Sunday, March 15, 2009

குண்டு காயத்துடன் கருவிலே சிதைவதும், பிறத்தலோ என் விதி , ஏனடி தாயே ?







குண்டு காயத்துடன் கருவிலே சிதைவதும், பிறத்தலோ என் விதி , ஏனடி தாயே ?

ஈழத்தில் இலங்கை இனவெறி படை பொது மக்கள் மீது வீசிய குண்டின் காரணத்தால் கருவில் இரு-ந்த குழ-ந்தை கால் சிதைக்கபட்டு தாயும் கொல்லபட்ட கொடுமை .. இன்னொரு குழ-ந்தை பிறக்கும் போதே கருவில் குண்டின் துகள் தாக்கப்பட்டு இருக்கும் கொடுமை .. இவர்களும் தீவிரவாதியா!! பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என சொல்லி கொண்டு இனபடுகொலை பன்னுவதற்கு இதை விட பெரிய ஆதாரம் வேண்டுமா?




தமிழனாய் பிறந்ததற்கு இங்கு ஒவொருவரும் பாவப்பட்ட ஜென்மங்கள் .. தமிழின் குரல்வளை அருக்கபட்டுவிட்ட நிலையில் அதற்கு கத்தி தீட்டி கொடுத்த , இன்னும் கொடுக்கும் ஈன பெருமை இங்கு கழகங்களுக்கு , தமிழின துரோகிக்கும் உண்டு ..

ஈழ்த்தில் மடியும் தொப்புள் கொடி உறவுகளை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் தங்கள் சுய லாபங்களுக்கு மீண்டும் ஐந்து ஆண்டுகள் நாட்டை சுரண்ட கூட்டணி அமைக்க அழையும் சுயநலவாதிகளே இந்த பிறந்த குழந்தைக்கு உங்கள் பதில் என்ன ?

ஜனநாயகம் பேசி திரயும் போராளி எதிர்ப்பு மக்களே இந்த பிஞ்சு தீவிரவாதியா ?

உலகமே , ஐ.நாவே ராஜபக்சேவின் விருந்தை உண்டு மகிழுந்து இன படுகொலையை கண்டுகொள்ளாமல் முகத்தை திருப்பும் அதிகாரிகளே இந்த பிஞ்சுக்கு உங்கள் பதில் என்ன ?

போரில் இது சர்வசாதாரணம் என விருந்துண்ண செல்வீர்களா ?

இறைவன் என்பவரும் உலகில் இனம் புரியாத தெய்வீக சக்தி இன்னும் இருக்கிறதா ? இந்த பிஞ்சுகள் செய்த பாவமென்ன , கருவிலே குண்டடி பட்டு கால் சிதைந்து போக விட்ட நீயும் தெய்வமா ? பிறக்கும் பொது குண்டின் துகள் துளைத்து பிறத்தல் தான் விதியா ?

No comments:

Post a Comment