தமிழ் கடவுளிடம் முறையிடல்!!
நம்பியோர்க்கு கடவுள் , பகுதறிவோருக்கு அது கல்..
அரசினிடம் வேண்டினோம், மந்திரியிடம் வேண்டினோம் , உலக மக்களிடம் வேண்டினோம் , தலைவர்களிடம் வேண்டினோம், உலகமே செவிடான நிலையில் தமிழின துரோகிகள் கோலோச்சும் இந்த கொடூர உலகத்தில் இன்று இனம் அழிக்கும் செவிட்டு ஈன அரசனிடம் புலம்புவதை விட கல்லே சிறந்தது என ..
அணைத்து திசைகளில் ஆயுதங்கள் கொண்டு சுமார் இலட்சத்திற்கும் மேலான தமிழ் மக்களை கொல்ல சூல்நிதிருக்கும் ஆபத்தை களைய , துர் கணங்களை ஒழிக்க ஒரு முயற்சியாக தமிழ் கடவுள் முருகனிடம் வேண்டுதல் பிராத்தனை ..
கல்லோ, கடவுளோ அது தமிழ்ரின் பெரும்பாலான கலாச்சாரத்தில் , நம்பிக்கைகளில் ஒன்றாகியது தான் முருகன் எனும் தமிழ் கடவுள் ..
தமிழினத்தின் நாயகன் என காவியங்கள் படித்த அந்த உணர இயலா சக்தியிடம் வேண்டுதலை வைப்போம் ..
பகுத்தறிவு பேசி இன்று சுய லாபத்தால் சிறுமதி என குறுகி போன துரோகிகளும் ஒரு கருங்கல்லும் ஒன்று தான்.. இன்றைய தேதியில் தமிழ் ஈழத்தை பற்றி பேசினால் குற்றம், விவாதித்தால் குற்றம் என ஆகி இன்று தமிழ் மக்கள் பேச்சுரிமை குரல்வளைகள் நெரிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் இது வரை நாம் தமிழ் ஈழ மக்கள் அவதிகளை பற்றி மேற்கொண்டு பரப்புரைகளை விட இன்னும் வீரியமாக உணர்வு பூர்வமாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டியுள்ளது ..
அதற்காக எந்த ஒரு தேர்தல் கமிஷனும், ஏவல் துறையும் குறுக்கீடு செய்ய இயலாத ஒரு உணர்ச்சி பிரவாக பரப்புரையாக இந்த பிராத்தனைகள் அமையும் வகையிலும் பலதரப்பு மக்களை குறிப்பாக பெண்களை இந்த ஈழ மனித அவலம் சென்று சேரும் வகையில் வழிபாட்டு தளங்களில் சிறப்பு பிராத்தனைகளை அடுத்த கட்ட போராட்டமாக , பிரச்சாரமாக ஆரம்பித்து வைப்போம் ..
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் தமிழ் இன துரோகிகளின் அழிவை வேண்டி தமிழ் மக்களை இன்னலில் இருந்து மீட்டு எடுக்க ஒரு சிறப்பு வேண்டுதல் நடத்தினால் என்ன ?
பகுத்தறிவு பாசறையில் இப்படி ஒரு கேள்வி விழுவது தவறு தான் .. ஆனால் இன்று உள்ள சூழ்நிலையில் எந்த ஒரு கெடுபிடியும் இல்லாமல்,ஏவல் துறை அனுமதி வாங்க அவசியம் இல்லாமல் மக்களிடையே ஈழ விவாகரத்தை எடுத்து செல்ல இது போன்ற உத்திகள் அவசியம் ஆகின்றன ? என்ன நினைக்கிறீர்கள் ?
கல்லாய் போன தமிழ் இன துரோகிகளை நம்புவதை விட கல் சிலையே ஆயினும் அதனையும் நம்பி முறையிடுவதன் மூலம் தற்போதைய பகுத்தறிவு அரசனின் கல் மனதை சுட்டி காட்டி இரட்டை வேடத்தை கிழிப்போம்
இதே போல் சர்ச்சுகளில் , மசூதிகளில் தமிழார் நலன் வேண்டி சிறப்பு கூட்டு பிராத்தனைகளை தொடர்ச்சியாக வைத்தால் என்ன ?
தமிழ் புத்தாண்டில் ஆலயங்களில் கூட்டம் நிரம்பி வழியும் சமயம் இது போன்ற தமிழார் நலம் வேண்டி சிறப்பு பிராத்தனைகள் மக்களிடையே இப்பொது மழுங்க செய்யப்படும் இலங்கை மனித அவலத்தை இன்னும் வீரியமாக எடுத்து செல்லும் .. குறிப்பாக இலங்கை விவகாரத்தில் அவ்வளவாக தெரியாத குடும்ப பெண்களை ஈழ விவகாரம் சென்று அடைய ஒரு வாய்ப்பாக அமையும் .
மக்கள் குறிப்பாக பெண்கள் செண்டிமென்டலான விஷயத்துக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பார்..
** சர்வதாரி வருடம் பிறந்ததால் ஆண்களுக்கு ஆபத்து என்று வீடு தோறும் விளக்கு வைத்தது
** நல்லதாங்கால் விவகாரத்துக்காக அண்ணன்மார்கள் தங்கைக்கு பச்சை சீலை எடுத்து கொடுத்தால் .. { இந்த விவகாரத்தில் பிரிந்து இருந்த அண்ணன் தங்கை கூட சேலை எடுத்து பகிர்ந்து கொண்டதை கண்டுள்ளேன் ) வீட்டை ஒதுக்கிய அண்ணன்கள் தேடி சென்று தங்கைகளுக்கு சேலை எடுத்து கொடுத்தனர்
இதே போன்று ஏப்ரல் பதினான்கு (தமிழ் புத்தாண்டு ) கூட்டு வழிபாடுகளுடன் வீடு தோறும் விளக்கு ஏற்றி ஈழ விவகாரத்தை தமிழகமெங்கும் சுடர் விட செய்யவோம். ஈழ விடுதலைக்காக இன்னுயிர் நீதவர்களுக்கும் அஞ்சலியாகவும் மனவலிமை பெறவும் ஒற்றுமை சிறக்கவும் வீடு தோறும் அன்று விளக்கு ஏற்றுவோம்
இலங்கை தமிழர்களுக்காக கூட்டு பிராத்தனை-விசயகாந்த்
இந்திய அரசும் தமிழக அரசும் செயல்படாத நிலையில் தமிழினத்திற்கு மிக பெரிய வரலாற்று துரோகத்தை இழைத்து வருகின்றன. காப்பாற்றும் நிலையில் உள்ளவர்கள் கைவிட்டு விட்டனர். வாடும் இலங்கை தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தே.மு.தி.க. தலைவர் விசயகாந்த் எப்ரல் 14 தேதி காலை 10 மணி முதல் 11 மணிக்குள் சாவின் விளிம்பில் இருக்கும் இலட்சக்கணக்கான தமிழர்களுக்காக கூட்டு பிராத்தனை செய்ய கேட்டு கொண்டுள்ளார்
அனைத்து ஆலயங்களிலும், மசூதிகளிலும்,மாதா கோவில்களிலுக் இதர வழிபாட்டுதலங்களிலும் சிறப்பு பிராத்தனைகளில் கலந்து கொண்டு மனரீதியாக வலுபடுத்த கேட்டு கொண்டு உள்ளார்
No comments:
Post a Comment