Sunday, February 15, 2009

சுற்றித் திரியும் பேய்கள் !!

நகர்புரத்தில் வாழும் யாரிடமும் பேய்,பிசாசு இருக்கிறதா என்றால் உடனடி பதில் "இல்லை" என வரும்.

ஆனால் கிராம புறங்களுக்கு சென்றால் ஊர் ஊருக்கு கிராம பெரூசுகளில் இரூந்து ,சிறுவர் வரை பல பேய்களை (கதைகளை ) உலவவிட்டு கொண்டிருப்பர்.ஊர் ஊருக்கு ஒரு இடிந்த பேய் வீடு ,என்றோ எவனோ தூக்கு போட்டு மாண்ட புளியமரம் , முனி இருப்பதாக கூறும் "ஒத்த பனை மரம்" என பீதியை கிளப்புவார். சிலர் பேய்களை ,முனியை நேரில் கண்டு மீண்டதாக 'திகில்' அனுபவத்தை கூறுவார்.

எனக்கு பரிச்சயமான கிராமத்தில் ஒரு சாலையோர கிணறு உள்ளது.அதில் ஒரு பெண் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட நாள் முதல் இரவானால் அந்த கிணற்றை தனியாக கடக்காமல் பொறுத்து இருந்து அவ்வழியே செல்வோர் "குரூப்பாக" கடப்பார். ஏன் என்றால் அந்த கிணற்றில் இரவானால் அழுகை சத்தம் கேட்பதாக ஒரு புரளி ..

கிராமத்தில் அல்லது புற நகர் பகுதியில் உள்ள பெண்களுக்கு மட்டும் அநியாயத்துக்கு பேய்கள் பிடித்து கொண்டு ,தலை விரி கோலமாக பேயாட்டம் போட்டு கொண்டு இருப்பார்.இன்று தகவல் தொழில் நுடம் சார்ந்த இன்ன பிற துறைகளில் கற்று தேர்ந்த பெண்களுக்கு நான் கண்ட வரை பேய் பிடிதது இல்லை ,அது போல் நகர் புறங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாழும் பெண்களுக்கோ,ஆண்களுக்கோ பேய் பிடிப்பதில்லை ..

உங்களுக்கு தெரிந்த உங்க ஊர் பேய்களை இங்கு உலவ விடுங்கள்,
பேய் இருக்கிறதா ,இல்லையா ?
குறிப்பாக கிராமத்து பெண்களை ஆண்களை பேய்பிடித்து ஆட்டுவது ஏன் ?

விவாதிப்போம் நண்பர்களே

பேய் உலவும் நேரம் இதை தொடர்கிறேன் !!

சில குடும்ப பெண்களுக்கு பேய் பிடித்து ஆடுவதை கண்டு இருக்கிறேன். அவர்கள் அமைதியானவர்களாக இருபினும் பேய் பிடித்து விட்டால் தலை விரி கோலமாக

உதாரணத்துக்கு ஒன்று

" டேய ! நான் தாண்ட புல் அடிச்சு மப்புல ஆடி குப்புற விழுந்து லாரில அடிபட்டு செத்த ராமசாமி" எனக்கு ஒரு குவார்ட்டர் ஊத்துடா என பேய் பிடித்து கூறுவதையும், சாராயம், சிகரட் என அந்த பெண்கள் கேட்டு வாங்கி குடிப்பதும் விசித்திரமான ஒன்று. இந்த செய்கையை பார்த்தும் பெரும்பாலானோர்

"ஆமாங்கானே! நம்ம ராமசாமி மாதிரி இந்த பொம்பளை ராவா அடிக்குது இது ராமசாமி பேய் தான் என உச்சு கொட்டுவதையும் காணலாம் "

இது நான் கண்ட நிஜம்!!

என் உறவினர் வீட்டருகே ஒரு புது மண பெண்ணுக்கு பேய் பிடித்து விட்டது. ஏன் என்று கேட்ட பொது அந்த பெண் அதற்கு முந்தய தினம் இரவில் வீட்டிற்கு சந்தையில் இருந்து குறுக்கு வழியில் வந்தாதாகவும் திடீரென்று திடுகிட்டதாகவும் கூறுவார்.

