Saturday, March 7, 2009
ஜக்கி வாசுதேவின் மர்மமான கடந்த காலம்
நண்பர் ஒருவர் ஜக்கி வாசுதேவை உண்மையான துறவி என்றும் .. "அத்தனைக்கும் ஆசைபடு" என்பது மிகவும் அறிவுபூர்வமான ஒரு கருது எனவும் கூறிய பொது சில நினைவுகள் வந்து சென்றது அது உங்கள் பார்வைக்கு இங்கே
சகல சவுகரியா இராஜ வாழ்க்கையை தூக்கி எரிந்து ஒரே ஆடையை மட்டும் கட்டி கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி ஆசா பாசங்களை துறந்து வந்தார் புத்தர் அவர் போதித்து என்ன?
ஆனால் ரய்பொன் கூலிங் கிளாஸ் அணிந்து கில்லெர் ஜீன்ஸ் போட்டு கொண்டு அசத்தலாக ஆனந்த விகடன் கட்டுரைக்கு வார வாரம் வித விதமா போஸ் கொடுத்த ஜாக்கி வாசுதேவ் சொன்னதை வைத்து அவர் தான் "உண்மையான துறவி "என்பது சற்று நெருடலான ஒன்று ..
ஜாக்கி வாசுதேவ் கார்பரேட் சாமியார்களில் ஒரே நபர்.. நான் அவரை எதிர்த்து பதிவதாக கோபபட வேண்டாம் ..
அவர் சிவராத்திரியன்று நடத்து விசேஷ கூட்டங்களில் கலந்து கொண்டு உள்ளேன் அதே போல் அவர் கொயமுதூரிஇல் தியான லிங்கம் பிரதிஷ்டை செய்த அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அங்கு நடபவற்றை நேரடியாக கண்ட அனுபவமும் உண்டு...
ஜாக்கி வாசுதேவ் என்பவர் பிறக்கும் பொது மகானாக பிறந்தவர் அல்லர். அவர் பழையா கால வாழ்கையை புரட்டி பார்த்தீர்கள் என்றால் சில மர்மங்கள் உண்டு .
ஜாக்கி வாசுதேவின் மனைவி பெயர் 'விஜி' எனப்படும் விஜயகுமாரி .. இவர் ஜாக்கி வாசுதேவுடன் இணைந்து ஆன்மிகம், இஷா ஆஸ்ரம பணிகளை கவனித்து வந்தார் .. திடிரென்று 1997 அம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் மர்மமான முறையில் இறந்தார் . அவர் பிரேதம் அவசர அவசரமாக விஜியின் தாய் தந்தையருக்கு கூட ஆசுவாசிக்க இடமிலாமல் இறுதி சடங்கு செய்யப்பட்டது .. அவர் தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் கசிந்தன ..
விஜியின் தந்தை, ஜக்கியின் மாமனாரும் ஆன தி.ஷ் . கங்கான தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டு அவசர் அவசரமாக இறுதி சடங்கு செய்யப்பட்டது என பெங்களூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.. பெற்ற பிள்ளையை பறிகொடுத்த தகப்பன் தன் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதையும் விஜி கொலை தான் செய்யபடுள்ளர் எனவும் அடித்து சொன்னார் .. இந்த புகாரின் அடிப்படையில் கோவை போலீசார் இஷா அஷ்ரமதுக்கு விசாரணைக்கு வந்த பொது ஜாக்கி வாசுதேவ் அவசரமாக அமெரிக்கா பறந்து விட்டார் ... ஜனவரி 23 அம் நாள் விஜி மரணமடைந்தார் .. அன்று விஜியின் பெற்றோருக்கு ஜாக்கி போன் செய்து விஜி இறந்து விட்டதாக சொல்லிவிட்டு அவர்கள் பெங்களூரில் இருந்து கோவை வரும் முன்னே சடலத்தை இறுதி சடங்கு செய்து விட்டார்.
