உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இறுதி ஆயுதம் வாக்குசீட்டு அதன் சரியான இலக்கு தமிழர்களை கழுத்தறுத்த துரோகிகளை அழித்து ஒழிக்க. இந்த அருமையான ஒரு ஆயுதத்தை குழி தோண்டி புதைப்பதற்க்கு சமம் நான் தேர்தலை புறக்கணிக்கின்றேன் / வாக்கு அளிக்க மாட்டேன் என்பது..
நீங்கள் நன்றாக் ஒன்றை உணருங்கள் நீங்கள் வாக்கு அளிக்காமல் 49'0 கொடுப்பது என்பது பத்து ஆயிரத்தில் ஒரு நபர் என்ற விகதத்தில் தான் இருக்கும்.. 49'0 வை பயிற்ச்சி செய்து பார்க்க இந்த தேர்தல் சரியான களம் அல்ல..தேர்தல் ஆனையம் 49'0 வை எந்த கணக்கிலும் கொண்டு வராது.. தமிழகத்தின் தேர்தல் முடிவை துரோகிகளுக்கு சாதகமாக கொண்டு செல்லும் நிலைபாடே அதிகம் இந்த 49'0 தேர்தல் புறக்கணிப்பால்..தன்னை எரித்து மாய்ந்த முத்துகுமரன் முதல் ஏனையோரும் இந்த 49'0 வையா இட சொன்னார்கள்.. துரோகிகளை சுட்டிக் காட்டினான் முத்துகுமரன்.. உங்கள் புறக்கணிப்பு துரோகிகளுக்கு மிகுந்த சந்தோசத்தை தரும் இந்த நேரம்...
ஈழத்தில் பத்து ஆயிரத்திற்க்கும் மேல் கொல்லப்பட்ட இந்த இக்கட்டான தருணத்தில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யாமல் புறக்கணிப்பது என்பது
49'0 தேர்தல் புறக்கணிப்பு என்பது ஈழத்தில் 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்.......
No comments:
Post a Comment