நண்பர் ஒருவர் ஜக்கி வாசுதேவை உண்மையான துறவி என்றும் .. "அத்தனைக்கும் ஆசைபடு" என்பது மிகவும் அறிவுபூர்வமான ஒரு கருது எனவும் கூறிய பொது சில நினைவுகள் வந்து சென்றது அது உங்கள் பார்வைக்கு இங்கே சகல சவுகரியா இராஜ வாழ்க்கையை தூக்கி எரிந்து ஒரே ஆடையை மட்டும் கட்டி கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி ஆசா பாசங்களை துறந்து வந்தார் புத்தர் அவர் போதித்து என்ன?
ஆனால் ரய்பொன் கூலிங் கிளாஸ் அணிந்து கில்லெர் ஜீன்ஸ் போட்டு கொண்டு அசத்தலாக ஆனந்த விகடன் கட்டுரைக்கு வார வாரம் வித விதமா போஸ் கொடுத்த ஜாக்கி வாசுதேவ் சொன்னதை வைத்து அவர் தான் "உண்மையான துறவி "என்பது சற்று நெருடலான ஒன்று ..
ஜாக்கி வாசுதேவ் கார்பரேட் சாமியார்களில் ஒரே நபர்.. நான் அவரை எதிர்த்து பதிவதாக கோபபட வேண்டாம் ..
அவர் சிவராத்திரியன்று நடத்து விசேஷ கூட்டங்களில் கலந்து கொண்டு உள்ளேன் அதே போல் அவர் கொயமுதூரிஇல் தியான லிங்கம் பிரதிஷ்டை செய்த அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அங்கு நடபவற்றை நேரடியாக கண்ட அனுபவமும் உண்டு...
ஜாக்கி வாசுதேவ் என்பவர் பிறக்கும் பொது மகானாக பிறந்தவர் அல்லர். அவர் பழையா கால வாழ்கையை புரட்டி பார்த்தீர்கள் என்றால் சில மர்மங்கள் உண்டு .
ஜாக்கி வாசுதேவின் மனைவி பெயர் 'விஜி' எனப்படும் விஜயகுமாரி .. இவர் ஜாக்கி வாசுதேவுடன் இணைந்து ஆன்மிகம், இஷா ஆஸ்ரம பணிகளை கவனித்து வந்தார் .. திடிரென்று 1997 அம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் மர்மமான முறையில் இறந்தார் . அவர் பிரேதம் அவசர அவசரமாக விஜியின் தாய் தந்தையருக்கு கூட ஆசுவாசிக்க இடமிலாமல் இறுதி சடங்கு செய்யப்பட்டது .. அவர் தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் கசிந்தன ..
விஜியின் தந்தை, ஜக்கியின் மாமனாரும் ஆன தி.ஷ் . கங்கான தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டு அவசர் அவசரமாக இறுதி சடங்கு செய்யப்பட்டது என பெங்களூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.. பெற்ற பிள்ளையை பறிகொடுத்த தகப்பன் தன் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதையும் விஜி கொலை தான் செய்யபடுள்ளர் எனவும் அடித்து சொன்னார் .. இந்த புகாரின் அடிப்படையில் கோவை போலீசார் இஷா அஷ்ரமதுக்கு விசாரணைக்கு வந்த பொது ஜாக்கி வாசுதேவ் அவசரமாக அமெரிக்கா பறந்து விட்டார் ... ஜனவரி 23 அம் நாள் விஜி மரணமடைந்தார் .. அன்று விஜியின் பெற்றோருக்கு ஜாக்கி போன் செய்து விஜி இறந்து விட்டதாக சொல்லிவிட்டு அவர்கள் பெங்களூரில் இருந்து கோவை வரும் முன்னே சடலத்தை இறுதி சடங்கு செய்து விட்டார்.