என்ன கொடுமை இது ? பெற்ற தாய் தந்தையர் தன் மகளின் சடலத்தை பார்க்க விடாமல் இறுதி காரியம் செய்தது .. போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்ய ஆரம்பித்த பொது ஜாக்கி வாசுதேவுக்கு அதே ஆச்ரமத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அதனை விஜி தட்டி கேட்ட பொது ஏற்பட்ட தகராறினால் அவர் கொலை செய்யப்பட்டு அது தற்கொலை என ஜோடிக்க பட்டது என செய்தி கசிந்ததாக நியாபகம் ..
இந்த வழக்கின் விசாரணையின் பொது வாசுதேவ் (அப்போதையா ஜெகதீஷ்) தன் மனைவி ஒரு விதமான பிராணாயமா பயிற்சி செய்த போது மூர்ச்சையாகி விட்டார் எனவும் அது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என கூறி அவர் பண பலம் மற்றும் மேலிடது செல்வாக்கால் அந்த புகார் கிடப்பில் போடப்பட்டது ..
ஆகவே நண்பர்களே இந்த ஜக்கி வாசுதேவின் மறுபக்கம், இளமை காலம் சற்று மர்மமானது .. உணர்ச்சி வசப்பட்டு அனைவரையும் உண்மையான துறவி என்று புகழாரம் சூடாதீர்கள் ..
என்னை பொறுத்த வரையில் வாழும் வரை மாசற்ற வைரமாக வைராக்கியமாக வாழ்ந்து மறைந்த விவேகானந்தரை துறவி என்றால் தகும் .. புத்தரை உண்மையான துறவி என்றால் தகும் .. மகாவீரரை சொன்னால் தகும் , வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய சன்மார்க்க நெறி வள்ளலாரை உண்மையான துறவி என்றால் தகும் ..
அதனி விட்டு விட்டு இந்த கில்லர் ஜீன்ஸ் ஜாக்கி வாசுதேவ் யோகா,தியானத்தை கற்று அதனை போதிக்கிறேன் என்று கூறி கொள்ளும் உலகம் சுற்றி வரும் ஒரு கார்பரேட் சாமியார் அவ்வளவு தான் .... ஜாக்கி வாசுதேவின் மாமனாருக்கு தன் மகளின் மரணத்தில் ஜாக்கி மீது உள்ள சந்தேகம் மூன்றாம் மனிதர்களான நமக்கும் இருக்குமல்லவா ? யார் அறிவார் அந்த ரகசியம் ....
இவரை போல தான் வாழும் கலை பண்டித ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் இவரது வாழும் கலை உறுப்பினர்கள் சமீபத்தில் நடந்த இலங்கை ina படுகொலைக்கு எதிராக போது மக்கள் நடத்திய ஒரு அமைதி பேரணிக்கு ரவி சங்கரின் பெரியா பெரியா புகைப்படங்கள் பதித்த விளம்பர பாதுகைகளை கொண்டு வந்து ஊர்வலத்தில் அவருக்கு விள்ளம்பரம் தேடி கொண்டு இருந்தனர் .. அந்த பேரணியோ அங்கு சாவும் தமிழ்ர்களை நினைத்து வருந்தி நடைபெறும் மவுன பேரணி .. எந்த ஒரு கட்சியை சேர்ந்தவர்களும் எந்த ஒரு கட்சி கோடி, தலைவர் படத்தை ஏந்தி வராத சூழ்நிலையில் இவர்கள் ரவிசங்கரின் விளம்பர படங்களை கொண்டு வந்து அதனை ஒரு விளம்பர யுக்தி ஆகி கொண்டனர் ...
ஆன்மிகத்தை நம்புவோம், உண்மையான ஆன்மீக ஆர்வலர்களை மதிப்போம் .. தனி மனித வழிபாட்டை தவிர்ப்போம் .. விவேகானந்தரை தவிர்த்து வேறு யாரையாவது கலிகால துறவி என்றால் அது ஏற்புடையது ஆகாது
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
மிகச்சரியாக சொன்னீர்கள்
தனக்கென தனியான அடையாளம் கொள்பவர் எப்படி துறவியாக முடியும்
தெளிவான பதிவுக்கு வாழ்த்துக்கள்
தோழமையுடன்
ஜீவா
thanks jeeva
kalakiteenga thala...
