தமிழகத்தில் ஈழ விவகாரத்துக்கான போராட்டங்களில் இப்போது அவசர தேவை ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக மிக அதிக அளவில் வட நாட்டு ஆங்கில சேனல்களான் என்.டி.டி.வி(இடது சாரிகள் சார்பு), டைம்ஸ் நவ், சி.என்.என். ஆகியன இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடும் செய்திகளை,காட்சிகளை கிளி பிள்ளை சொல்வதை போல் மீண்டும் மீண்டும் திரித்து வெளியிட்டு இந்திய மக்களை குழப்புகின்றனர். இலங்கை அரசு அங்கு தமிழர்கள் நலமாக இருக்க அரும்பாடு படுவதை போலவும் போராளிகள் தான் தமிழர்களை கொன்று குவிப்பதை போலவும் பொய் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
இந்த வட நாட்டு மீடியாக்கள் தமிழக பிரச்சனைகளை பொதுவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழகத்தில் தன்னை எரியூட்டை மாண்ட பதினாறு பேர் செய்திகளை அவ்வளவாக ஒளிபரப்பவில்லை.. வட இந்தியர்கள், வடக்கு பகுதியின் சிறு சிறு பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் இலங்கை பிரச்சனையின் வரலாறு தெரியாமல் அப்பட்டமாக இலங்கை அரசின் இந்திய பிரதி-நிதிகள் போல் செயல்பட்டு பொய்களை பரப்புவதை கண்டிக்கத்தக்கது.
இது வரை பல வகையில் ஈழ விவகாரத்துக்காக் போராடும் பல இயக்கம்,கட்சி சார்ந்த நன்பர்களே.. தமிழர்களை இரண்டாம் பட்சமாக பார்க்கும் இந்த வட நாட்டு மீடியாக்களுக்கு நம் கண்டங்களை பதிய செய்ய வேண்டிய தருணம் இது.. தமிழகத்தில் உள்ள பகுதி வாரியாக உள்ள அல்லது கேபிள் டிவி தலைமை அலுவலக்ங்களை தொடர்பு கொண்டு இலங்கை அரசின் பொய் செய்திகளை வெளியிடும் இந்த வட நாட்டு சேனல்களின் ஒளிபரப்பை மூன்று தினங்கள் வரை ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் நிறுத்தி தமிழர்கள் எதிர்ப்பை அந்த சேனல்களின் இலங்கை ஆதரவு கொள்கைக்கு எதிராக பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது..
குறிப்பு: இலங்கை அரசின் இரானுவ அமைச்சகம் இந்த வட நாட்டு சேனல்களை சார்ந்த சில நிருபர்களை போர் நடைபெறும் பகுதிக்கு அழைத்து சென்று சுற்றி காட்டி தாங்கள் சாதித்ததாக கதைத்து அங்கு சில தமிழர்களை மிரட்டி இலங்கை அரசு தமிழர்களுக்கு நல்லதையே செய்வது போல் பேட்டி கொடுக்க வைத்து உலக தொலைகாட்சிகளையும், வட நாட்டு தொலைகாட்சியையும் எமாற்றி உள்ளது.. வெகு விரைவில் இந்த பொய் ஒளிபரப்பு செய்யபட போகின்றன
No comments:
Post a Comment