என்ன கொடுமை இது ? பெற்ற தாய் தந்தையர் தன் மகளின் சடலத்தை பார்க்க விடாமல் இறுதி காரியம் செய்தது .. போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்ய ஆரம்பித்த பொது ஜாக்கி வாசுதேவுக்கு அதே ஆச்ரமத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அதனை விஜி தட்டி கேட்ட பொது ஏற்பட்ட தகராறினால் அவர் கொலை செய்யப்பட்டு அது தற்கொலை என ஜோடிக்க பட்டது என செய்தி கசிந்ததாக நியாபகம் ..
இந்த வழக்கின் விசாரணையின் பொது வாசுதேவ் (அப்போதையா ஜெகதீஷ்) தன் மனைவி ஒரு விதமான பிராணாயமா பயிற்சி செய்த போது மூர்ச்சையாகி விட்டார் எனவும் அது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என கூறி அவர் பண பலம் மற்றும் மேலிடது செல்வாக்கால் அந்த புகார் கிடப்பில் போடப்பட்டது ..
ஆகவே நண்பர்களே இந்த ஜக்கி வாசுதேவின் மறுபக்கம், இளமை காலம் சற்று மர்மமானது .. உணர்ச்சி வசப்பட்டு அனைவரையும் உண்மையான துறவி என்று புகழாரம் சூடாதீர்கள் ..
என்னை பொறுத்த வரையில் வாழும் வரை மாசற்ற வைரமாக வைராக்கியமாக வாழ்ந்து மறைந்த விவேகானந்தரை துறவி என்றால் தகும் .. புத்தரை உண்மையான துறவி என்றால் தகும் .. மகாவீரரை சொன்னால் தகும் , வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய சன்மார்க்க நெறி வள்ளலாரை உண்மையான துறவி என்றால் தகும் ..
அதனி விட்டு விட்டு இந்த கில்லர் ஜீன்ஸ் ஜாக்கி வாசுதேவ் யோகா,தியானத்தை கற்று அதனை போதிக்கிறேன் என்று கூறி கொள்ளும் உலகம் சுற்றி வரும் ஒரு கார்பரேட் சாமியார் அவ்வளவு தான் .... ஜாக்கி வாசுதேவின் மாமனாருக்கு தன் மகளின் மரணத்தில் ஜாக்கி மீது உள்ள சந்தேகம் மூன்றாம் மனிதர்களான நமக்கும் இருக்குமல்லவா ? யார் அறிவார் அந்த ரகசியம் ....
இவரை போல தான் வாழும் கலை பண்டித ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் இவரது வாழும் கலை உறுப்பினர்கள் சமீபத்தில் நடந்த இலங்கை ina படுகொலைக்கு எதிராக போது மக்கள் நடத்திய ஒரு அமைதி பேரணிக்கு ரவி சங்கரின் பெரியா பெரியா புகைப்படங்கள் பதித்த விளம்பர பாதுகைகளை கொண்டு வந்து ஊர்வலத்தில் அவருக்கு விள்ளம்பரம் தேடி கொண்டு இருந்தனர் .. அந்த பேரணியோ அங்கு சாவும் தமிழ்ர்களை நினைத்து வருந்தி நடைபெறும் மவுன பேரணி .. எந்த ஒரு கட்சியை சேர்ந்தவர்களும் எந்த ஒரு கட்சி கோடி, தலைவர் படத்தை ஏந்தி வராத சூழ்நிலையில் இவர்கள் ரவிசங்கரின் விளம்பர படங்களை கொண்டு வந்து அதனை ஒரு விளம்பர யுக்தி ஆகி கொண்டனர் ...
ஆன்மிகத்தை நம்புவோம், உண்மையான ஆன்மீக ஆர்வலர்களை மதிப்போம் .. தனி மனித வழிபாட்டை தவிர்ப்போம் .. விவேகானந்தரை தவிர்த்து வேறு யாரையாவது கலிகால துறவி என்றால் அது ஏற்புடையது ஆகாது