Thursday, April 23, 2009

இனப்படுகொலை குட்டை தானே அம்பலமாக்கியுள்ள இலங்கை அரசு

தமிழர் இனப்படுகொலை திட்டத்தை தானே அம்பலமாக்கியுள்ள இலங்கை அரசு

இலங்கையில் உள்ள செஞ்சிலுவை சங்கம் இன்ன பிற தன்னார்வ அமைப்புகள் மற்றும் பலர் பாதுகாப்பு வலைய பகுதியில் இரண்டு இலட்சத்திறகும் அதிக மக்கள் உள்ளனர் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திய போது அதனை இலங்கை அரசும், இரானுவமும் தொடர்ந்து மறுத்து மக்கள் எண்ணிக்கையை மிக குறைவாக காட்டியுள்ளது. சுமார் நாற்பதாயிரம் மக்கள் தான் பாதுகாப்பு வலய பகுதியில் இருக்கின்றனர் என்று தமிழ் மக்கள் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதன் மூலம் தான் மேற்கொண்டு வரும் பாரிய இனப்படுகொலை முயற்சியை எளிதில் மறைத்து விடலாம் என திட்டம் இட்டு இப்படி ஒரு பொய் பரப்புரையை மேற்கொண்டு வந்தது..

இலங்கை அரசு திட்டம் இட்ட தமிழ் இனப்படுகொலையின் உச்ச கட்டமான கொடூர ஐம்பதாயிரம் தமிழர்கள் படுகொலையை அது தமிழ் புத்தாண்டிற்கு அடுத்த அடுத்த தினங்களில் ஆரம்பித்து ஒரே நாளில் ஆயிரத்து ஐனூரு தமிழர்களை உலகில் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி கொன்று குவித்து மேற்கொன்டு தாக்குதலை தொடர்ந்தது .. இந்த கொடூர தாக்குதலில் இருந்து காத்து கொள்ள தத்தளித்த மக்கள் செய்வதறியாது திகைத்து மாற்று இடம் செல்கையில் நயவஞ்சகமாக இலங்கை இரானுவம் அவர்களை மனித கேடயமாக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது.. இன்று உலகிற்கு தான் உலகின் மிக பெரிய மீட்டெடுத்தல் சாதனையை செய்து வருவதாக பொய் பிரச்சாராம் செய்து வருகிறது... இதனை விட ஆர்வமாக இலங்கை இனபடுகொலை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளதாக ஒரு கணக்கை வெளியிட்டு உள்ளது. வழக்கம் போல் இதுவும் ஒரு பொய் கணக்காக இருக்க கூடும்..

நான் கு நாட்கள் முன் வரை நாற்பதாயிரம் மக்கள் தான் பாதுகாப்பு வலயத்தில் இருக்கிறார்கள் என உலகின் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும், மீடியாக்களுக்கும், ஐ.நா கூட்டமைப்புக்கும் தொடர்ந்து வலியுறுத்திய இலங்கை இன்று கடந்த மூண்று நாட்களில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீட்டதாக வெளியிடும் கணக்கு இலங்கை இன படுகொலை அரசு மேற்கொள்ள இருந்து ஐம்பதாயிரத்திறிகும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை திட்டத்தை தானே இன்று உலகிற்க்கு அம்பலபடுத்தி உள்ளது..

உலக தலைவர்கள், ஐ.நா போன்ற அமைப்பின் அதிகாரிகள் அனைவருக்கும் இது போன்று முன்னுக்கு பின்னாக பொய் தகவல்களை அளித்து பாரிய இன படுகொலை செய்து வரும் இலங்கை அரசின் சுய ரூபத்தை உணர்ந்து சர்வதேச போர் குற்றங்களின் அடிப்படையில் இலங்கை அரசின் படை அதிகாரிகள் , அரசாங்க தலைவர்களை சுமார் பத்து ஆயிரத்திற்கும் அதிகாமான அப்பாவி தமிழர்களை குறிப்பாக பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை கொன்ற பாவத்துக்காக தூக்கில் இட வேண்டும் என சூளுரைப்போம்

இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகம் ஏப்ரல் 16, மார்ச் 11 தேதிகளில் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு அதில் நாற்பதாயிரம் மக்கள் தான் பாதுகாப்பு வலய பகுதியில் இருப்பதாக திரித்து கூறப்பட்டுள்ளது
http://www.defence.lk/PrintPage.asp?fname=20090416_08
////An estimated number of 40,000 odd people are believed kept forcibly by LTTE terrorists through sheer intimidation and torture inside the LTTE's 'open-human' prisons

http://www.defence.lk/new.asp?fname=20090311_02

/////////////Only a few sacks of grains, flour and a little clean water is left for over 40,000 people who have to struggle with each other for what is left.
///////////////"These people are denied of their freedom of choice and taken to the edge of suffering any human can undergo", an aid worker at Vavuniya revealed, commenting on the ground realities in the non-liberated land territory with over 40,000 people hostage


ஆனால் பழைய செய்திகளுக்கு எதிர்மறையாக இன்று சுமார் ஒரு இலட்சம் தமிழர்களை மூன்று நாட்களில் மட்டும் மீட்டதாக ஒரு கணக்கை வெளியிட்டு உள்ளது இலங்கை அரசு

http://defence.lk/new.asp?fname=20090422_RESCUE


இப்படி மீண்டும் மீண்டும் பொய்யை கூறி, பிரசாரம் மேற்கொண்டு உலகை முட்டாளாக்க பார்கிறது இலங்கை அரசு .. இதனை ஆமோதிக்கிறது இந்திய அரசு..

இதன் மூலம் அம்பலமாகியுள்ளது இலங்கை அரசின் இனப்படுகொலையின் உச்சகட்ட ஐம்பதாயிரம் தமிழர்கள் கொலைத் திட்டம்.. உலகெங்கும் போராடி வரும் புலம் பெயர் தமிழர்களின் தொடர் போராட்டத்தினால் இந்த பாரிய படுகொலை திட்டம் முன்னதாக எடுத்து உரைக்கப்பட்டு இலங்கை அரசு ஒரே இரவில் உச்ச கட்ட கொடூர தாக்குதலால் தமிழ் இனத்தை கொன்று குவிக்க முடியாமல் சிறிது சிறிதாக கொன்று குவித்து வருகிறது..

2 comments:

லூசன் said...

நானும் இதே போல ஒரு பதிவை என்னுடைய வலைப்பூவில் இட்டுள்ளேன். http://irakasiyam.blogspot.com

நீங்கள் சற்றே தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். தொடரட்டும்.

வசந்தசேனன் said...

yes, great.. We have written in same frequency

Post a Comment