இன்று பெரும்பாலோனற்கு 'மயிர்' என்பது ஒரு அலட்சிய பொருள்.. ஆனால் ஒரு மனிதனின் வாழ்கையில் சலனமில்லாமல் பல தாக்கங்களை இந்த மயிர் (தலை முடி மட்டும் கணக்கில் கொள்க ) நிகழ்த்திக் கொண்டு உள்ளது என்றால் மிகையாகாது .. குறிப்பாக ஆண்களில் பலர் தன் தலை முடியை பற்றி அதிக கவனம் கொள்வது கிடையாது.. ஒரு மனிதன் கருப்போ , சிவப்போ , நெட்டயோ ,குட்டையோ ஆனால் தலை மயிர் அவனின் தோற்றத்தை,வயதை நிர்ணயிக்கிறது. முடி வளர்ச்சி எண்பது இயற்கையாக உடலை பாதுகாக்க உடலில் இருந்து உரோமகால்களின் மூலம் வளர்ச்சி பெரும் ஒரு வேதி பொருள் ..
உண்மையில் மயிர் என நாம் அலட்சிய படுத்துவது கவர்ச்சியின் முக்கிய பொருள் .. ஒரு ஆடவனின் தலை முடியினன் செறிவை பொறுத்தே இன்று பெரும்பாலோனோர் அவனின் வயதை குத்து மதிப்பாக கணகிடுகின்றனர்... ஆண்களில் சிலருக்கு சொட்டை , ஏறு நெத்தி விழும் பொது அவர்கள் வயது அதிகமானவர்கள் போல் தோற்றம் கொள்கின்றனர்..
ஒவொரு மனிதர்களும் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தலை முடி உதிர்வதை பற்றி கவலை கொண்டு அதற்காக சிறப்பு எண்ணைகளை , வைத்தியங்களை மேற்கொண்டு இருப்பார் ... பெண்களுக்கு உதிரும் தலை முடிக்கு எர்றவாறு பெண்கள் இன்று தங்கள் கேசத்தின் அமைப்பை போனி டெயில் , பாப் என்று மாற்றி அமைத்து கொண்டு இருப்பார்..
அது சரி இன்று தலை முடி உதிர்வதின் பின்புலம் தான் என்ன
தலை மயிர் கீழ்க்கண்ட காரணங்களால் உதிரும்
** அதீத கவலை , பசி , தூக்கமின்மை , உடலில் சத்து பற்றாகுறை
** வீரியாமான மருந்து உட்கொள்வாராயின் முடி உதிரும் குறிப்பாகா புற்றுநோய்க்கு
உட்கொள்ளும் கீமோதெரபி மருந்துகள்
** புழு வெட்டு எனப்படும் தலையில் சிலருக்கு வரும் ஓட்டுகளால் ஏற்படும் வழுக்கை
மேற்கொண்ட முறைகளாம் தலை முடி உதிர்வதை வைத்தியத்தின் மூலம் குனபடுதலாம் அல்லது சில சத்து மருந்துகளை உட்கொள்வது மூலம் கட்டு படுத்தலாம் ..
ஆனால் இதற்கு அப்பாற்பட்டு பெரும்பாலான ஆண்களுக்கு தலை முடி கொட்டுவதற்கு பாரம்பரிய ஜீன்கள் காரணமாகின்ரான .. தங்கள் குடும்பங்களில் தந்தை அல்லது மூதாயருக்கு வழுக்கை இருப்பின் ஆண்களுக்கு வழுக்கை வரும் சாத்தியகூறுகள் மிக அதிகம் ..
இதனை "Male Bald pattern" என்று ஆங்கிலதில் கூறுவர் .. இதற்கு குணபடுதும் மருந்து என்று எதுவும் கிடையாது.. ஆனால் ஆங்கில மருதுவ முறையில் சில மாத்திரைகள் , தைலங்கள் உடலின் முடி உதிர்வதற்கான செயல்பாடுகளில் மாற்றம் விளைவிக்க கூடிய வெதி மாற்றங்களை நிகழ்த்தும் வல்லமை உடையன ..
பாரம்பரிய வலுக்கை விழ காரணம் என்ன ?
ஆண்களின் உடலில் ஆண்ட்ற்றொஜன் எனும் ஆண் பால் ஹார்மொன் மிக அதிகமாக சுரக்கும் பொது அது இரத்ததில் கலந்து உடலெங்கும் பரவுகையில் இந்த ஹார்மொனின் வீரியதால் தலையில் உள்ள மெல்லிய உரொம கால்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.. இதன் அறிவியல் உண்மை யாதெனில் வழுக்கை உள்ளவர்கள் வயதானவர்கள் என நினைப்பதை விட சராசரிக்கும் அதிகமாக சுரக்கும் ஆண் இனபெருக்க ஹார்மொங்களால் சிறப்பாக இருக்கும் வாலிபர்கள் தான் ..
ஆங்கில மருந்தின் ஆபத்து!!
பாரம்பரிய முடி உதிர்வதை தவிர்க்க ஆங்கில மருத்துவத்தில் கொடுக்கபடும் சில மருந்துகள் செயல்பாடுகள் யாது எனில் அது உடலில் ஆண் பால் ஹார்மொன் ஆன ஆண்ட் ரொஜனை கட்டுபடுத்தும் .. இதனால் இரத்ததில் ஆண்ட்ரொஜன் அளவு குறைந்து அது உரொம கால்களை சிதைப்பது கட்டுபடுத்தபடுகிறது.. இதற்கு பக்க விளைவுகள் உண்டு இந்த் மருந்தை தொடர்ந்து உட்கொண்டால் உடலில் ஆண் இனபெருக்க செயல்பாடுகளில் குறைவு ஏற்பட சாத்திய கூறுகள் உண்டு .. இதனை போல தலைக்கு தேய்க்கும் மருந்துகள் உண்டு .. மிண்டாப் என லெபிலில் விற்கபடுகின்றன அவைகள் தலைமுடி உரொம துவாரங்களில் ஊடுருவி ஆண்டரொஜன் செய்ல்பாடுகளை குறைக்கிறது..
ஆகையால் தலை வழுக்கை உள்ளவர்கள் அதனை நினைத்து கவலை படுவதை விட்டு விட்டு , பணத்தை செலவழிப்பதை விட்டு விட்டு அன்றாட வேலைகளை கவனியுங்கள்
No comments:
Post a Comment