Monday, May 11, 2009

விருதுநகரில் ஓட்டுக்கள் பிரிவதால் தோல்வியின் விளிம்பில் வைகோ ...

வைகோ விற்கு இது பொல்லாத காலம் போல.. தமிழகத்தில் இன்னும் ஒழியாத சாதீய நெருப்பின் அனலில் வைகோ பரிதாபமாக தோல்வியை தழுவும் நிலையில் உள்ளார் .. விருதுநகர் தொகுதியில் நாங்குமுனை போட்டி நடைபெறுகிறது .. நாடார் சமூகத்தை சேர்ந்த மா.பா. பாண்டியராஜன் , நாயுடு சமூகத்தை சேர்ந்த வைகோ , மானிக் தாகூர் என்னும் காங்கிரஸ் வேட்பாளர், நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் தேவர் சமூகத்தை சேர்ந்த நடிகர் கார்த்திக் என பல வாரியாக சாதிய ஓட்டை பிரித்து கொண்டு இருக்கிறார்கள்

விருதுனகர் தொகுதியில் குறிப்பிட்ட அளவு உள்ள நாடார் சமூகத்தினர் அனைவரும் முரசு சின்னத்திற்கு வாக்களிக்கும் வகையில் சாதீய ரீதியாக மூளை சலவை செய்யப்பட்டு உள்ளனர் , கார்த்திக் அதிமுக வாக்கு வங்கியான தேவர் ஒட்டுகளை பிரிக்கின்ர காரணத்தால் வைகோ தோல்வியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளார்..

விருதுநகர் தொகுதியில் வைகோ வின் தோல்விக்கு அங்கு இலங்கை தமிழர் பிரச்சனையை சரிவர கொண்டு செல்லாததே காரணம் .. இது சம்ப்ந்தமாக அங்குள்ள இளைஞ்சர்களிடம் இலங்கை தமிழர் பிரச்சனையை எடுத்து கூறி வைகோவிர்கு ஆதர்வு திரட்ட முற்படுகையில் அவர்கள் பதில் மிரட்சி அடைய வைக்கிறது ... சாலையில் அடிபட்டு கிடப்பவர்களை கண்டு கொள்ளாதது போல் இலங்கை தமிழர்களை கண்டு கொள்ளக் கூடாது என வியாக்கியானம் பேசினர் முரசு சின்னத்திற்கு சாதீய ரீதியாக வாக்கு அளிக்க முற்படும் இளைஞ்சர்கள்..

மாபா . பாண்டியராஜன் பணத்தை தொகுதியில் இரைத்து உள்ளார்.. காங்கிரஸ் ஒட்ட்டிற்கு இருனூரு ரூபாயும், பாண்டியராஜனும் ஒட்டுக்கு இருனூரு ரூபார் , மற்றும் தேர்தல் பணி செய்பவர்களுக்கு பல வகையில் பணமும் இரைக்கப்பட்டுள்ளன.. வைகோ தொகுதியில் பணபட்டுவாட பண்னாததை குறையாக சொல்லும் சிலர் பணத்தால் விலை போன ஒட்டுக்கள் காங்கிரஸால் பிரிக்கப்பட்டும் உள்ளன

இப்போதைய சூல்னிலையில் வைகோவின் தோல்வி மயிரிழையில் உறுதி ஆகி உள்ளது..

ஈழ உணர்வாளர்களே, தமிழ் ஆர்வ இயக்கங்ககளே , திரை உலக் தமிழ் இன ஆர்வ பிரமுகர்களே வைகோ வெற்றி பெற விருதுனகர் தொகுதியில் ஈழ ஆதரவு பிரச்சாரங்கள் உறுதியாக தேவை.. இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் இது நடக்குமா? ஜெயிபாரா வைகோ?

8 comments:

Unknown said...

கவலை வேண்டாம். ஓட்டெல்லாம் கட்டியாகத்தான் இருக்கிறது. வை.கோவிற்கான ஓட்டுக்கள் பிரியவில்லை.
அ.தி.மு.க. கூட்டணி நாற்பதுக்கு நாற்பது வெல்லும் என்ற உளவுத் துறை தகவலால் எதிரணியில் காத்து பிரியுது என்பதே சற்று முன் கிடைத்த தகவல்.

வசந்தசேனன் said...