எந்த ஒரு உண்மையும் தெரியாமல் ஒரு ஆன்மீகவாதியை தவறாக விமர்சனம் செய்வது தவறு...........
//எந்த ஒரு உண்மையும் தெரியாமல் ஒரு ஆன்மீகவாதியை தவறாக விமர்சனம் செய்வது தவறு...........//
ராஜயோகத்தினை காசுக்கு விற்கும் எவரும் உண்மையான துறவி அல்ல!!!
//ஆன்மிகத்தை நம்புவோம், உண்மையான ஆன்மீக ஆர்வலர்களை மதிப்போம் .. தனி மனித வழிபாட்டை தவிர்ப்போம் .. விவேகானந்தரை தவிர்த்து வேறு யாரையாவது கலிகால துறவி என்றால் அது ஏற்புடையது ஆகாது//
perfect...
இது எல்லாம் 96 லயே வந்து, வெறும் வதந்திதான்னு நிரூபிக்க கூட பட்டு இருக்கு. இது மட்டும் இல்ல. அந்த ஆஷ்ரமத்து வேலில கரண்ட் வச்சி மிருகத்த எல்லாம் கொல்றாங்கன்னு கூட ஒரு வதந்தி இருந்தது.
உங்களுக்கு அவர் உண்மையானவர் இல்லைன்னு தோணிச்சுன்னா எனக்கு அதுல ஒன்னும் கருத்து இல்ல. ஆனா அவரோட பிம்பத்த நீங்க உடைக்கற முறைல எனக்கு உடன்பாடு இல்ல.
அவங்க செயல் முழு வியாபாரம் ஆயிடுச்சுன்னு சொல்லுங்க. அதுல உண்மை அதிகம். ஆனா பாசிடிவ் சைடுன்னு பாத்தீங்கனா ஜாதி, மத வேறுபாடு எல்லாம் கிடையாது. நெகடிவ்ன்னு பாத்தீங்கன்னா பணம்.
அதுல யோகா படிச்சுட்டு வந்து "கா" "கா" ன்னு கத்தற மக்கள் இருக்காங்களே ! யப்பா, அதுக்காகவே நீங்க சொல்றதுக்கு எல்லாம் எஸ் சொல்லலாம்ன்னு பாத்தேன். பட் மனசு இடம் கொடுக்கல.
add Osho in vivekanandar list...
சொல்லியிருக்கற விஷயம் உண்மைன்னா ரொம்பக் கேவலம்... ஆனா இப்ப இருக்கற எல்லா கார்பொரேட் / ரீடெயில் சாமியார்கள் எல்லாருக்கும் ஒரு இருட்டான பக்கம் இருக்குங்கறது உண்மை.... எப்பிடியோ போகட்டும். நரி வலமோ இடமோ நம்மளை கடிக்காம போனா சரி !!
thanks for starting this thread. i would like to know more about these things, and with your permission i may want to quote some of them in my blog. keep writing.
சிந்தனையைத் தூண்டும் நல்லதொரு பதிவு.. வாழ்த்துகள்..
Hi,
He does not ask you to follow him or ask you to come to his place. If you trust him, trust and believe. This shows your ignorance. Change your attitude and see the world with truth.
///i would like to know more about these things, and with your permission i may want to quote some of them in my blog. keep writing
Thanks sir, No issues
//////ஆனா அவரோட பிம்பத்த நீங்க உடைக்கற முறைல எனக்கு உடன்பாடு இல்ல.
இது யார் பிம்பத்தையும் மிகை படுத்தி சேதப்படுத்த அல்ல .. நன்றாக படியுங்கள் அவரை எதிர்த்து ஒன்றும் பதியவில்லை ..
காலத்தால் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட அந்த பெரியவரின் மாமனார் கொடுத்த புகாரை மறு பதிவு செய்து உள்ளேன் .. எதுவும் புதிதானது அல்ல ... இந்த விவகாரத்தை பற்றி நீங்களும் நானும் அறிந்து உள்ளதை விட தன் மகளை பறிகொடுத்த அந்த தந்தை சற்றாவது அறிந்து இருப்பார் ..
