Sunday, February 21, 2010

அந்திர மக்களிடம் கொள்ளை போகும் சென்னை ரியல் எஸ்டேட்!!

சென்னை ....தென் இந்தியாவில் மற்ற அனைத்து மாநில தலைநகரங்களை விட பல வகையிலும் சிறப்பு வாய்ந்தது.. அகண்டு பரந்து விரிந்த சென்னை நகரம் சிங்கப்பூரின் பரப்பளவை விட ஒரு மடங்கு பெரியது... துறைமுகம்,பன்னாட்டு விமான நிலையம் பல பொழுது போக்கு அம்சங்கள் என விரிந்து வளரும் சென்னை பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு ஏற்ற இடமாக அமைந்து பல தொழிற் பேட்டைகள் உருவாகி வருகின்றன.. மக்கள் குடியேற்றமும் மிக பெரிய அளவில் உள்ளது.. இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கும் போது ரியல் எஸ்டேட் தொழிலை பற்றி சொல்ல வேண்டியது இல்லை .. மிகப் பெரிய அளவில் ரியல் எஸ்டெட் தொழிலில் பலர் இருக்கின்றனர்... ஒரு காலத்தில் "சும்மா" இருந்தவர்கள் எல்லாம் முதல் இல்லாமல் கமிஷன் வாங்கி சம்பாதிக்கும் ரியல் எஸ்டெட் தொழில் இறங்க இன்று வீட்டு வாடகையிலுருந்து, நிலம், வீடு வரை அனைத்து விலையும் இந்த இடை தரகர்களின் கைவண்ணத்தால் விண்ணை தொட்டு விட்டது...

இன்று வீட்டை வாடகைக்கு விடுபவர்களும், விற்பவர்களும் அதிக பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த ஏரியாவில் உள்ள சலவைக்காரன்,பேப்பர்காரன்,ஆட்டோகாரன்,காய்கறிகடைக்காரன் என பகுதி நேர இடைத்தரகர்களாக இருப்பவர்களின் மேற்பார்வையில் பறிமாற்றம் செய்து இன்று பெருமளவில் பல ரியல் எஸ்டெட் புள்ளிகளை தெருவுக்கு தெரு உருவாக்கி விட்டுள்ளனர்...
இப்படி சென்னையில் விண்ணை எட்டும் ரியல் எஸ்டெட் விலைகளுக்கு இந்த இடைதரகர்கள் சிறிது காரணம் என்றால் அதனை விட பல மடங்கு ஆபத்து சலனமில்லாமல் சென்னையை சூழ்ந்து வந்துள்ளது... சென்னையில் பெருவாரியாக அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து மக்கள் குடியேறுகின்றனர்.. இவர்களில் பெரும்பாலோனார் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்...

தகவல் தொழில்நுட்ப துறையிலும், வங்கி சேவை, இன்ன பிற தனியார் துறைகளிலும் பணி புரிவதற்காக வருபவர்கள் சென்னையின் அமைதியான வாழ்க்கை முறைகளாலும், ரியல் எஸ்டெட் வளர்ச்சியாலும் சென்னையில் வீடுகளை வாங்கி குடியேற அரம்பிக்கின்றனர்... சென்னையில் பல ஆண்டுகள் பணி அதனால் நாளடைவில் சென்னையில் வீடு வாங்கி விட்டேன் என்றால் பரவாயில்லை ஆனால் இந்த ஆந்திர மன்னின் மைந்தர்கள் தங்கள் வரதட்சனையாக பெற்ற பெரும் பணம்,நிலம் ( ஆந்திராவில் பெரும் அளவில் வரத்ட்சனை கொடுப்பது என்பது கட்டாயம்) ஆகியவற்றை சென்னையில் உள்ள நிலங்களில் முதலீடாக இடுகின்றனர்... நில மதிப்பு சில ஆண்டுகளில் இரட்டிப்பாகி விடும் எனும் நம்பிக்கையில் இவ்வாறு தங்கள் ஆந்திர நண்பர்கள் இன்ன பிற புள்ளிகளிடம் தெரிவித்து பலருன் சென்னையில் ஒரு வீடு அல்லது நிலத்தை வாங்கி முதலீடு ஆக்க வரிந்து கட்டுகின்றனர்.. இவர்களுக்கு இடை தரகர்கள் பணத்திற்க்கு ஏற்றவாறு சொத்துக்களை வாங்கி கொடுக்கின்றனர்...

