Saturday, March 7, 2009

அகோரி சாதுக்கள் பிணம் தின்னும் காட்சிகள்!



அகோரி சாதுக்கள் - சிவனின் மைந்தர்கள் என கூறி கொண்டு கங்கை நதியின் இடுகாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் .. இவர்களை பற்றி இவர்கள் தான்தோன்றி தனமாக சுற்றி கொண்டு இருப்பதாய் "நான் கடவுள் "படத்தை பார்த்தவர்கள் அறிந்து இருப்பார் . ஆனால் அந்த படத்தில் சொல்லாத சில விஷயமும் உண்டு அதனை தெரிந்து கொண்டால் தான் நீங்கள் அகொரியின் வாழ்கையை பற்றி முழுதும் அறிந்த நிறைவு உண்டு ..

இந்த அகோரிகள் இடுகாடுகளில் எரியும் பிணத்தை எடுத்து அதன் மாமிசத்தை உண்பவர்கள் .. காசியில் எரித்தால் நேரடி மோட்சம் என்பதும் அதுவும் அந்த சடலம் எரியும் பொது இது போன்ற அகோரி சாமியார் தேர்ந்தெடுத்து பிணத்தை உண்டல் அது மேலும் சிறப்பு எனவும் ஒரு மூட நம்பிக்கை மக்களிடையே உள்ளது ...

இந்த அகோரி சாமியார்கள் கஞ்சா அடிப்பது , சாராயம் குடிப்பது என்று எல்லா தீயபழக்க வழக்கங்களை சிவனின் பெயரை சொல்லி செய்கிறார்கள் .. அது சரி இவர்கள் இப்படி ஆடை களைந்து எதன் மீதும் பிடிப்பு அற்று திரிவதால் இவர்களை முற்றும் துறந்தவர்கள் என ஒரு சாரார் நம்பி வணகுவதை காண்கிறோம் .

அது சரி இந்த அகோரி சாதுகளுக்கு உணர்ச்சிகள் இருக்காதா ?

கஞ்சாவையும்,மதுவையும் சில சமயம் பிணத்தையும் உண்ணும் இவர்களுக்கு சராசரி மனிதனை போல காமத்தின் உணர்வகளும் கொப்பளிகாதா ?

அவர்கள் காம வேட்கையை தனிபதற்கும் படிபறிவில்லாத ஒரு சிலர் ஒரு வித படையலை செய்கின்றனர் ..

அதாவது இந்த அகோரிகள் சுத்தம் அசுத்தம் என எதனையும் பிரித்து பார்ப்பதில்லை நான் இந்த விஷயத்தை பற்றி துலாவிய பொது சில அடித்தட்டு மக்கள் குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் மாதவிடாய் காலங்களில் கழிவுகள் வெளியேறும் பொது இந்த அகோரி சாதுக்களிடம் உடல்உறவு கொள்கிறார்களாம் .. இப்படி உறவு கொள்வதனால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம் .. என்ன ஒரு மோசமான நம்பிக்கை !!

இந்த காணொளி காட்சியில் ஒரு அகோரி தன் வாழ்கையை பற்றி விளக்கி கடைசியில் பிணத்தின் மாமிசத்தை சுட சுட சிதையில் இருந்து எடுத்து சுவைக்கிறார்

http://www.youtube.com/watch?v=44r6McYybvI

இது மிக மோசமானது

http://www.hotklix.com/?ref=link/390418

கங்கை நதியில் மிதக்கும் பிணத்தை இழுத்து வந்து ஆசிரமத்தில் வைத்து பூஜித்து அதனை வெட்டி ஒரு சடங்காக உண்ணுகிறார்

இந்து மதம் பெரும் புதிரானது .. ஒரு புறம் இது போன்ற அகோரி சாதுக்கள் மறுபுறம் கார்பரேட் சாதுக்கள் ..

9 comments:

kankaatchi.blogspot.com said...