அண்ணே .. கள நிலைமை விருதுநகர்,சிவகாசி என்னும் இரண்டு பெரிய நகரங்களில் வைகோவிற்கு மிக பாதகமாக தே.மு.தி.கவிற்கு சாதகமாக உள்ளது .. சாதிய ஓட்டுக்கள் பெருவாரியாக பிரிந்துள்ளன. இது உறுதி படுத்த பட்ட தகவல்கள் .. வைகோ ஜெயித்தாலும் பல நூறு ஓட்டுக்கள் வித்தியாசம் தான் என்பது நிதர்சனம்

அன்பு said...

ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

Unknown said...

//அண்ணே .. கள நிலைமை விருதுநகர்,சிவகாசி என்னும் இரண்டு பெரிய நகரங்களில் வைகோவிற்கு மிக பாதகமாக தே.மு.தி.கவிற்கு சாதகமாக உள்ளது .. சாதிய ஓட்டுக்கள் பெருவாரியாக பிரிந்துள்ளன.//

வைகோ சாதி ஓட்டுக்களை மட்டும் நம்பி நிற்கிறார் என்று நினைப்பது சரியல்ல. தொகுதியை நன்றாக அறிந்தவன் என்னும் முறையிலேயே கூறுகிறேன். அங்கே வைகோவுக்கும் பாண்டியராஜனுக்கும்தான் போட்டி. பாண்டியராஜனுக்கு நாடார் ஓட்டு மொத்தமாக விழுவதாக வைத்துக்கொண்டாலும் (இதிலும் ஒரு பகுதி வைகோவுக்கு விழும்) நாயக்கர் ஓட்டுக்களும், தொகுதியில் அதிகமாக வாழும் தேவர், சாலியர், ரெட்டியார், பிள்ளைமார், முதலியார், பள்ளர், பறையர் ஆகிய சாதி ஓட்டுகள் பொதுவானவை. இவர்களுக்கு வைகோ பொதுவானவர். இவற்றில் பெரும்பங்கு வைகோவுக்கு விழும். சிறு பகுதி மட்டுமே பாண்டியராஜனுக்கும் மற்றவர்களுக்கும் செல்லும். வைகோ பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. இது போன்ற செய்திகள் ஓட்டு வித்தியாசத்தை இன்னும் அதிகப் படுத்தும் நன்றி.

Unknown said...

வைகோ வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வதையே அந்த தொகுதி மக்கள் விரும்புவர். வைகோ பொது வாழ்கைக்கு பழக்கப்பட்டவர்.

பாண்டியராஜன் ஜெயித்தும் அவரது சொந்த வேலையே பார்க்க போய்விடுவார். (mafoi consulatncy )

Suresh Kumar said...

கவலை வேண்டாம் நண்பரே வைகோ அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்

Raju said...

விருது நகர் தொகுதியில் வைகோ கட்டாயம் ஜெயிப்பார் என்பதே என் கணிப்பு.
தொகுதி சீரமைப்பினாலும் சரியான அறிமுகமின்மையாலும் காங்கிரஸ் தோற்பது உறுதி.
வேண்டுமானால், தே.மு.தி.க இரண்டாம் இடம் வரும்.

ers said...

பா . பாண்டியராஜன் பணத்தை தொகுதியில் இரைத்து உள்ளார்.. காங்கிரஸ் ஒட்ட்டிற்கு இருனூரு ரூபாயும், பாண்டியராஜனும் ஒட்டுக்கு இருனூரு ரூபார் , மற்றும் தேர்தல் பணி செய்பவர்களுக்கு பல வகையில் பணமும் இரைக்கப்பட்டுள்ளன.. வைகோ தொகுதியில் பணபட்டுவாட பண்னாததை குறையாக சொல்லும் சிலர் பணத்தால் விலை போன ஒட்டுக்கள் காங்கிரஸால் பிரிக்கப்பட்டும் உள்ளன/////
ஓட்டுக்கு பணம் கொடுத்தா படம் எடுத்து போடுங்க அண்ணாச்சி. அப்படியாவது இந்த கேடுகெட்ட சமுதாயம் திருந்தி தொலைக்கட்டும். தேர்தலில் நிக்கும் எவனாவது யோக்கியன் இருக்கானா... விரல் நீட்டி சுட்டிக்காட்டுங்க பாக்கலாம். எல்லா பயலும் திருடனுங்க... இதில நாம கொஞ்சம் யோக்கியமான திருடனை தேர்வு செய்ய வேண்டியிருக்கு அவ்வளவு தான்.

Post a Comment