந்து வருகிறது.. இவர் பின்னால் வந்த இவர் சார்ந்த சமூகத்து விஜயகாந்து பல இனத்தவரையும் அணைத்து செல்வதால் அபார வளர்ச்சியை எட்ட முடிந்தது... இவரின் வீழ்ச்சிக்கு இவரே காரணம் அன்றி வேறு யாரையும் குறை கூறுவது நல்லது அல்ல


சரி விசயத்துக்கு வருவோம் ....

இந்த அரசியல் விளம்பரதாரி முத்து குமார் மரண மேடைகளில் செய்த செப்படி வித்தைகள் யாவரும் அறிந்ததே .. சட்ட கல்லூரி மாணவர் பலரது எதிர்ப்பையும் மீறி மேடை ஏற முனைந்தது , அங்கு மீடியாக்கள்ளுக்கு தன்னை மைய படுத்தி பேட்டி கொடுத்தது என அலப்பறை செய்து அந்த கணத்தில் உருவாக இருந்த மூன்றாவது அணியை முளையிலே கிள்ளி விட்டவர்.. இவருக்கு ஈழம் என்பது ஒரு ஊறுகாயை போல.. இவர் நலம் சார்ந்த விடயங்களுக்காக ஈழ பிரச்சனையை வழைத்து சென்றவர். சாகும் நிலையில் இருந்த தமிழர்களை ஒரு சர்வதேச பார்வையில் எடுத்து செல்ல விடாமல் பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றி பெறுவோம் என இறுமார்பு கொண்டு இறுதி வரை இந்திய தேர்தலை மையமாக வைத்து ஈழ பிரச்சனையின் இறுதி நாட்களை கொண்டு சென்றவர்...

மேடைக்கு மேடை பெருமையாக நடேசனிடம் பேசினேன், அவரிடம் பேசினேன் , இவரிடம் பேசினேன் என சொல்லும் இவர் நடந்த விபரீத விளைவுகல்லுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் .. தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும் என சீறியவர் இறுதியில் என்ன ஆனது ? இவர் பின்னால் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் தமிழ் பற்று, இன பற்று இல்லையே.... நாள் முழுதும தெழுங்கு பேசும் இவர் படை தமிழுக்கு என்ன பெரிதாக செய்து சாதிக்க முடியும் ..

விரட்டி விட்டவனுடன் ஒட்டி கொண்டது , ஜெயிலில் தள்ளியவருடம் உறவாடியது என இவர் செய்த கூட்டணி செப்படி வித்தைகள் ஆருவருப்பு நிறைந்தது .. இவருக்கு என்று என்ன கொள்கை இருந்து விட முடியும்? இன்று பன்னிரண்டு சீட்டுகள் பத்தாதென்று ஜெயலலிதாவின் மீது சேற்றை வாரி இறைக்கிறார் ... சொந்த தொகுதியில் தோத்தற்கு பதில் சொல்ல மாட்டார் !!!!

இதை விட கொடியது இவர் கட்சிகாரர்கள் திரை மறைவில் செய்யும் அசிங்கங்கள் ...
ரோசத்தோடு கூடணியை விட்டு வந்தவர் துணிவு இருந்தால் தான் பலமாக இருக்கும் தொகுதிகளில் மட்டுமாவது தனித்து நின்று செல்வாக்கை காட்டி இருக்க வேண்டும் அதை விடுத்து தேர்தலை புறகனிபதாக அறிவித்து விட்டு ஈழா ஆதரவு மக்களிடையே நல்ல பெயரை வாங்கி கொண்டு மறைமுகமாக கட்சியினருக்கு திமுகவிருக்கு வேலை செய்ய சொல்லி உள்ளார் ...

ஈழத்தை கொன்ற காங்கிரசை விட, வஞ்சித்த கலைஞ்சரை விட கடைசி வரை இருந்து கழுத்தை அறுக்கும் இவர் மகா கொடியவர் .. ஜனங்களை விழித்து கொள்ளுங்கள்.. இவர் சின்ன கலைஞ்சர் .. நம்புவோர் துரோகம் செய்யப்படுவர்