Tuesday, March 2, 2010

பரம காம நித்திரையானந்தர் சல்லாப வீடியோ இணைப்பு



பரம கம்ச நித்யானந்தர் என்னும் இந்த ஆன்மிக கழிவு ஒரு அம்மன் அவதாரமாக பீலா விட்டுக் கொண்டு திரிந்த இந்த ஆன்மிக காம இளம் நரியின் முகம் கிழிந்து விட்டது. தென் இந்தியாவின் மிகப் பெரிய தொலைகாட்சி நிறுவனமான சன் இந்த காமச்சாமயும்ி ஒரு நடிகையும் கொஞ்சி குழாவும் காட்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி உள்ளது...

இப்படி சீசனுக்கு ஒரு சாமியார் காம முகம் கலைவது வாடிக்கையாகி விட்டது ஆனால் மக்கள் தான் திருந்துகிற மாதிரி தெரியவில்லை.... ஒரு சாதரண மனிதன் இது போன்ற சர்ச்சையில் சிக்குவது என்பது வேறு கதை ஆனால் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ள நித்யானந்தா காவி உடை அனைந்து தன்னை ஒரு குருவாக , பிஞ்சில் பழுத்த ஞானியாக உலகுக்கு காட்டி கொண்டு இப்படி கழிசடை வேலைகளில் ஈடுபடுவது கடுமையான கண்டனத்துக்கு உள்ளாக வேண்டியதும் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு மேல் விசாரணை செய்ய்ப்பட்டு இவர் ஆசிரம சொத்துக்கள் அரசு உடமையாக்கப்படுவது அவசியம்...

இன்னும் சாமியார்களை நம்பும் மனிதர்களுக்கு உலகில் பிறந்த நாய்,நரி,கழுதை என அனைத்து உயிர்களுக்கும் காமம் , இணை சேர்வது என்பது இயற்க்கை உந்துதல்... அதனை அடக்கி ஒரு ஆன்மிக உலகில் மனதை திளைக்க செய்ய அந்த காலத்தில் மனித சமுதாயத்திற்க்கு அப்பாற்பட்டு வனங்களில் குருகுலங்கள் இருந்தன... ஆனால் இன்று மக்களோடு . சிஷ்யை கோடிகள் மத்தியில் இருந்து கொண்டு தான் ஒரு முற்றும் துறந்த முனி என்னும் இது போன்ற சாமியார்களை நம்பி அவர்கள் படங்களை வீடுகளில் வைத்துக் கொண்டு வணங்கி வருபவர்கள் இனியாவது திருந்த வேண்டும்

http://www.youtube.com/watch?v=ZduB4ztdG00

No comments:

Post a Comment