அந்த குறுந்தொகை பாடல் இது தான்
http://www.youtube.com/watch?v=IDEMeVPdgJ8
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதாவது
பசலை உணி இயற் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே
இதனை வெள்ளி வீதியார் எழுதியது . தலைவனை பிரிந்த தலைவி பாடுவதாக அமைய பெற்றது . அதன் பொருள் இது தான்
//கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
//நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
அதாவது கன்று குட்டியும் அருந்தாமல் , பால் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் நிலத்தில் விழுந்து சிந்திய நல்ல பசுவின் இனிய பாலை போல ..
//எனக்கும் ஆகாது என்னைக்கும் உதாவது
தலைவனை பிரிந்து வாழும் காரணத்தால் அவள் பேரழகு அவளுக்கும் உதவாமல் ,அவள் தலைவனுக்கும் உதவாமல்
//பசலை உணி இயற் வேண்டும்
//திதலை அல்குல் என் மாமைக் கவினே
தலைவன் பிரிவால் பசலை என்னும் தோல் நிற மாற்றம் கண்டு அவள் இடையும் மேற்தொடை பகுதியும் (அல்குல்) தேமலால்(திதலை) அவள் பேரழகு (மாமைக் கவினே) வீணாய் போனதாக் சொல்லுகிறது இந்த பாடல்
No comments:
Post a Comment