இது ஒரு வேலை தவறான புகாராகவும் இருக்கலாம் ஆனால் அதில் சில உண்மை வெளிவராமல் இருக்கலாம் .. பொது வாழ்வில் இருப்பவர் அனைவரின் மீதும் சந்தேக கரை பல வடிவங்களில் விழும் அதற்கு இந்த பெரியவரும் விதி விலக்கல்ல
தன்னை சாமியார், குரு என்று சொல்லி கொள்பவர்கள் அனைவரும் மனம் பிறழ்ந்தவர்கள்.
ப்ணத்துக்காகவும்,புகழுக்காகவும் இவர்கள் எதை வேண்டுமானலும் செய்வார்கள்.
பிரேமாநந்தாவையே இன்னும் நம்புகிறார்களும், இவர்களை என்ன செய்வது............
///என்னை பொறுத்த வரையில் வாழும் வரை மாசற்ற வைரமாக வைராக்கியமாக வாழ்ந்து மறைந்த விவேகானந்தரை துறவி என்றால் தகும் .. புத்தரை உண்மையான துறவி என்றால் தகும் .. மகாவீரரை சொன்னால் தகும் , வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய சன்மார்க்க நெறி வள்ளலாரை உண்மையான துறவி என்றால் தகும் ..
////
பகவான் ரமணமகரிசியை விட்டுவிட்டீர்களே
அது சரி உயிரோடு இருந்த இயேசுவ சிலுவைல அடிச்சிட்டு அப்பரம் தேவ மைந்தன்னு சொன்னாங்க..
புத்தர் உயிரோடு இருந்தப்ப அவர அதிகம் பேரு பின்பற்ற நினைக்கல.
அது மாதிரி பக்கத்துல கடவுளே வந்தாலும் சந்தேகப்படத்தான் தோனும்.
அதுல தப்பு இல்ல..
ஆன முழுசா எதைப்பத்தியும் தெரியுமா.
கருத்து தெரிவிக்கறது சரியில்ல.
உன்னை பற்றி உனக்கு என்ன தெரியும் .உன்னை பற்றிய அக்கரை உனக்கு இல்லாத போது அடுத்தவரை பற்றிய அக்கரை கொண்ட நீங்கள் தான் உண்மையான துறவி .
//
உன்னை பற்றி உனக்கு என்ன தெரியும் .உன்னை பற்றிய அக்கரை உனக்கு இல்லாத போது அடுத்தவரை பற்றிய அக்கரை கொண்ட நீங்கள் தான் உண்மையான துறவி
//
கலக்கல்....
//
உன்னை பற்றி உனக்கு என்ன தெரியும் .உன்னை பற்றிய அக்கரை உனக்கு இல்லாத போது அடுத்தவரை பற்றிய அக்கரை கொண்ட நீங்கள் தான் உண்மையான துறவி
//
கலக்கல்....
////உன்னை பற்றி உனக்கு என்ன தெரியும் .உன்னை பற்றிய அக்கரை உனக்கு இல்லாத போது அடுத்தவரை பற்றிய அக்கரை கொண்ட நீங்கள் தான் உண்மையான துறவி
நன்றி.. அப்படி ஒரு வேலை நான் துறவி என நீங்கள் சொன்னால் சத்தியமாக என்னை 'சத்குரூ' என்று நானே சொல்லி கொள்ள மாட்டேன் .. ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரி மலைக்கு செல்லும் போது கூட கடும் விரதம், உடைகள் முதல் பலனவ்றில் சகல கட்டுப்பாடுகளுடன் சராசரி மனிதர்கள் இருக்கும் போது .. காலனி ஏதும் இல்லாமல் தன் ஊனை வருத்தி உலகை அறிய முற்படுகையில் .. வூட்லண்ட்ஸ் ஷூ அணித்து வளம் வரும் இந்த பெரியவர் எந்த அடிப்படையில் வார பத்திரிகையில் கட்டுரை எழுதுகிறார் அல்லது எவரை போல பல கார்பரேட் சாமியார்கள் எழுதுகிறார்கள் என தெரியவில்லை .. இவர்களே கட்டணம் செல்லுதி இரண்டு பக்கத்திற்கு கட்டுரை எழுதுவார்கள் என நினைக்கிறன் ..