சரி , இப்போது இந்த விஷயத்தில் அவசர கவனம் எதற்கு தேவை என்றால்.. சமீபத்தில் வெடித்த தெலுங்கானா பிரச்சனை .. ஆந்திராவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று குடியேறிய (NRI) மிக மிக அதிகம்... இவர்கள் விண்ணப்ங்களில் காட்டிய "லந்தினால்" சென்னையில் உள்ள அமெரிக்க குடியேற்ற அலுவலகம் அனைத்து விண்ணப்ங்களையும் தமிழர்கள் உட்பட சந்தேக கண்ணில் பார்க்கிறது....இது வேறு கதை... இந்த நாள் வரையில் ஹைதராபாத்தை ஒரு நல்ல முதலீட்டு இடமாக பார்த்து வந்த இந்த வெளி-நாட்டு வாழ் ஆந்திர மக்கள் கவனம் இப்பொது அவசர கதியில் சென்னையை நோக்கி திரும்பி உள்ளது... ஒரு வேளை தனி தெலுங்கானா அமைந்தாலும் கைதராபாத்தில் ரியல் எஸ்டெட் எதிர்கால்ம் கேள்விகுறியாகிறது... இப்பொது ஆந்திராவில் நடக்கும்
கலவரங்களால் பன்னாட்டு நிறுவனங்கள் ஆந்திரா தலைநகரங்களில் முதலீட்டை குறைத்தும் அல்லது நிறுத்தியும் வருகின்றன... தமிழகம் போட்டி போட்டு கொண்டு பன்னாட்டு நிறுவனங்களில் முதலீட்டிற்க்கு உகந்த இடமாக வருவதால் இந்த ஆந்திர மக்கள் தத்தம் சொந்த ஊரில் உள்ள் நில புலங்களை கூட விற்று விட்டு சென்னையை தேடி விரைகின்றனர்....

தமிழகத்திற்க்கு இந்த ஆந்திர மக்களின் அதீத குடியெற்றத்தாலும், ரியல் எஸ்டெட் முதலீட்டாலும் ஆகும் பாதகங்கள் பல....

1. ஒரு சராசரி சென்னை அல்லது தமிழகத்தை சேர்ந்த குடிமகன் வீட்டு வாடகை உயர்வு, வீட்டின் விலை உயர்வு, நிலத்தின் விலை உயர்வு ஆகியனவற்றால் சொந்த வீடு என்பது ஒரு கனவாகவே ஆகி வருகிறது..
2 ஒவ்வொரு தமிழரும் சொத்தின் சரியான விலையை விட பலமடங்கு வரை இந்த செயற்க்கை விலை ஏற்றத்தால் அதிகம் செலவிட வேண்டி வருகிறது..
3. இந்த மூன்றாவது விஷயம் மிக ஆபத்தானது.. பல தனியார் நிறுவங்களில் புற்றீசல் போல் பெருகி வரும் ஆந்திர மக்களினால் இனி அடுத்து வரும் இருபது ஆண்டுகளில் தமிழகத்தின் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பெரும்பாலேனோர் இந்த ஆந்திர மக்களே இருப்பர்.. தற்பொதே பல தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் சுமார் நாற்பது சதவீதம் வரை ஆந்திராவை சேர்ந்தவர்களே பணி புர்கின்றனர். இவ்வாறும் வந்து பணி புரிபவர்கள் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் போது சம திறமையில் இருவர் வரும் பொது தமிழரை புறக்கணித்து ஆந்திராவில் இருந்து வருபவர்களை தேர்வு செய்யும் அவலம் நடந்து கொண்டு இருக்கிறது..
4. இவ்வாறு ஆந்திராவில் வந்து குடியேறும் பசையுள்ள தனியார் நிறுவன பணியாளர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் பாட திட்டத்தில் இல்லாத ஒரு மெட்ரிக் அல்லது மத்திய (CBSE) பாடதிட்டம் உள்ள பள்ளியில் சேர்க்க முண்டியடிப்பதால் இன்று பல மெட்ரிக் பாலர் பள்ளிகளின் நன்கொடை இலட்சங்களை தொட்டு நிற்கிறது..
5. ஆந்திராவில் இருந்து வரும் பெரும்பாலேனார் நல்ல சிவந்த நிறமாக இருப்பதால் (Personality) உருவ அமைப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் பல தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கு முன்னுரிமையும் கொடுக்கின்றனர்.. இந்த ஆந்திர பசங்களின் உருவ அமைப்புக்கு எளிதாக தமிழகத்து அப்பாவி பெண்கள் மயங்கி தொலைந்து நிற்பதும் ஆங்காங்கே நடந்து கொண்டு இருக்கிறது.... ஆனால் ஆந்திர வயசு பசங்கள் திருமணம் என்று வந்தால் நிலம்,புல்ங்களை கொடுக்கும் ஆந்திர பெண்களை தேடி சென்று விடுகின்றனர்....இதனால் மறைமுகமாக சிறிய அளவில் கலாச்சார சீரழிவும் நடக்கிறது..