மேற்கொண்டு என்ன பேய் என்று விசாரிக்கையில் அது அவர்கள் வீட்டருகே ஒரு முரடன் புத்தி சுவாதினமில்லா தாயை அடித்து சாக்கில் இட்டு அந்த குறுக்கு பாதையில் பட்டாசு ஆளை கழிவுகளை எரிக்குக் போது கொழுந்து விட்து எரியும் தீயில் இட்டு கொன்றதாக சொல்லி அந்த பெண்ணுக்கு பிடித்து அந்த தாயின் பேய் என சொல்லினர்.

அந்த பேய் பிடித்த பெண்ணும் அந்த புத்தி சுவாதினமிள்ள பெண்ணை போல நடந்து ,ரிபன் அணியாத அந்த புது மண பெண் பேயை போல சிவப்பு கலர் ரிப்பன் தான் வேணும் என அடம் பிடித்து வாங்கியதாக கூறினர்.இதை கேட்ட போது எனக்கும பேயின் மீதான் பீதி தொற்றியது.

பேய் இருக்கிறதா ?
எதற்கு பேய் பிடித்தவர்கள் பேயாக உள்ளவர்களை போல் பாவனைகள் செய்ய வேண்டும் ? இல்லை இது "சந்திரமுகி" படத்தில் வருவதை போன்ற குறுகிய கால மன வியாதியா ?

அதாவது ஒரு நிகழ்வை செவி வழியாக கேட்டு அதற்கேற்றார் போல் பாவனை செய்யும் மண வியாதியா இந்த "பேய் ஆட்டம்".

நோஞ்சான ஆக இருக்கும் பெண்கள் கூட பேய் ஓட்டும் போது பெரும் கல்லை தூக்கி கொண்டு ஓடி அந்த பேய் பிடித்த இடத்தில போடுவது வியப்பானது. அவர்கள் உடலில் அந்த முரட்டு பேய் பலம் எவ்வாறு வருகிறது ?
ஜூவி யில் ஒரு கட்டுரை வந்தது சமீபத்தில் ஒரு கிராமமே "தண்ணீர் கேட்டு கதவை தட்டும் பேய்" பீதியால் உறைந்து போய் இருப்பதாக.

த்டீறேன்று வீடுகளின் கதவுகள் தண்ணீர்,தண்ணீர் என கேட்டு தட்டபடுவதாகவும்.கதவை திறந்து பார்தால் யாரும் இருப்பதில்லையாம். அதனால் ஒட்டு மொத்த ஊரும் இரவானால் கதவை தாளிட்டு யார் கதவை தட்டினாலும் திறபதில்லையம்.

இதில் கொடுமை என்ன வென்றால் இந்த பீதி பரவிய சமயம் பார்த்து அவூருக்கு ஊசி,மணி விக்க வந்த ஒரு முதிய பெண்மணி தண்ணீர் தாகத்துக்காக ஒரு சிலர் கதவை தட்ட அனைவரும் இது பேய் என கதவை நன்று தாளிட்டு கொண்டனாராம்..

ஆக்ஷனில் இறங்கும் ஜூவி உளவியல் நிபுணரை அழைத்துக் கொண்டு அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்து கதவை தட்டி தண்ணீர் கேட்டு ஒடி விடுவது எதோ ஒரு விஷமக் காரர்களின் குறும்பாக இருக்கலாம் இல்லை மன வளர்ச்சி குன்றிய ஒருவரது செயல் ஆக இருக்கலாம் என கூறி மக்களிடம் விliபுனர்வை ஏற்படுத்திய முயன்றுள்ளனர்

ஆக உளவியல்,அறிவியல் படி பேய்கள் இல்லவே இல்லை என ஓங்கி கூறுவார். அனால் இந்த பீதி கண்ட மக்கள் கூறும பேய் கதைகள் நமக்கு கிளியை ஏற்படுத்தும்.

