Saturday, November 21, 2009

தமிழக தமிழன் எழவே மாட்டான்...




சாதி அரசியல் விவகாரங்களில் இருந்து விலகி ஒரு மூன்றாவது பார்வையில் எழுதுகிறேன்...

சீமான் பல சமயங்களில் ஆரம்பம் முதலே உணர்ச்சி மிகுதியில் வரம்பு மீறி பேசி இருக்கிறார். சில தடவை சிறைக்கும் சென்று இருக்கிறார்.. அவர் மீதான பல குற்றச்சாட்டுக்கள் சில காலமாக ஒரு சாராரால் வாசிக்கப்படுகின்றன.. அதுவும் குறிப்பாக தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட உடன் அவரை சாதிவெறியர் போல் சித்தரித்து வரும் கட்டுரைகள் எராளம்... சீமான் சாதி இயக்கத் தலைவர்களாக சித்தரிக்கப்படும் இமானுவெல் செகரன் மற்றும் தேவர் இருவர் சிலைக்கும் மாலை போட்டு தானும் அடுத்த சாதி அரசியலை நாடும் அரசியல்வாதி என்பது போல சித்தரித்து விட்டார்...

சரி விஷயத்திற்கு வருவோம்.... இது போன்ற் மலிவான அரசியலை நேற்று முளைத்த காளான் சீமான் மட்டும் தான் செய்தாரா என்ன ? தலித்களின் அவதார புதல்வன் என்பது போல் பிரகடனபடுத்தி பெரும்பாலான தலித் வாக்கு வங்கியை வைத்து இருக்கும் திருமா ஒரு சமயத்தில் தேவர் நூற்றாண்டு விழாவிற்க்கு அரசு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என கூறியதாக ஒரு செய்தியை படித்தேன்... இது எந்த வகை அரசியல் ? மலிவான சாதி அரசியல் என அவர் தம் வாக்கு வங்கிக்கு தெரியவில்லையோ ? தேவர் ஜெயந்திக்கு வரிசையாக சென்று வணங்கி மாலை மரியாதை வாங்கி வரும் பிற அரசியல்வாதிகளை என்ன என்று சொல்வது...

திமுக சார்பில் அழகிரி சென்று வணங்கி வருகிறார்.. அடங்க மறு அத்து மீறு என மேடைக்கு மேடை முழங்கிய திருமா கருணாநிதியிடம் அடங்கி போய் கிடப்பது எதனாலோ ? தன்னை நையாண்டி செய்த இலங்கை அதிபருக்கு எதிர்த்து என் பேசவில்லை என்ற கேள்விக்கு "அவையடக்கம் கருதி செய்யவில்லை" பின்னர் முதல்வர் நல்ல பிள்ளையாக சென்று வர வேண்டும் என்றார் அதனால் அமைதியாக சென்ரு வந்தேன் என்று கசிய கசிய பத்திரிக்கை ஒன்றில் எழுதிகுறார்..... தலித் வாக்கு வங்கியை ஒட்டு மொத்தமாக வளைத்து காங்கிரசிடம் அடங்கி கிடக்கும் திருமா செய்வது என்ன அரசியல் ? அதனை விட தமிழகத்தில் உளள தலித்துக்களிடம் அவர்களுக்குள்ளாகவே உள்ள பிரிவுகளில் யார் ஆதிக்க பிரிவு என்னும் சண்டை பரவலாக உள்ளது..

பல தென்மாவட்ட கிராமங்களில் அவர்களின் இருபிரிவுக்கு உள்ளாகவே அடித்து கொன்று சாகிறார்கள்.. ஒவ்வொறு உட் பிரிவுக்கும் ஒரு தலைவர், கிருஷ்ன சாமி, ஜான்பாண்டியன், மற்றும் பலர் என அடுக்கி கொண்டே செல்லலாம்....

இறுதியாக சொன்னால் இந்திய அரசு துறைகளில் சமூகத்தில் பின் தங்கிய வகுப்பை சார்ந்த மக்களுக்கு இட ஒதுக்கீடுகள், சலுகைகள் கொடுத்து இன்று பல பெரிய பதவிகளில் முன்னெரி கொண்டு இருக்கின்ற வேளையில் இன்னும் சாதி ரீதியான அடிப்படை வாதங்களை வைத்துக் கொண்டு , தன் சாதியை ஒட்டுக்களால் வளர்ந்து அரசியல் செய்யும் தலைவர்கள் சுயலாப போக்கை கண்டிக்காமல் , தங்களுக்குள் ஒற்றுமையை வளர்காமல் .. காலம் காலமாக எதிரி சாதியாக கொண்ட ஒருவன் என்பதால் அவன் மீது மட்டும் சேற்றை வாரி இறைப்பது ஒரு நடு நிலை பார்வையில் பார்த்தால் நியாயம் இல்லை....


தமிழகத்தில் நடக்கும் மலிவான சாதி ரீதியான அரசியலையும், நன்றாக படித்து இணையம் வந்து இங்கு கட்டுரை என்ற பெயரில் மோசமாக சாதி அரசியல் சார்ந்து, விமர்சித்து எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும் அதனை எழுதியவர் தன் சாதி ரீதியான ஆழமான பிடிப்புடன் இருப்பதை போல் பிம்பத்தை கொடுக்கிறது என்பது உண்மை.....

சாதிகள் என்றும் ஒழிய போவதில்லை இது போன்ற சிலரால்.. இந்த சாதி வேட்கையை , வெறியை திருமா, கிருஷ்னசாமி,A.C.சன்முகம்,ராமதாசு,சசிகலா குருப்,வாண்டையார் குருப், சரத்குமார் இந்த வரிசையில் சீமான் இன்னும் பல தேர்தலுக்கு தேர்தல் முளைக்கும் காளான் தலைவர்கள் இவர்கள் ஆதரவுடன் திமுக, அதிமுக இன்ன பிற கட்சிகள் உபயோக படுத்தி கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம் .

தமிழகம்,ஈழம் விவகாரங்களில் நல்லது செய்ய எத்தனித்தாலும் அவரவர் சாதிய அடையாளங்களால் மற்ரொரு சாரார் ஒதுக்குவது உண்மை...

தமிழ் ஈழ பிரச்சைனைகள் , ஈழ போர் நடந்த போது தமிழர்கள் சாதியை மறந்து ஒன்ராக இனைந்தார்கள் இப்போது அது சற்று சுணங்கி உள்ள நிலையைல் வேதாளம் முரு-ங்கை மரத்தில் ஏரியய்து போல் தமிழ் இளைஞ்சர்களுக்கு சாதி வெறி மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது..

ஈழத் தமிழர்களுக்கு துரோகிகளால் மட்டும் இழிவு ஆனால் இந்திய தமிழர்களுக்கு துரோகிகளாலும்,சாதி வெறியர்களாலும் என்றுமே இழிவு

No comments:

Post a Comment