இப்படி ஒரு சங்கிலி தொடராக இந்த ஆந்திர மக்களின் குடியெற்றமும், முதலீடுகளும் அரசியல் ரீதியாக எந்த ஒரு பயனையும் கொடுப்பது இல்லை.. இவர்கள் வாக்களிப்பதை விரும்புவது இல்லை, சென்னையை ஒரு சுகபோக அமைதி வாழ்க்கையை அனுபவிக்கும் இடமாகவும், நல்ல முதலீடு செய்யும் இடமாகவும் கருதும் இவர்களால் தமிழகத்திற்க்கு என்று பெரிய அளவில் அரசியல் ரீதியாக, பிராந்திய ரீதியாக நன்மைகள் இல்லை..

இன்று அமெரிக்கா , பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளே மக்கள் குடியேற்றங்களை தத்தம் பிராந்திய நாட்டு மக்களின் நன்மை கருதி பெருமளவு மட்டுப் படுத்தும் பொது பல கோடி ஏழைகளை , நடுத்தர வர்க்கத்தை கொண்ட தமிழகத்தில் பிராந்திய நலனை கருத்தில் கொண்டும் மக்களின் வாழ்வாதரங்களை கருத்தில் கொண்டும் ஆந்திராவில் இருந்து பணி நிமித்தமாக வருபவர்களை அவர்கள் தம் பணியை மட்டும் செவ்வனே செய்து விட்டு முதலீடுகளை சென்னையில் இடாதவாறு அரசு நில , சொத்து பறிமாறங்களில் தமிழர்களுக்கு முதலுரிமையும், ஆந்திர மக்களின் சென்னையில் இடும் சொத்து பறிமாற்றங்களில் கடிவாளமும், கவனமும் கொள்வது, தமிழர்களின் நலன் பேணுவதிற்க்கு அத்தியாவசியமாகிறது...

8 comments:

காரணம் ஆயிரம்™ said...

உடனடியாக கருத்தில் கொள்ளவேண்டிய அவசரகால விஷயம்! மேலிடத்தவர்கள் கவனித்தால் சரி!

இங்கே கொஞ்சம் வாங்க:
http://kaaranam1000.blogspot.com

அன்புடன்
கார்த்திகேயன்

வசந்தசேனன் said...

உங்கள் கருத்தும் சரியாக உள்ளது... கிரேட்டர் சென்னையையும் தாண்டி செங்கல்பட்டு என இந்த ரியல் எஸ்டெட் அடுக்கு குடியிருப்பு நிறுவனங்கள் கடை விரிக்கின்றன ..

வசந்தசேனன் said...

அன்றைய மத்திய சென்னையில் ஆங்கிலம் பேசும் ஆங்கிலோ இந்தியன்ஸும் மிக அதிகம் ... அதற்காக சென்னை ஆங்கிலோ இந்தியன்ஸ்க்கு சொந்தம் என சொல்வதா? சென்னையில் பூர்வீக தெலுங்கு குடிகள் என்பது மிக மிக குறைவு..

கடந்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் வேலை தேடி மட்டும் வந்து குடியேறியவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம்....குறிப்பாக ,திரைப்பட துறை , தகவல் தொழில்னுட்பம், தனியார் வங்கி துறை ஆகியனவற்றில் பெரும்பாலோனார் அந்திர மக்கள் பணிக்காக வந்து பின்னர் குடியேற்றம், முதலீடு என சொத்துக்களை வாங்கி குவிக்கத் தொடங்குகின்றனர்... திரைப்பட துறக்கு பல பைனான்சியர்கள் ஆந்திராவில் இருந்து தான் உள்ளனர்...

பல பணி இடங்களில் "மனவாலு" என தெலுங்கு பெசுபவர்கள் ஒன்று இணைந்து அங்கு தமிழர்களை ஓரங்கட்டும் நிகழ்வுகள் நடக்கின்றன...

