தமிழகமே உறங்காதே விழித்து எழு ...
தமிழ் என் மூச்சு,பேச்சு என நாடகமாடி
தமிழ்ர்கள் மூச்சை நிறுத்திய துரோகிகளின்
கொட்டமறுக்கும் நாளிது ..
களம் காண புறப்பட்டு ..
நீ கண நேரம் உறங்கினாலும்
ஈழ்த் தமிழ்ர்களுக்கு நிரந்தர உறக்கம்
உற்றார் உறவினர், சுற்றம், நட்பு என ஓயாது
பார்போர் யாவரிடம் பரப்புரை செய் ..
கட்டிலில் படுத்து கொண்டு வெற்றி வெற்றி என
பாடையில் போகும் வயதில் ஈன முழக்கமிடும்
ஈழத துரோகிகளை உன் வாக்குகளால்
வறுத்து,துவைத்து எடுக்கும் நாள் இது
ஓட்டிற்கு ஆயிரம் விலைபேசிய நயவஞ்சகர்களை
உன் களப் பணியால் புறமுதுகிட செய்யும் நாளிது
புறப்படு தமிழர்களை கொன்று குவித்த கையை
துரோக கணலால் சுட்டு எரிக்கும் சூரியனை !!
கள்ள உறவுடன் பிரிக்கும் முரசை நம்பாமல்!!
தமிழகத்திலிருந்து அகற்ற புறப்படு ...
கணலென களம் நம் முன்னே..
களைத்திடாமல் இன்று உழைத்திடு
நம் தீர்ப்பில் இன்று இலைகள் மலரட்டும் ...
தமிழர்களுக்கு துரோகம் இழைத்தோரும்,
இனி இழைக்க எத்தனிப்போரும்
அரசியலில் துடைத்து எரியப்படுவார்கள்
என உரைக்கும் நேரமிது
விழித்தெழு, தமிழா விழித்தெழு !!
No comments:
Post a Comment