Sunday, March 28, 2010

வலைப்பதிவர் வளர்ச்சியும், இணையக் குழுமங்கள் வீழ்ச்சியும்.(ஆமையும்,முயலும்)



பல ஆண்டுகளாக இணையத்தில் சமூக வலைதளங்களில் (social networking) பட்டும் படாமலும் பங்கு கொண்டு வருகிறேன்..வலைப்பதிவு (blogging) சமூக வலையமைப்புக்கு முன்னோடி என்றாலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்குட்டின் வளர்ச்சியினால் உண்டான வலைகுழுமங்கள்(orkut communities) அபிரித வளர்ச்சி பெற்றன... வலைபதிவை விட ஆர்குட் குழுமங்களில் மிக விரைவாக கருத்து பரிமாற்றங்கள் இடம்பெரும்... விவாதங்கள் அனல் பறக்கும், போலிகளும் புகுந்து சூடாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டு இருக்கும்...ஆதலால் ஆர்குட் குழுமங்கள் அதிக உறுப்பினர்கள் சேர்கையை கொண்டு இருந்தன .பல ஆர்க்குட் குழுமங்கள் வெட்டி அரட்டை அடிக்கும் இடமாக இருக்கையில் ஆர்க்குட்டில் குறிப்பிட்ட சில மட்டும் சமுதாய சிந்தனைகளுடன் அதற்க்கு அடுத்த படியாக உறுப்பினர் சந்திப்பு, சமூக சேவை என முன்னேறின...



வியக்கத்தக்க வகையில் பலர் அந்த குழுமங்களில் பங்கு கொள்ள பிரமிக்கத்தக்க வகையில் ஒரு ஆர்குட் குழுமம் ஆண்டு விழாவை சீரும் சிறப்புமாக நடத்தியது இணைய தமிழ் வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம் இணையத்தின் ஊடாக நூற்றுக் கணக்கான தமிழர்கள் ஒன்று இனைந்து வந்து ஒரு நிகழ்ச்சியை,மேடையை பகிர்ந்து கொண்டது தமிழின் அடுத்த தலைமுறை வெற்றி எனலாம்... இவ்வாறு சென்று கொண்டு இருந்த ஆர்குட் தமிழ் குழுமங்களின் கூட்டத்திற்க்கு ஒரு முறை சென்று பங்கு கொண்ட போது அந்த நிகழ்வு சென்னை மெரினா காந்தி சிலையின் பின்புறம் இருந்த ஒரு நீருற்று குழியின் அமைப்பையை மேடையாக்கி பலரும் வந்து அமர்ந்து பல்வேறு வகையான விவாதங்களை , அறிமுகங்களை தொடர்ந்து கொண்டு இருந்தனர்.. அதே சமயம் அங்கு வலை பதிவர் குழு ஒன்று வந்தது .. சுமார் நான்கு வலைப்பதிவர்கள் மட்டும் அங்கே கூடி இருந்தனர்... ஆனால் ஆர்குட் குழுமம் கூடிய இடத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குழும உறுப்பினர்கள் கூடியிருந்தனர் ...

பல ஆண்டுகளாக இருந்து வரும் வலைப் பதிவு சந்திப்பில் மிக குறைவான உறுப்பினர்களும், சில ஆண்டில் வேகம் கொண்ட ஆர்க்குட் குழும சந்திப்பில் பலரும் வந்தது சற்று வியப்பளித்தது...அப்பொது இந்த ஆர்குட் குழுமங்கள் விரைவில் பெரிய அளவில் செயல்படும் ஒரு அமைப்பாக மாறி அடுத்த தலைமுறை இனைய தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்கும் என நினைக்கையில் விழுந்தது ஒரு கல்.....

ஒரு இடத்தில் அளவிற்க்கு அதிக வளர்ச்சி தென்படுகையில் போட்டிகளும்,குழப்பங்களும் வந்து சேரும் என்பது நிதர்சனம் போல....தமிழில் முனைப்புடன் செயல்பட்ட அந்த ஆர்க்குட் குழும நிர்வாகிகள் இடையே சில கசப்புகள் எனவும், குழி பறிப்புகள் எனவும் பல விவாதங்கள் சென்றன... அந்த ஆர்க்குட் குழுமம் பரந்து பட்ட உலக தமிழர்கள் அனைவரையும் ஒரு பொதுவான இனைப்பின் மூலம் உள் இழுத்து கொண்டு வருவதில் இருந்து சற்று விலகி பெரியாரின் ஆதரவு என்பதில் முத்திரை காட்டுவதில் அதீத கவனம் கொண்டதில் ஒரு சாரார் விலகி நின்றனர்... மாறி வரும் காலங்களில் பெரியாரின் சீடர்கள் அவர் கட்சியின் தலைவர்கள் கூட மஞ்சள் துண்டு, கோயில் குட முழுக்கு காணிக்கை என நவீன பெரியாரிசம் பேசுகையில் அவர்கள் கொண்ட தீவிர பகுத்தறிவு கொள்கை சிலரை விலகி நிற்கவும், அதீத பார்பனிய எதிர்ப்பு வாக்குவாதங்கள் பிராமனர்களை விலகி செல்லவும் வழிவகுத்தன......

நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து சென்று தனியே குழுமங்களையும் அரம்பித்து விவாதங்கள் பிரிந்து சென்றன.. சிலர் நிர்வாக ஆக்ரிமிப்பும், பண கையாடல் குற்றச்சாட்டுக்களை முன்னனி ஆர்க்குட் குழும நிர்வாகிகள் மீது வைத்தனர்.இந்த சமயங்களில் அந்த குழுமம் சற்று சுனங்கியது.. இப்படி முயல் வேகத்தில் சென்று கொண்டு இருந்த ஆர்க்குட் குழுமங்கள் வளர்ச்சி ஒரு கட்டத்தில் அதன் ஆரம்ப கால செயல்பாடுகளை விட சுருதி குறைந்து சென்று கொண்டு இருக்கிறது..

ஆனால் இதற்க்கு எதிர் மறையாக இருக்கும் வலைப்பதிவர்கள் ஆமை வேகத்தில் வளர்ந்து வந்து இன்று பிரமிக்கத்தக்க வகையில் ஆர்க்குட் குழுமங்களை விட மூன்று ஆண்டுகளில் வளர்ந்து நிற்கிறார்கள்... இன்று தமிழ் வலைப்பதிவர்களுக்கு என்று ஒரு சங்கம் அமைக்கும் அளவு செயல்பாடுகள் துரித படுத்தப்பட்டுள்ளன...

இந்த சமயத்தில் இந்த பதிவை நான் இடுவதன் நோக்கம் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே முனைப்பும், செயல்திறனும் ஒரு ஆர்க்குட் குழுமத்திடம் இருந்தது.. இன்று வலை பதிவர் சங்கம்/இயக்கம்/குழுமம் அரம்பிப்பதற்காக ஆரம்ப கட்ட ஆலேஒசனைகளில் இருக்கும் வலைப்பதிவு உலக நன்பர்களுக்கு நீங்கள் தேர்ந்து எடுக்கும் நிர்வாகிகள் அனைவரும் சம அளவு ஈடுபாட்டை வலைப்பதிவு குழுமத்திற்க்கு கொடுப்பவர்களாக மிக முக்கியமாக முற்றிலும் செயல்படுபவர்களாக நிர்வகிப்பது நலம்.. உறுப்பினர் பணம் சார்ந்த விடயங்களில் ஒரு திறந்த கணக்கு வழக்குகளை அனைவரும் எந்த சமயமும் தெரிந்து கொள்ளும் வகையில் பேணுதல் நலம்... மிக மிக முக்கியமாக அந்த வலைப்பதிவு சங்கத்தின் மட்டுறுத்துனர்கள்/நிரிவாகிகளுக்கு கடும் விமர்சனங்களையும் பக்குவமாக பொருமையாக எதிர் கொள்ளும் திறமையும், நடு நிலைமையுடன் இருக்கும் ஆற்றலும் கண்டிப்பாக வேண்டும், குறிப்பாக திராவிட , பார்ப்பன தகராறுகள், மற்றும் சாதிய, கட்சி ரீதியான தாக்குதல்களை கையாண்டு நடுவு நிலை தவறாமல் இருந்தால் தான் எதிர் சாறார் விலகி செல்ல மாட்டார்கள்.. இரு வேறு கருத்து உடையவர்கள் இருந்தால் விவாதங்களும், செயல்பாடுகளும் சீராக செல்லும்,

அதே சமயம் அமையப் போகும் வலைப்பதிவர் குழுமமும், ஏற்கனவே உள்ள இணைய குழுமங்களும் ஒரு பொதுவான குடையின் கீழ் சில பரிமாற்றங்களை கொண்டு வந்தால் மட்டும் சில சமுதாய மாற்றங்களை அரசியல் ரீதியாக இணையத் தமிழர்கள் அனைவரின் ஒன்று பட்ட குரலாக வெளி உலகிற்க்கு கொண்டு செல்ல முடியும். இணையத்தில் இனைந்து உள்ள இலட்சக்கணக்கான தமிழர்களும் அவர் தம் குடும்பங்களும் ஒரு பெரிய வாக்கு வங்கி என்பதை இன்றைய அரசியல் வாதிகள், சமூக அமைப்புகள், பத்திரிக்கை , தொலைகாட்சி ,வெளி உலக மக்கள் உணர்ந்தால் மட்டுமே இணையத்தில் பதியும் தமிழர்களால் சில மாற்றங்களை , தாக்கங்களை சமுதாயத்தில் கொண்டு செல்ல முடியும்...

சாதி,மத,அதிகாரம் போதை மறந்து மொழியால் ஒன்று பட்டு எல்லை கடந்து ஒன்று பட்டு நின்றால் மட்டுமே உண்டு வாழ்வு

2 comments:

manjoorraja said...

யாகு குழுமங்கள் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை பல குழுமங்களில் உறுப்பினராகவும் ஒரு குழுமத்தை கடந்த காலத்தில் திறம்பட நடத்தியும் இருக்கிறேன் என்ற நிலையில் உங்கள் பதிவிலுள்ள அனைத்து கருத்துகளையும் ஆமோதிக்கிறேன்.

வசந்தசேனன் said...

நன்றி மஞ்சூர்

Post a Comment