இவர்களே கட்டணம் செல்லுதி இரண்டு பக்கத்திற்கு கட்டுரை எழுதுவார்கள் என நினைக்கிறன் ..
ரொம்ப சரியாக சொன்னீர்கள் .கடவுளை தேடுவது காசுக்கென்றும் அதற்கு வழி காட்ட ஆட்கள் தேவை என்ற நோக்கம் வந்த பிறகு இத்தகையோர் பெருகுவதை தவிர்க்க முடியாது
சரியாக சொன்னீர்கள்...
காவி வேட்டி கட்டியவநேல்லாம் துறவியல்ல
காமத்தையும்,காசு ஆசையையும் துறந்தவனே உண்மையான துறவி
இவர்களெல்லாம் போலிகள்
பணம் வைத்திருப்பவர்களிடமிருந்து பணம் பண்ணுபவர்கள்.
காவி வேட்டி கட்டியவநேல்லாம் துறவியல்ல
காமத்தையும்,காசு ஆசையையும் துறந்தவனே உண்மையான துறவி
இவர்களெல்லாம் போலிகள்
பணம் வைத்திருப்பவர்களிடமிருந்து பணம் பண்ணுபவர்கள்.
எனக்கு இவர்களைப் பற்றி வேறு மாதிரி கருத்து உண்டு.இந்த Corporate மற்றும் சொகுசு சாமியார்கள்
நமக்க நிறைய விஷயங்களைப் போதித்து “இப்படி இரு...அப்படி இரு..மனதை கட்டு..தளராதே” என்று
போதிக்கிறார்கள் ஒரு AC பீடத்தில் உட்கார்ந்துக்கொண்டு. நான் இவர்களை ஒரு நான்கு
மாதம் ஒரு சமசாரியாக பின் வருவனவற்றைச் செய்ய வேண்டும்:-
1.ரேஷன் கார்டு வாங்க அலைய வேண்டும்
2.8.45 a.m.70D பஸ்(சாதா) பிடித்து தாம்பரம் செல்ல வேண்டும்(ஒரு வாரம்)
3.7வது படிக்கும் ஒருவனுக்கு English & Maths சொல்லிக் கொடுக்க வேண்டும்
4.Factoryயில் zero error production காட்ட வேண்டும் (150 தொழிலாளர்களை இவர் கண்ட்ரோலில்)
5.நடக்கும் லாயர் x போலீஸ் யுத்தத்தில் இவர் ஒரு போலீஸ்காரரின் மனைவி
6.ஊருக்குப் போகும் சமயத்தில் அரசியல் ஊர்வல டிராபிக் ஜாமில் மாட்ட வேண்டும்
7.IT job.recession.வீட்டுக் கடன் 5 லட்சம்.வேலைஇன்னிக்கோ நாளைக்கோ பணால்
8. இது மாதிரி நிறைய
சந்யாசம் , துறவறம் இரண்டின் அடிப்படை சில தியாகங்களை கண்டிப்பாக செய்வது..
பந்தம் அறுத்தல் மிக முக்கியமானது..
மனிதன் மனதை அடக்கி ஒரு நேர் வழிக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.. இந்த உலகில் பிற பொருட்களில் இருந்து பிடிப்பு அறுபட ஒன்று அவற்றை உணர கூடாது ... இனிப்பான லட்டை கண்டால் பசித்திருக்கும் அனைவருக்கும் ஆசை வரும் இது மனம் அல்ல தானை உடலில் ஊரும் காரணிகள் அதன் சுவையை ரசிக்க தூன்றும்.. அந்த பந்தம் அறுக்கும் முறைக்கு எளிய தீர்வு தான் சந்யாசம் எனப்படும் கானகம் அல்லது குரு மட பயிற்சி ... மிகவும் கட்டு கோப்பான வாழ்கை முறைகளை போதிப்பது ... மக்கலோடோ மக்களாக அவர்கள் போலவே ஒரு சனியாசியும் வாழ்தல் அவரும் ஈர்கபடுவார் ஏதாவது ஒரு காரணியின் உந்துதலால் ..
