தமிழ் இலக்கியங்களுக்கு உள்ள ஒரு சிறப்பு அதன் உவமை . அழகிய வார்த்தைகளினால் ஒன்றை உவமை படுத்தி கூறுவது .. உவமை என்றவுடன் பரவலாக நினைவுக்கு வருவது "பெண்கள்". பெண்மையை விவரிக்காத இலக்கியங்கள் இல்லை .
காலத்துக்கு ஏற்ப இன்று திரை இசை பாடல்களிலும், புது கவிதை,ஹைக்கூ என பல வகைகளிலும் வர்ணிக்கப்படும் பெண்களை அக்கால இலக்கியங்கள் கலை நயமாக ,கண்ணியமாக எவ்வாறு வர்ணித்தன என்பதனை இவ்விழையில் பதிவோம் , விவாதிப்போம்
குற்றால குறவஞ்சியில் நாயகியின் வர்ணனை
-----------------------------------------------------
இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை
ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள்
திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச்
சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்
விளக்கம் :
------------
மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போல கூந்தல் உடையாள் .. காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடையால் , அழகான அரும்பை போல இதழினால் , அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போல ஒளி விடும் நெற்றி உடையாள்
சிலப்பதிகாரம் :-----------------
கோவலன் விவரிக்கும் கண்ணகியின் அழகு:
---------------------------------------------------
மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின்
சாயர் கிடைந்து தங்கான் அடையவும்
.........
அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து
நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும்
...........
அளிய தாமே சிறு பசுன் கிளியே
குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின்
மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது
விளக்கம் :
------------
கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன ..
அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன ..
பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன ..
கலித்தொகையில் வர்ணனை !
வேய் என திரண்ட தோள் வெறிகமழ் வணரைம்பான்
மாவென்ற மடநோக்கின் மயிலியர்றளர் பொல்கி
யாய் சிலம்பரியர்ப்ப வவிரொளியிழையமைப்பை
கொடிஎன்ன மின்னென வணங்க்கென்ன யாதொன்றுந்த்
தெரிகல்லா விடையின் கண் கண் கவர் பொருங்கோட
விளக்கம் :
------------
மூங்கீலென திரண்ட தோளினையும் , மணம் வீசும் ஐம்பாலினையும் ,மா நோக்கி (அரசனையும்)வென்ற மடப்பத்தையுடைய நோக்கையும் , மயில் போன்ற சாயலையும் ,அழகிய சிலம்பில் உள்ளிருக்கும் மணிகளால் ஆன கலங்களை உடைய , துடக்கதான் கொடியென கண நேரத்தில் யாதென்றே தெரியாத அந்த மெல்லிய இடையை கண்கள் நாடி செல்கின்றன
"அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகு
கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக்
காவியை கருவிள மலரை
வடுவினைக் கொடிய மறலியை வலையை
வாழை வெண் ர்ரவுநீன் டகன்று
கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக்
குமிழையும் குழைyaiயும் சீறி
விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை
வேலினும் கூறிய விழியால்
விளக்கம் :
------------
ஒப்புமையில் கடலினையும்,மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும் , பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும் ,வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும் , விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள்
No comments:
Post a Comment