Sunday, November 1, 2009

திடுக்கிடும் மந்திரி ராசாவின் பினாமிகள்,ஊழல்கள்-புலனாய்வு கட்டுரை

டெலிகாம் மந்திரி ராசாவின் பினாமிகள்,ஊழல்கள்-புலனாய்வு கட்டுரை

இந்த கட்டுரை டெல்லியில் இருந்து வெளிவரும் 'தி பயொனியர்' நாளிதழின் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான புலனாய்வு கட்டுரையின் தமிழாக்கம்

தொலை தொடர்பு துறையில் இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான முறைகேடுகள் இந்திய நாட்டில் நடந்த முறைகேடுகளில் மிகப் பெரியதும் , மற்ற மோசடிகளை தூக்கி சாப்பிடும் அளவு சுமார் அறுபது ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு தந்ததும் ஆகும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு என்பது மின் காந்த அலைவரிசைகளை தொலை தொடர்பு தொழில் நுட்ப மற்றும் சேவை நிறுவனங்களுக்கு வரையரை செய்து ஒதுக்கீடு செய்யும் நடைமுறை..

இந்த முறைகேடு மத்திய தொலைதொடர்பு துறை தி.மு.க அமைச்சர் பதவிக்கு வந்ததும் அலைவரிசைகளை மிக மிக மலிவான விலையில் தொலை தொடர்பு துரையில் அனுபவம் இல்லாது புது நிறுவனங்களுக்கு குறிப்பாக ரியல் எஸ்டெட் துறையில் இருக்கும் சில நிறுவனங்களுக்கு மத்திய இராஜாங்க குழுவின்(cabinet committe) அனுமதி பெறாமல் வழங்கியதால் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த ஒதுக்கீடு சில ரியல் எஸ்டெட் நிறுவனங்களுக்கு 2008 ஆம் ஆண்டு மிக மலிவான (2001 ஆம் ஆண்டிற்கான) விலையில் வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீடு பொதுவாக அரசு துறையில் இருப்பது போன்று ஏல முறையில் இல்லாது "முதலில் வருபவர்க்கு" என்று நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு ஓட்டை விதியை கையிலெடுத்து தொலைதொடர்பு ஆனையத்தின் தலைவர் நிபெந்திர மிஸ்ரா மற்றும் நிதி துறையின் எதிர்ப்பையும் சட்டை செய்யாமல் ஆ.ராசாவால் சில தரகு நிறுவனத்திற்க்கு அன்பளிப்பு போன்று கொடுக்கப்பட்டது.

மத்திய தொலைதொடர்பு மந்திரி பதவியை தயாநிதி மாறன் துறந்ததும் சுற்றுச்சூழல் வன இலாகாவில் இருந்த ஆ.ராசா பெற்றுக் கொண்டார். சுற்றுச்சூழல் இலாகாவில் இருந்த போது அவருக்கு நெருக்கமான சில ரியல் எஸ்டெட் நிறுவன குழுவுடன்,தரகர்களுடன் தொலைதொடர்பு துறைக்குள் புகுந்து தொலை தொடர்பு துறைக்கும் , தொலை தொடர்பு சேவை நிறுவனங்க்களுக்கும் இடையே அலைவரிசை ஒதுக்கீட்டை மலிவு விலைக்கு பெற்று அதிக விலைக்கு விற்க்கும் தரகு நிறுவனங்கள் நுழைய காரணமானார்.

தொலைதொடர்பு நிபுணர்கள் அதிர்ச்சி அடையும் விதம் மின் காந்த ஒதுக்கீட்டை "unitech" மற்றும் " swan " என்னும் ரியல் எஸ்டெட் பின்புலம் கொண்ட இரண்டு நிறுவனங்களுக்கு கொடுத்தார். மிக மலிவான விலைக்கு ஆ.ராசாவின் தயவால் ரூபாய் 1534 கோடிக்கு அதனை வாங்கிய சுவான் உடனடியாக அதன் 45 % பங்குகளை மட்டும் 4500 கோடி ரூபாய்க்கு துபாயை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்க்கு விற்றது.. இதே போல் யுனிடெக் என்னும் ரியல் எஸ்டெட் கம்பெனியும் ரூபாய் 1651 கோடியில் பெற்ற அலைவரிசையால் அதன் 60% பங்கை நார்வேயை சேர்ந்த ஒரு கம்பெனிக்கு 6120 கோடிக்கு விற்றது..

தி பயொனியர் நாளிதழ் இந்த முறைகேட்டை பற்றி புலனாய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்துள்ளன.. ரியல் எஸ்டெட் துறையில் பினாமிகள் பெயரில் சொத்துக்களை வாங்கி சேர்ப்பது போல அமைச்சருக்கு நம்பிக்கையான சில உப்புமா கம்பெனிகளுக்கு அலைவரிசைகளை மலிவான விலையில் ஒதுக்கீடு செய்து மோசடி பண்ணியது வெளி வந்துள்ளது..