பிணங்களை எது தின்னும்?
நாய்கள்,நரிகள், பிற மிருகங்களை உணவாக கொள்ளும், சிங்கம் புலி முதலியவை, மலைப்பாம்பு, முதலை, சுறாமீன்கள்,கழுகு, போன்ற பறப்பன போன்றவை பிணங்களை தின்னும்.
ஒரு மனிதன் பிணத்தை தின்கிறான் என்றால் அவன் மனிதனே அல்ல
அவன் மனித உருவில் உள்ள ஒரு மிருகம்
மிருகத்திற்கு என்ன மதிப்பு
ஒன்று மனிதர்கள் இல்லாத காட்டில் கிடக்கவேண்டும் இல்லையெனில் மிருக காட்சி சாலைகளில் கூண்டுகளில் அடைக்கப்படவேண்டும்.
அவர்களை போய் சாதுக்கள் என்றும் அவர்கள் வணங்கப்படவேன்டியவர்கள் என்பதெல்லாம் மக்களின் மூட நம்பிக்கைகளின் உச்ச கட்டம்.
இது எப்படி இருக்கிறதென்றால் ஜடாமுடி மற்றும் தாடி வைத்தவரெல்லாம் சித்தர்கள் என்று நம்பி இன்று தமிழ்நாட்டில் மோசம் போய்க்கொண்டிருக்கிறார்கள்
அவர்களும் திருந்தமாட்டார்கள்.இவர்களையும் திருத்தமுடியாது.
இதுபோன்ற கணக்கற்ற மூட பழக்க வழக்கங்கள் தமிழ் நாட்டிலும், தமிழ் மக்களிடையேயும் ஏராளமாக வெவ்வேறு வடிவில் இருக்கிறது.
சாமி சிலைகளை கடவுளாக வணங்கும் இந்து மக்களை கிண்டல் செய்து போராடிய பெரியாரின் சிலையை பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய நாட்களில் மாலை போட்டு வணங்கும் நாள் தவிர மற்ற நாட்களில் தமிழ்நாட்டில் நிலவி வரும் கணக்கற்ற மூட பழக்கங்கள் நடைபெறும் இடத்திற்கு பெரியாரின் கருப்பு படை சென்று முகாமிட்டு அவர்களை திருத்தினால் தமிழ்நாடு உருப்படும்.
தமிழ் காட்டுமிராண்டி baashai என்றார் பெரியார்.
அவர் சொன்னது சரி என்று தமிழர்கள் நிரூபித்துவிட்டார்கள். எப்படி?
படா பெஜாராயிருக்கு,ஊதிகினு போச்சு, இஸ்துகினு போச்சு,
கலைவாணர் ஏற்க்கெனவே தன்னுடைய திரைபடங்களில் அறிமுகபடுத்தியிருப்பதை பார்ர்த்து மீதியை தெரிந்து கொள்ளவும்
தமிழர்கள் காட்டுமிராண்டிகள். மிருகங்களை போல் எருமைமாட்டை வெட்டி, ஆடுகளை வெட்டி,கோழிகளை வெட்டி நேர்த்தி கடன் என்று சொல்லி அப்படியே பச்சை ரத்தத்தை குடிக்கிறார்கள்
தலையில் தேங்காயை போட்டு உடைத்து கொள்ளுகிறார்கள்,
மண்ணை சோறு போல் தின்கிறார்கள்,கத்தியால் உடம்பில் கீரிகொள்கிறார்கள்
அன்பே சிவம் என்று திருமூலர் சொன்ன நாட்டில் இன்று அன்பில்லாமல் அரக்கத்தனமான செயல்கள்தான் நடந்துகொண்டிருக்கின்றன. .
கருப்பு சட்டை போட்டுகொண்டு கத்திவிட்டு சென்றால் மக்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு கோஷமிட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்
ஒவ்வொரு பகுதியில் நிலவும் மூட நம்பிக்கைகளை அகற்றி மக்களை மக்களாக வாழ செய்தால் மட்டும் பெரியாரின் ஆத்மா சாந்தியடையும்.

அகோரி said...

அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு. இவர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் அஹோரிகள் எனவும் சொல்லலாம். காலத்தை கடந்த
நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாக சன்யாசிகள், அகோரிகள் என கூறிவது வருந்த தக்கது.



யோகிகளின் லட்சணங்கள் :

யோகிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம் , சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணிய மாட்டார்கள். தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும், மார்ப்பிலும் முடி இருக்காது. கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் / இடங்களில் பூச மாட்டார்கள்.

Unknown said...

ulaham scince l engeyo poykondu irukkirathu.aanal intha mathiri avalangalai makkal nambuhirarhale . atharkaha nammai namea nonthukollathan vendum. akbar.

GR - Goabiramanan said...

அகோரிகள் வாழ்க..உலகத்தை முற்றும் முற்றும் உணர்ந்த சீமான்கள் சித்தர்கள்..பகட்டான வாழ்க்கை வால்ரிராயே மானிடா..என்று மனிதர்களை உண்டு நீயும் வெறும் மாமிசம்தான் இறந்தால் என்று உணர்துகிறார்கள்..வாழ்க.

saran said...

மிருகங்களை போல பிணத்தை உண்பதால் அவர்களை மிருக காட்சி சாலையில் அடைக்க வேண்டுமாம்??????????? கோழி,ஆடு.மாடு போன்றவற்றை நீங்கள் உண்பது இல்லையா?????.ஏன் அவைகள் பிணங்கள் இல்லையா????????? ஓர் உயிரை கொன்று உண்ணும் எம்மை போன்ற சாதாரண மனிதர்களை விட ஏற்கனவே இறந்த பிணங்களை தின்னும் அகோரி பாபாக்கள் புனிதமானவர்களே.... அவர்கள் இதன் மூலம் எந்த உயிரையும் துன்புறுத்தவில்லை....

Dhina said...

LIfe la oray oru vishyam tha nama uyir erukum pothu theditu erukom athu yalarukum therium pnam(currency) ana nama erntha pirakgu oru thedal eruku athu tha moocham athai tharugira biravargalai elanmaga pasathirgal oru silar sivathi kondu agori marabugali thavaraga parkathirgal

Unknown said...

அது என்ன கும்பமேளா?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அஹோரிகள் அவது எப்படி
அதவது ஒரு சாதாரண மனிதன் இது போல் அஹோரிகளா எப்படி மருவது அதற்கு என்ன செய்ய வேண்டும்?

Post a Comment