அதை விட கொடுமை இந்த பேய் ஓட்டும் கோடாங்கிகள். பேய் பிடித்தவரை "அடி அடியேன் அடித்து உதைத்து" துன்புறுத்துவது. காலம் காலமாக் இந்த அதிரடி வைத்தியம் தான் பேய்கள் பலனவை விரட்டி உள்ளன இதற்கு மாற்றாக உளவியலில் துன்புறுத்தாமல் குறுகிய சித்த பிரம்மையை போக்க வழிமுறைகள் உள்ளனவா ?

**குறிப்பாக கிராமத்து பெண்களை ஆண்களை பேய்பிடித்து ஆட்டுவது ஏன் ?
**எதற்கு பேய் பிடித்தவர்கள் பேயாக உள்ளவர்களை போல் பாவனைகள் செய்ய வேண்டும் ?
**நோஞ்சான ஆக இருக்கும் பெண்கள் உடலில் அந்த முரட்டு பேய் பலம் எவ்வாறு
வருகிறது ?
**பேய் பிடித்தவரை "அடி அடியேன் அடித்து உதைத்து" துன்புறுத்தாமல் குறுகிய சித்த
பிரம்மையை போக்க உளவியலில் வழிமுறைகள் உள்ளனவா ?


இந்த பேய்களுக்கு அடுத்ததாகா கிராமத்து மக்களிடையே இருக்கும் ஒரு நம்பிக்கை

"சாம கோடாங்கி " வாக்கு
"காலகண்டன்" வாக்கு

கோடாங்கி அனைவருக்கும தெரிந்திருக்கும் "காலகண்டன்" கிராமங்களில் அறுவடை முடிந்த சமயம் இரவில் வரும் ஒரு உருவம். சுடுகாட்டு சாம்பலில் பிரண்டு எழுந்து வரும் இந்த கால்கண்டனை பற்றி பல கதைகள் உள்ளன கிராமங்களில். இந்த கால கண்டனும் நடு நிசியில் வீடுகளின் முன் சென்று குறி சொல்லுவான் .. அவன் சொல்லும் வாக்கு பலிப்பதாக ஒரு ஐதீகம்

இக் கட்டுரையின் நோக்கம் கிராமத்து மக்களிடையே ஊன்றி விட்ட சில அசட்டு நம்பிக்கைகளை ஆராய்ந்து , அவற்றிகாந தீர்வுகளை விவாதிக்க

சாமக் கோடாங்கி!

சாமத்துல "சக்கம்மா வாக்கு சொல்றா" "நல்ல காலம் கூடிவருமுனு கூவி சொல்றான்னு " நல்ல காலம் பொறக்குது அம்மா தாயேநு" ஒரு குருப் கையில குடு குடுபையா வைச்சிகிட்டு சுத்துவாங்க.

இந்த சாமக் கோடாங்கிகளுக்கு அது ஒரு பரமபரை தொழில் . நான் கேள்வி பட்டவரை அவங்க தேனீ,வடுகபட்டி பக்கம் உள்ள "கம்பலத்து நாயக்கர்" இன மக்களாக் இருபார். இவர்கள் பரம்பரை படி அவர்கள் குடும்பத்தில் ஒருவராவது குறி சொல்ல செல்லனும். அதனால் ஒரு சில கோடங்கிகள் வசதி இருப்பினும் பாரம்பிரிய முறைப்படி "சாமத்துல குறி சொல்ல கிளம்பிடுவாங்க " .இவர்கள் கெட்டப் வித்தியாசமாக் இருக்கும் , முறுக்கு மீசையுமாக, கையில் தடியுடன், பழைய துணி மூட்டையுடன் , நெற்றியில் பெரிய பொட்டுமாக மிரட்சி கொடுக்கு விதத்தில் இருப்பார்

தெருவுல பின்னிரவு ஒரு மணிக்கு சாமக் கோடாங்கி குடு குடுப்பை சத்தமும் , நாய்கள் குறைகிற சத்தமும் கேட்டா எல்லா கிராம மக்களும் தூக்கதுல எழுந்து வந்து கதவுக்கு பின்னாடி வந்து ஒட்டு கேட்பானுக. சாமக் கோடாங்கி சொல்ற வாக்கு பழிக்குமா.