மற்றது உடை .. உடை என்பது உடலை மாசுகளில் இருந்தும், தட்ப வெட்பங்களிலும், இருந்து மானம் காக்கவும் .. இதற்கு நீ காவி கூட இல்லை கிடைத்த சிறு பணத்தில் எளிமையான உடைகளை கொள்ளலாம் . பந்தம் அறுபவர்களுக்கு எதற்கு பகட்டான உடை .. ஜாக்கி அணிந்து உள்ள ஜீன்ஸ் விலை மட்டும் நாலாயிரம் வரும் , அவர் அணிந்த தொப்பி மாட்டும் ஆயிரம் தொடும் , கண்டிப்பாக அந்த கண்ணாடி ஐந்து ஆயிரம் தொடும் .. இதற்கான பணம் எங்கே இருந்து வந்தது ? உடலில் இருக்கும் பகட்டு உள்ளத்திற்கும் வரும் நண்பரே ..
" மனதை தூய்மையாக வைத்து உள்ளேன் ஆகவே நான் துறவி " என்றால் அது ஏற்புடையது அல்ல ... சம்சாரி கூட பந்தம் அறுத்து நிற்க வேண்டும் விரத காலங்களில் .. இன்று முருகனுக்கும், ஐயப்பனுக்கும் விரத மாலை அணித்து வரும் பலரிடம் கேட்டு பாருங்கள். புதிதாக திருமணம் ஆயி இருந்தாலும் மனைவியை தொட மாட்டார்கள் அவர்கள் "மனதை மட்டும் தூய்மையாக" வைத்து உள்ளேன் என தினமும் மனைவியுடன் சம்சாரத்தில் ஈடுபட்டு மறுநாள் இறைவனை துதிடால் அது முழுமையான விரதம் இல்லை ..
துறவிகள் துறக்க வேண்டும், எதைனையாவது ஒன்றை துறக்க வேண்டும் .. லவ்ளீக வாழ்க்கை அல்லது சம்சாரியாக வாழ்வதை .அது இந்து கலாசார விதி . . சகல பாகியங்களுடன் வாழ்பவர்கள் அவர்கள் தன்னை துறவி என்பதை விட ஒரு ஆசான் என நிறுத்தி கொள்ள வேண்டும்
துறவி என்பதுக்கு ஒரு தெரிந்த definition வைத்து கொண்டு பார்த்தால் தப்பாகதான் தெரியும்.
சில நால் அவர் வகுப்போ,அவர் அருகில் இருந்து
பர்ர்த்தால் சரியான முடிவுக்கு வரலாம்.
கற்றது கை மன் அளவு.
நமக்கு இருக்கும் intellect வைத்து முடிவு செய்வது
நீல கண்ணாடியில் உலகை பார்ப்பது போல்.......
We can't judge people who live, i don't how people are judging people who are no more....
தனிமனித சாமியார் அவர்களுக்கு சேர்ந்த மிகப் பெரிய சொத்து இவையெல்லாம் என்றாவது ஒரு நாள் வெளியே வந்துவிடும்.
//சதீசு குமார் said...
சிந்தனையைத் தூண்டும் நல்லதொரு பதிவு.. வாழ்த்துகள்..
//
சாமியார்கள் எழுதினாலும் சிந்தனையை தூண்டுதுங்கிறிங்க, சாமியாரைப் பற்றி எழுதினாலும் சிந்தனையைத் தூண்டுதுங்கிறிங்க. :)
அதனிகும் ஆசபடுன்னு அவரு அவருக்கே சொல்லிகிரருப்பா ...இன்னாட இந்த மனுஷன் டிபிபிறேண்ட கீராநேன்னு சனங்களுக்கு ஒரு ஜெர்க் கொடுக்கதாம்ப இந்த தில்ல லங்கடிலாம் ...அது இன்னா எய்வோ தெரில ,எந்த மதம் / சாமியார் விஷயமா இருந்தாலும் ,அத்த அப்படியே நம்புற கூட்டம் சொல்ற ஒரே டயலாக் 'உன்ன பாலோ பண்ண சொன்னமா ..இல்லையில்ல அப்படின்னா மூடிகிட்டு போன்னு ' ...இவனுங்க அப்படியே அவுத்து போட்டு ஆடிட்டு , உன்ன பாக்க சொன்னமா கேட்குற அழுனி பன்னாடைங்க ...