ஆ.ராசா மத்திய அமைச்சராக சுற்றுச் சூழல் துறைக்கு பதவி ஏற்றதும் அவர் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் ரியல் எஸ்டெட் துறையில் குதித்தனர்.. Green House Promoters, Equaas Estates, Kovai Shelters Promoters போன்ற ரியல் எஸ்டெட் நிறுவனங்களில் பெரும் பங்குதாரர்களாக ராஜாவின் உறவினர்கள்,நண்பர்கள், மனைவி ஆகியோர் இருக்கின்றனர்.. ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இரண்டு ரியல் எஸ்டெட் நிறுவனங்களின் நிர்வாக குழுவின் தலைமை உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்... ராஜா மந்திரிகளுக்கு உரிய விதிமுறையான தத்தம் குடும்பத்தார் தம் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடுதலை பிரதமருக்கு தெரிவிக்காமல் தம் ரியல் எஸ்டெட் தொழிலை மனைவியின் பெயரில் செம்மையாக செய்தார்..

ராஜா அலைவரிசையை வாரி வழங்கிய சுவான் நிறுவனம் ராஜா குடும்பத்தார் பங்குதாரர்களாக இருக்கும் Green House Promoters நிறுவனத்தில் சுமார் 49 % சதவீத பங்குகளில் முதலீட்டை செய்வது போன்று ஒரு மறைமுக ஒப்பந்தம் இருந்தது.. அதாவது குறைவான விலையில் அலைவரிசையை சுவானுக்கு கொடுத்தால் அது பதிலுக்கு பெரும் பணத்தை மந்திரி ராஜாவின் பினாமி நிறுவனத்தில் கைமாறாக முதலீடு செய்யும்.. இந்த ஒப்பந்த குட்டு முன் கூட்டியே உடைந்து விட்டதால் கைமாறாக கிடைக்கும் பெரும் கோடி பணத்தை பெற மாற்று வழி என்ன என்பதை ராஜா குழுவினர் ஆராய்ந்து அதனை வேறு வடிவில் செயல் படுத்தினர்... அந்த திட்டத்தின் படி புதிதாக ஒரு ரியல் எஸ்டெட் கம்பெனியை (Genex Exim Ventures) கீழக்கரையை சேர்ந்த நம்பகமானவர்களின் பெயரில் ஒரு இலட்சம் முதலீட்டில் தொடங்கி கைமாறு செய்யும் சுவான் நிறுவனத்தின் பெரும் கோடிகள் (380 கோடிகள்) மதிப்புள்ள பங்குகளை அந்த உப்புமா கம்பெனியின் பெயரில் கைமாறாக வாங்கியது...

ஆ.ராஜா 'சுவான்' என்னும் அந்த கம்பெனிக்கு அலைவரிசை ஒதுக்கீட்டிற்க்கு அடுத்ததாக வேறு சில சலுகைகளை அள்ளி வழங்கியுள்ளார்.. செப்டம்பர் 13,2008 ஆம் ஆண்டு சுவான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டார்.. அதன் படி சுவான் நிறுவனமானது பி.எஸ்.என்.எல். அரசு துறை தொலைதொடர்பு நிறுவனத்தின் அலைவரிசை, நெட்வொர்க் இன்ன பிற உபகரணங்களை இலவசமாக உபயோகபடுத்தி கொள்ள வகை செய்யும் ஒப்பந்தம்.. தொலைதொடர்பு துரையின் பல அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த போதும் தன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை மிரட்டி சுவான் நிறுவனத்திற்க்கு அதனை வழங்கினார். இதனை பற்றி பிரதம மந்திரிக்கு அதிகாரிகள் சிலரால் புகார்கள் சென்றாலும் அதனை பற்றி பிரதமர் அப்பொதைய அரசியல் சூழலில் அக்கறை காட்டவில்லை.. இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்ன என்றால் தொலைதொடர்பு துறையில் இருக்கும் ஒரு ஒதுக்கீட்டிற்க்கு தொலைதொடர்பு துரயின் அனுபவம் சிறிதும் இல்லாத சுமார் 537 ரியல் எஸ்டெட் நிறுவனங்கள் ராஜாவை நம்பி விண்ணப்பித்து இருந்தது.. இதனை சுட்டிக்காட்டி தொலைதொடர்பு துறையில் நடக்கும் விசித்திர செயலை சீத்தாராக் யெச்சூரி கடிதமாக பிரதமருக்கு அனுப்பியும் பயன் இல்லை..

இவ்வளவு எதிர்ப்புகள் வந்த நிலையிலும் ராஜா அடங்குவதாக இல்லை , மீண்டும் பல ஆயிரம் கோடிகளை குவிக்க தொலைதொடர்பு துரயின் மூன்றாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடு செய்ய ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு உள்ளார்.. தற்போது விழித்து கொண்ட காங்கிஸ் அரசு அந்த ஒதுக்கீட்டை முடிவு செய்யும் அதிகாரத்தை சில மந்திரிகள் அடங்கிய குழுவிடம் ஒப்படைத்து உள்ளது...

த பயொனியர் நாளிதழ் பத்திரிக்கையாளரின் ஆங்கில பதிப்பு

http://jgopikrishnan.blogspot.com/2009/03/spectrum-scam-indias-mother-of-all.html
http://jgopikrishnan.blogspot.com/2009/03/spectrum-scandal-and-telecom-ministers.html
http://www.dailypioneer.com/

தற்பொது சஞ்சார் பவனில் நடந்த சி.பி.ஐ சோதனையும், அதனை ஒட்டிய தி,மு,க மதுரை எதிர்ப்பு கூட்ட பின்வாங்களும் முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதா
குறிப்பிடுவது போல இந்த மோசடியின் பிண்ணனியில் தி.மு.கவின் தொடர்பு வெளிவருமா?

No comments:

Post a Comment