இந்த குறி சொல்ற சாமக் கோடங்கி எதையும் குறிப்பிட்டு சொல்லாம ஒரு 'புதிர்' மாதிரி சொல்லிட்டு போவான். அந்த புதிருக்கு ஆளாளுக்கு வீட்ல ஒரு அர்த்தம் எடுத்துகிட்டு அன்னைக்கு இரவு முழுக்க தூங்க மாட்டாய்ங்க. பெரும்பாலும் நல்ல குறியை மட்டும் சொல்ற கோடாங்கி ஒரு சில வீட்டுக்கு மட்டும் சோகமாந குறியை சொல்லிட்டு போவான்.
அப்படி ஒரு துர் செய்தியை கோடாங்கி சொல்லிடான்ன போதும அந்த வீடே அழுது வடியும்.

இரவு முழுவது வீடு வீடாக குறி சொல்லி செல்லும் கோடாங்கி மறு நாள் காலை அதே வீடுகளுக்கு காணிக்கை வாங்க வருவான் . நல்ல செய்தி சொன்னா வீட்டுல எல்லாம் கோடாங்கிக்கு வெயிட்டான கலெக்ஷன் , துக்க செய்தி சொன்ன வீட்டுல எல்லாம்
பரிகாரம் பண்ண என்ன வழின்னு குடும்பமே சுத்தி உக்காந்துகிட்டு கேட்பாநுக..

ஆக கிராமத்து மக்கள் நம்பிக்கையின் பாத்திரமான இந்த "கோடாங்கி வாக்கு " எந்தளவு உண்மை ?

வசதி இருப்பினும் பிச்சைக்காக இல்லாமல் பாரம்பரிய முறைக்காக சாமத்தில் குறி சொல்ல செல்லும் ஒரு சில கோடாங்கிகளுக்கு உண்மையில் அருள்வாக்கு (predication capbility ) உண்டா ?

காலகண்டன்

தென் தமிழக கிராமங்களில் மக்களை மிரள வைக்கும் ஒரு மனித உருவம் தான் இந்த கால கண்டன் .. கால கண்டன் சாமக் கொடாங்கியை விட அதிக சக்தியை கொண்டவன் எனவும் ,அவன் வாக்கு கண்டிப்பாக பழிக்கும் எனவும் சொல்லுவர் .
இந்த காலகண்டன் சிவனின் அருள் பெற்றவனாக மயானச் சாம்பலில் உருண்டு எழுந்து குறி சொல்ல ஊருக்கு வருவதாக ஒரு நம்பிக்கை .

காலகண்டன் வந்தால் நாய்கள் குரைக்காது எனவும் அவனுக்கு விலங்குகளின் வாயை கட்டி போடும் சக்தி இருப்பதாக ஒரு புரளி .. அதே போல் கால கண்டன் வருகையில் தெருவில் யாரவது தூங்கினால் எழுந்து வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொள்வர் . அவன் பார்வை பட்டால் ஆபத்து என ஒரு வதந்தி உண்டு .

கால் கண்டன் வருவதை அவன் இடும் உரத்த ஓலத்தின் மூலம் தெரு மக்கள் அறிந்து கொள்வர். யாரும் கதவை , ஜன்னலை திறந்து பார்க்க மாட்டார்கள். அவன் மிக வேகமாக் தெருக்களுக்குள் ஓடுவான் .

மயானத்தில் அடிக்கும் மணியை அடித்து கொண்டு ஊளையிட்டு வருபவன் . குறிப்பாக நெல் விளைந்து அறுவடை ஆகும் சமயங்களில் தான் கால கண்டன் வருவான் . கால கண்டன் இரவில் குறி சொல்லி சென்ற பின் மறு தினம் அவன் உறவினர்கள் ஊருக்குள் அரிசி தானமாக வாங்க வருவர் .

