Sunday, February 15, 2009

நீயா.. நானா..

விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா டால்க் ஷோவை பற்றி சில வதந்திகள் கிளம்பிய போது அதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தின் காரணமாக சில நாட்கள் முன் அதன் அடுத்த கட்ட ஒளிபரபுகளுக்கான சூட்டிங் பிரசாத் ஸ்டுடியோவில் நடை பெற்ற போது அரை நாள் முழுவதும் இருந்து அதை பார்த்தேன்.

பட பிடிப்பு முடிந்த பின் கோபியை சந்தித்து ஒரு இருபது நிமிடம் நிகழ்ச்சியின் விவரம் ,அவர்கள் குழுவின் செயல்பாடுகள் ,எதிர்கால திட்டம் போன்றவற்றை பற்றி பேசிய போது சில தகவல்கள் கிடைத்தன

வதந்திகள் விவரம் :
---------------------------
நீயா நானா முன்னரே அமர்ந்து பேசி ஜோடிக்கப்பட்ட நிகழ்ச்சி --தவறு
கோபி ஒரு முன்கோபி ---தவறு
பேசுவது பெரும்பாலும் கட் செய்ய பட்டு விடும் ---தவறு
குறிப்பிட் சிலருக்கு மட்டும் பேச வாய்ப்பு கிடைக்கும் இன்ன பிற ---தவறு

இந்த வதந்திகள் ஒரு நபர் இணைய தளங்கள் , இமெயில் மூலம் கிளப்பி விட்டது ..

உண்மை நிலவரம் :
--------------------------

**நீயா நானா முற்றிலும் நேரடியான ஒரு டால்க் ஷோ
**கோபி எளிமையான நபர் .. எளிதில் பழகும் குணாதிசியம் கொண்டவர் ,நகைசுவை விரும்பி .
**அளவுக்கு மீறி பேசினால் , குறிப்பாக தனி மனித ,தனி பட்ட நிறுவன தாக்குதல் இருந்தால் மட்டும் எடிட்டிங்கில் கட் செய்கின்றனர்
**பேச வாய்ப்பு நீங்கள் எவ்வளவு ஆர்வமாக முயல்கிறீர்கள் என்பதை பொறுத்து மட்டும் கிடைக்கிறது

நீயா நானா குழுவின் அபார உழைப்பு பாராட்டத்தக்கது . ஒரு இயக்குனர் ,சில உதவி இயக்குனர்கள் , கோபி , கள பணியாளர்கள் என பம்பரமாக சுழன்று பட பிடிப்பில் பணி புரிகின்றனர்.

இன் நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் திரைக்கு பின்னால் இருக்கும் இயக்குனர்,கோபியின் பேச்சு திறமை எனில் மிகையாகாது .

ஷோவுக்கு பேச்சு திறன் உள்ள ஆட்களை தேர்வு செய்ய தனி குழு .. தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த தலைப்புகளுக்கு சம்பந்தமாக நிறைய கற்று கொள்கிறார்கள் . சில சமயம் துறை சார்ந்த நிபுணர்களை அழைக்கிறார்கள் .

மாதத்தின் ஒரு குறிபிட்ட தினங்களில் மட்டும் அந்த ஒரு மாதத்துக்கான நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக இரவு பகல் உழைத்து படம் பிடித்து வைத்து கொள்கின்றனர் .
பெரும்பாலான தலைப்புகள் சுருதி குறைந்து செல்லும் அப்போது பல வழிமுறைகளை கையாண்டு எப்பேர்பட்ட சப்பையான தலைப்பாக இருந்தாலும் சுவாரசியமாக கையாண்டு அதன் சுருதியை ஏற்றி விடுகின்றனர் .
ஆறு கேமராக்கள் பட பதிவிற்காக .. எந்த ஒரு தலைப்பும் பட பதிவின் பொது இப்படி தான் செல்லும் என்பதை நிர்மாணிக்க முடியாமல் அங்கும் இங்கும் அலை பாய்ந்து செல்கிறது .. ஒரு சிலர் பந்தா விடுவதும , வேறு சிலர் உணர்சிவசபடுவதும் ,கூச்சலிடுவதும் என நேரடி படபதிவில் இடையூறுகளை உருவாக்குகின்றனர் ..

கோபி நன்றாக சிண்டு முடியும் கலையில் தேர்ந்தவர்ராக் இருக்கிறார்l . இரு அணியையும் சீண்டி விட்டு மாறி மாறி சூடான விவாதங்களை கிளப்பி விடுகிர்றார் .. அதே சமயம் பட பிடிப்பு முழுவது கோபி தானாகவே கையாள்வதில்லை அவர் காதில் இருக்கும் சிறு மைக்ரோ ஸ்பீக்கர் வழியாக இயக்குனர்கள் குழு கேள்விகளை ,பாய்ண்டுகளை எடுத்து கொடுக்கின்றனர் . ஆக கோபி ஒரே சமயத்தில் அணியினர் பேசுவதையும் , இயக்குனர் இடம் இருந்து ஹெட் போனில் வரும் கருத்துகளையும் கேட்டு அதற்கேற்றார் போல நிகழ்ச்சியை நடத்தி செல்கிறார்
அவரிடம் பேசியதிலிருந்து சமுதாயத்தின் நிஜ பிரச்சனைகளை
வெளிச்துக்கு கொண்டு வருவது, அதனை முற்றிலும் ஒரு நேரடி டாக் ஷோவாக மட்டும் கொண்டு செல்வது , அவர்கள் குழுவின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை , இயக்குனர் ,தயாரிபளரிடம் வைத்திருக்கும் ஒரு நல்ல புரிதல் மூலம் குறுகிய காலத்தில் நல்ல பெயரை ,புகழை பெற்று இருக்கிறார் . தொடர் பட பிடிபானாலும் கடுமையாக உழைக்கிறார், பேசி கொண்டே இருக்கறார் ..

அவர் இதற்கு முன்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பனி புரிந்துள்ளதாக் தெரிகிறது , தகவல் தொழில் நுட்பம் சார்பாக நிறைய தெரிந்து வைத்துள்ளார்
. ஆர்குட் ப்ரோபைல் வைத்துள்ளார் . ஆனால் சில சமயம் மட்டும் ஆர்குட் வந்த பார்ப்பதாகவும் , பெரும்பாலும் இமெயில் மட்டும் பர்ர்பதாகவும் , அவர் பெயரில் உள்ள ஆர்குட் கம்யூனிடிக்கு சில சமயம் வந்து பார்ப்பது போலவும் கூறினார் . அனால் அவர் குழு உறுப்பினர்கள் பலர் ஆர்குட்டை அதிகம் உபயோகபடுதுகின்ரானர் போல ... அவர் எதிர் கால திட்டமாக் ஒரு பயிற்சி நிறுவனம் அமைக்க உள்ளார்

மிக நல்ல நம்பகமான,சமுதாய பிரச்சனைகளை அலசும் நேரடியான ஒரு டாக் ஷோ .. விரும்பி பாருங்கள் .

No comments:

Post a Comment