கர்னாடகாவில் வேலை பார்க்கும் தமிழர்கள் பலரும் அங்கு இருக்கும் கன்னட அமைப்புகளின் தாக்குதல் திடிரென வரும் தமிழர் எதிர்ப்பு கலவரம் ஆகியனவற்றை கருத்தில் கொண்டும் பெரும்பாலோனார் சொத்துக்களை தங்கள் சொந்த ஊர்களில் தமிழகத்தில் வாங்கி கொள்கின்றனர்... ஆந்திர மக்கள் சென்னையில் சொத்துக்களை முதலீடு செய்வதை விட தமிழர்கள் மற்ற மானிலங்களில் முதலீடு செய்வது சொற்ப அளவே என்பது ஆணித்தரமான உண்மை.... எந்த ஒரு தமிழரும் கைதராபாத்தில் நிலம் வாங்க எத்தனிக்க மாட்டான். ஆனால் பல ஹைதராபாத் வாசிகள் சென்னையில் நிலங்கள்லும், அடுக்கு மாடி குடியிருப்புகளிலும் முதலீட்டை போட்டுள்ளனர்..

Beemboy-Erode said...

உங்க‌ள் க‌ருத்துக்கு அமெரிக்காவும் விதி வில‌க்கு அல்ல‌...ம‌ன‌வாடு, ம‌ன‌வாடு ஒன்று சேர்ந்து அவ‌ர்க‌ள் டீமில் இருக்கும் வேலைக்கு ம‌ண‌வாடுக‌ளுக்கு ஃபேக் ரெஸியும் செய்து ஒரு வேலையில் உட்கார்ந்து செட்டில் ஆகி விடுகிறார்க‌ள். Interview வில் ந‌ன்றாக‌ செய்தும் என‌க்கு வேலை கிடைக்காத‌த‌ற்கு ஒரு ம‌ன‌வாடு தான் கார‌ண‌ம்.

நானெல்லாம் வீடு வாங்க‌ யோச‌னை செய்து கொண்டுஇருக்கும் போது அவ‌ர்க‌ள் அனாவ‌சிய‌மாக‌ அரை மில்லிய‌ன் டால‌ர்க‌ளில் வீடு வாங்கி செய‌ர்கையான‌ விலை ஏற்ற‌த்தை ஏற்ப‌டுத்துகிறார்க‌ள்.

(விலை ஏறினால் விற்று கொள்ள‌லாம் அல்ல‌து ஏதும் ந‌ட‌ந்து விட்டால் வீட்டை விட்டு வெளியேறிவிட‌லாம்)bankruptcy/Foreclosure

அதே மாதிரி கிரிடெட் கார்டுக‌ளில் ப‌ண‌ம் அள்ளிவிட்டு இந்தியா ப‌ற‌ந்துவிடுவ‌து, அவ‌ர்க‌ள் இருக்கும் புராஜ‌க்டுக‌ளிள் ம‌னைவி அல்ல‌து ம‌ண‌வாடுக‌லை சேர்ப்ப‌து, ஆட‌ம்ப‌ர‌ வாழ்க்கை வாழ்வ‌து எதாவ‌து நேர்ந்துவிட்டால் இந்தியா ப‌ற‌ப்ப‌து என்ப‌து ம‌ண‌வாடுக‌ளுக்கு கை வ‌ந்த‌ க‌லை. (இங்கு கொள்ளை ய‌டித்த‌தில் ப‌ண‌த்தில் இந்தியாவில் செத்து சேர்த்து‍ ச‌ரியான‌ பேக் அப் பிளானிங்

வசந்தசேனன் said...

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். கேரளா,ஆந்திர மக்களிடையே உள்ள ஒற்றுமை தமிழர்களுக்கு கிடையாது

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

mahendaran said...

diravidam nammai innum yematrughiradhu

bandhu said...

ஆந்திர மக்கள் செய்வதில் எந்த தவறும் இல்லை. இந்தியர் எல்லோருக்கும் இந்தியாவில் எங்கும் இடம் வாங்க உரிமை உண்டு (காஷ்மீர் பிரச்சனைக்கு நான் போகவில்லை). நமக்குள்ளே ஒற்றுமை இல்லை என்றால் ஒற்றுமை உள்ளவர்களை குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்? நீங்கள் சொல்வதில் சென்னையை தவிர மற்ற ஊரில் உள்ள தமிழர்கள் அதிகம் பேர் வந்தாலும் 1 & 2 நடக்கும். மற்றவை உங்கள் ஊகம் மட்டுமே. நமக்கு ஏன் Xenophobia?

Post a Comment