என் பள்ளி பருவத்தில் புறநகர் சென்னை இன்னும் சில பகுதிகளில் பரவியதாக கேள்வி பட்ட மற்றொரு பெரிய வதந்தி "தலை இல்லா முண்டம்" .

நான் பத்தாம் வகுப்பு பயிலும் போது மதுரை அருகே திருமங்கலம் நகரில் உள்ள ஒரு கலை கல்லூரியில் தேசிய மாணவர் படை (N.C.C) சார்பாக பத்து தினங்கள் இராணுவ பயிற்சி பெற்ற சமயம் , அந்த கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதி மயானத்தை ஒட்டி இருந்ததால் பல திகிலான் அனுபவங்கல் ஏற்பட்டன் அதனை காலம் கிடைக்கும் போது பதிகிறேன் ..


N.C.C ராணுவ பயிற்ச்சியின் போது ஏற்பட்ட திகில் அனுபவங்கள்

தேசிய மாணவர் படையின் (N.C.C) ராணுவ பயிற்சி முகாம் மிக கடினமானது . ராணுவத்தின் உள்ள அதே கட்டு கோப்பு , தண்டனைகள் இந்த முகாமிலும் உண்டு. இரு முறை என் பள்ளி பருவத்தில் கலந்து கொண்டுள்ளேன்.

அதிகாலையில் ஐந்து கிலோ மீடர் ஓட்டம் , பின் நூறு மீட்டர் நண்பன் ஒருவனை தோளில் சுமந்து ஓட்டம் , உடற் பயிற்சி என்று ஆரம்பித்து உச்சி வெயிலில் பரேட் நடக்கும் . துல்லியமாக மார்ச் பண்ணும் வரை ராணுவத்தினர் வதக்கி எடுத்து விடுவர் . சிறிது கவன குறைவாக தப்பு பண்ணினாலும் கிரவுண்டை மணி கணக்கில் கையை மேலே தூக்கி சுத்த சொல்வர் .. துப்பாக்கி சுடுதல் , கயிறு ஏறுதல் ,என உடலை வருத்தும் அந்த பயிற்சியின் போது திருமங்கலம் கல்லூரியில் நடந்த அனுபவம் மறக்க இயலாதது

எங்கள் பள்ளி மாணவர்கள் குழு மற்றும் கோவில்பட்டி,விருதுநகர்,சாத்தூர் இன்ன பிற மதுரை வட்டார பள்ளி மாணவர்கள் குழு தங்கி இருந்த வளாகத்தின் ஒரு புறம் மயானம். ஜன்னலை திறந்தாள் மயான கூரையும் , சமாதிகளும் தெரியும் இரவானால் விசித்திரமான் ஆட்களின் நடமாட்டம் மயானத்தில் தெரியும் . பயிற்சியின் போது இரவு ஒவ்வொரு பள்ளியிலும் இருந்து ஒவ்வொரு நாள் பாதுகாப்புக்கு ரோந்து சுற்றி வர வேண்டும். இரவு இயற்கை உபாதைகளை கழிக்க மயானத்தின் குட்டை சுவற்றை ஓட்டினார் போல் நூறு மீட்டர் நடந்து சென்று கழிவறைக்கு செல்ல வேண்டும் ..