எத்தனை ஆண்டுகள் இதுபோன்ற சாமியார்களிடம் சுற்றி திரிந்தாலும்
கடவுளை காண முடியாது.
இவர்கள் இதை செய் அதை செய் என்று பீலா விட்டுக்கொண்டு பிழைப்பை நடத்தி கொண்டிருப்பார்கள் அவ்ளவுதான்
அவர்களின் பேச்சுக்கு, செயலுக்கு அடிமையாகி சுய புத்தியை இழப்பதுதான் மிச்சம்
அவர்கள் இவ்வுலகை விட்டு போன பிறகு அவர்களின் படத்திற்கு, சிலைக்கு பூஜை புனஸ்காரம் என்றுதான் போய் கொண்டிருக்கும்
உண்மையில் கடவுளை காண வேண்டும் என்று எண்ணமிருந்தால்
தனக்குள்ளே தான் தேடவேண்டும் என்று கடவுளை கண்ட மகான்கள் ஏற்க்கெனவே எழுதிவிட்டு சென்றிருப்பதை கருத்தில் கொண்டு நமக்குள்ளே அவனை தேடினால் உண்மை விளங்கும்
அதை விடுத்து கூட்டம் சேர்க்கும் இது போன்ற சாமியார்களிடம் சென்றால் ஆயுளில் பெரும்பகுதி வீணாவதுடன் பயன் ஒன்றும் கிடைக்கபோவதில்லை..
விவேகானந்தருக்கு மறுபக்கம் இல்லையா... :)
எது எப்படியிருந்தாலும் முடிவெடுக்க வேண்டியது தனி மனிதர்களின் முடிவுகள்தான்.
இப்ப எல்லாம் சாமியார் ஆவுறது பிஸ்னஸ்.. நீங்க கூட சாமியார் ஆவலாம் நாங்க டிப்ஸ் எல்லாம் குடுத்து இருக்கோமுல்ல :)..
http://santhoshpakkangal.blogspot.com/2009/02/blog-post_24.html
kevalamana karthu
துறவு, விரதம் முருகன்,ஐயப்பன்,போன்ற உருவ
வழிபாடு நிலைகளில் இருந்து மேலே வாருங்கள்,
யோக முறைகளில் ஈடுபட்டு அனுபவம் பெறுங்கள்,
ஜக்கியை ஆசானகவே பாருங்கள், அவர் ஆசானாக இருந்தாலும், நாம் மேலும் உயர்வடைய அவர் கருத்தில் எது பொருத்தம் என்று பார்த்து கடைபிடியுங்கள்.
அவரிடம் உள்ள நல்லதை பாருங்கள். கெட்டவை உண்மையா? பொய்யா? என ஆராய்வதில் பெரிய பலன் ஏதும் இல்லை.
நம் கண்ணுக்கு நல்லவை அதிகமாக தெரிவது நமக்கு நலம்தானே!!
வணக்கம்
வேறு ஒரு ப்ளாக் மூலம் உங்கள் இடுகையை படிக்க நேர்ந்தது. நன்றி
முதலில் நீங்கள் செய்ய முயற்சித்து உள்ளது குருடர்கள் யானையை தடவி பார்ப்பது போல் உள்ளது. அதாவது ஆன்மிக வாதி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நீங்கள் எப்படி முடிவு செய்யலாம். சாமியார்கள் என்பது வேறு. ஆனால் அவர் தன்னை ஒரு சாமியார் என்று சொல்லிக்கொள்ளவில்லையே.