இரண்டாம் நாள் பயிற்சி நாளின் இரவில் இருந்து ஆரம்பித்தது பேயாட்டம்... நாங்கள் மூன்றாவது தளத்தில் தங்கியிருந்தோம். இடைப்பட்ட தளங்களில் வேதியியல் ,உயிரியல் ஆய்வகம் உண்டு. மாடியில் இறங்கி வரும் பாதை எதிரே மயானம் மறைப்பு ஏதும் இல்லாமல் தெளிவாக தெரியும் .. கோவில்பட்டி மாணவர்கள் இரவு ரோந்தில் இருந்த போது தான் நடந்தது அந்த சம்பவம் . அவர்கள் முதல் தளத்தில் நிற்கும் போது இரண்டாம் தளத்தில் யாரோ ஓடுவது போல் சத்தம் கேட்கும். இவர்கள் யார் எண்டு கேட்டல் சத்தம் நின்று விடும் .
பின் சிறிது நேரத்தில் மறுபடியும் ஓடும் சத்தம் தொடரும். இவர்கள் விரைந்து முதல் தளத்திற்கு விரைந்தாள் சத்தம் அடங்கி விடும் . அனால் தனியாக எந்த ஒரு மாணவன் முதல் தளத்திற்கு சென்றால் அதோ கதி .. அவர்கள் அலறி அடித்து கொண்டு வருவர் . பின்னர் மறுநாள் காய்ச்சல் வந்து படுத்து விடுவர் யாரிடம் பேச மாட்டார் . ராணுவத்தினர் அவர்கள் வீட்டுக்கு தகவல் தந்து வந்து அழைத்து செல்ல சொல்லுவர். இப்படியாக ஓவொரு நாளும் யாரவது ரோந்து செல்லும் அல்லது இரவு கழிப்பறை செல்லும் இருவர் பேயை பார்த்ததாக பயந்து வீட்டுக்கு செல்வது வழக்கம் ஆயிரு

பேய் பீதி எல்லா மாணவர்களுக்கும் பரவி மாணவர்கள் எல்லாரும் மயானத்தை பார்ப்பதை தவிர்த்தோம் . இரவானால் குழுவாக செல்வது தனியாக மாடிக்கு செல்ல மாட்டோம் . பயிற்சியின் ஏழாம் நாள் இரவு என் நெருங்கிய நண்பனுக்கு வயிறு சரியில்லை வயிற்று போக்கு காரணமாக எங்கள் குழுவில் உள்ள சிலரை இரவு துணைக்கு கழிப்பறை செல்ல அழைத்தான். பேய் நடமாட்டத்திற்கு பயந்து மயானத்தின் கட்டை சுவற்றை ஒட்டி செல்வதற்கு பயந்து யாரும் வரவில்லை .

பின் நான் அவன் துணைக்கு செல்ல முடிவெடுத்து விபூதியை பட்டை அடித்து கொண்டு மாடியில் இருந்து இறங்க ஆரம்பித்தோம் .. மெதுவாக இரண்டாம் தளத்திற்கு வந்த போது எதோ உருளுவது போல் சத்தம் . என் நண்பன் பீதியாகி மீண்டும் மூன்றாம் மாடிக்கு ஓடி விட்டான். நான் சற்று நேரம் அந்த தனிமையில் நின்று உற்று நோக்கினேன் , கை கால் எல்லாம் உதறியது , கழுத்தில் இருந்த டாலரை இறுக்க பிடித்து உரக்க கத்தினேன் யாரது என்று ? கீழே ரோந்து சென்ற உசிலம்பட்டி மாணவர்கள் சிலர் நிலைமை புரிந்து கொண்டு கும்பலாக மேலே வந்து விட்டனர் . அப்போது தான் நிம்மதியே வந்தது .. அவர்கள் என் நண்பனை அழைத்து வந்து கீழே விட்டனர் . பின் நானும் என் நண்பனும் மயான சுவரை ஒட்டி நடக்கா ஆரம்பித்தோம் . நான் பயத்தை போக்க உரக்க பேசி கொண்டு இருந்தேன் . மயானத்தை பார்க்காமல் விரைவாக கழிப்பறை வந்து சேர்ந்தோம். அங்கு மற்றோரூ எதிர்பாராத அதிர்ச்சி காத்து இருந்தது

3 comments:

சக்தி ! said...

andha athirchi enna enbathai pathivu seyyya villayaa?

Jj sasi said...

hello antha athirchi ennanu konjam sollungalen..

Jj sasi said...

yaravathu irukingala......hello ....

Post a Comment