மனிதர்களுக்கு பலவிதமான உடல் நோய் மற்றும் மன நோய் . எல்லாம் தானே தேடி கொள்வது . அவர் என்ன சொல்றார் இவ்வளவு கஷ்டப்பட தேவை இல்லன்னு .
அதை புரிஞ்சுக்காம , அவர் இப்படி டிரஸ் போட்ற்றர்னு அப்படி கார்ல போறார்னு சொல்றது ....?
அவர் அப்பா பெரிய பணக்காரர் , அவர் அனுபவிக்கிறார், உங்களுக்கு சேவை செய்ய வந்தா கோவணம்தான் கட்டனுமா ...?
முதலில் ஒரு இஷா யோகா கிளாஸ் பொய் பாருங்க . சொல்ற கருத்துக்களை கொடுக்கிற பயிற்சிகளைய வாழ்க்கையில் கடை பிடித்து பாருங்க நல்ல இருந்தா வச்சுகங்க இல்லாட்டி விட்ருங்க ஒன்னும் கட்டாயம் இல்லை.
மற்ற சாமியார்கள் மாதிரி சத்குரு எங்கேயோ உட்கார்ந்துட்டு ஆசி வழங்குறவர் இல்லை , அவர் சொல்றது எல்லாம் நான் என்னை உணர்ந்திட்ட மாதிரி நீங்களும் உங்களை உணரனும் அவ்வளவுதான் ,
மிக சாதரணமாக இஷா ஆசிரமத்தில் நீகள் அவரை அணுகிவிட முடியும், எங்களுடன் தினமும் பந்து விளையாடுவர்.
அவருடைய அணுகுமுறை ஒரு மனிதன் தன்னை உணர்வதற்கு இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்வதுதான் ஒரே வழி.
பணம் , கடவுள் மற்றும் வாழ்க்கை பற்றிய சத்குருவின் சிறு கண்ணோட்டத்திற்கு
http://www.ishafoundation.org/news/columns/ergo/Ergo_29Aug2008.pdf
http://www.ishafoundation.org/news/columns/RotaryNews/RN_Nov2008.pdf
http://www.ishafoundation.org/Newsletter/Create-a-Vision-for-Life-Get-What-You-Want.isha
kadavulai marandhdhal............
அவர் எப்ப உங்க கிட்ட நான் சாமியார்னு சொன்னார் இல்லை எந்த புக்லயாவது நான் ஒரு சாமியார் அப்படின்னு சொல்லிருகரா..............
அவர் ஒரு சாமியாரா இருந்த உங்களுக்கு என்ன இல்லை அவர் சாமியாரா இல்லேன்னா உங்களுக்கு என்ன........
அவர் ஒரு TOOL உன்கிட்ட தராரு உனக்கு அது use ஆச்சுனா வச்சுக்க இல்லேன்னா விட்டுரு..........
அத விட்டுட்டு அவர் சாமியாரா ஜீன்ஸ் போடுரார அப்படின்னு ஆராய்ச்சி உனக்கு எதுக்கு.........
You are Correct vicky
ஜாக்கி வாசுதேவ் கடமையை செய், பயனை எதிர்பார்க்கதே, எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. என்று கூறுவதாக அவரது சிஷ்யன், என் நண்பன் கூறுவது உண்டு. ஆனால் அது தவறு.
எதிரும் புதிரும் (பொழிவு-1)
ஆன்மிகம் அறிவியல் என்ற தலைப்பில் பெரியார் நூலக வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் (23-01-2014) பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை
கடமையை செய், பயனை எதிர்பார்க்கதே
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
இது கீதையில் இல்லேவே இல்லை. இன்டர்நெட் முழுவதும் தேடித் பார்த்து விட்டோம். உங்களது கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பொய் சொல்லி, இந்து மதத்தை நாம் வளர்க்க வேண்டாம்.
பார்க்க : http://subavee-blog.blogspot.in/2014/03/1.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+blogspot/FGESw+%28%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%29
காப்பி, பேஸ்ட் செய்து பார்க்கவும். நன்றி. உங்கள் சகோதரி
Post a Comment