மாமன்னா நீ ஒரு 'மாமா' மன்னா
பூமாரி தேன்மாரி நான் பொழியும் நீ ஒரு 'முல்லமாறி'
அரசியலில் நீ தெள்ளியதோர் 'முடிசெருக்கி'
எதிர்த்து நிற்கும் படைகளை நீ 'புண்ணாக்கு'
அகிலத்தை அடை காக்கும் 'அண்டங்காக்கையை'
இருபத்தி மூன்றாம் புலிகேசியில் படத்தில் இந்த பாடல் மிக பிரபலம். அதாவது ஒருவரை இகழ்வது போல் புகழ்வது. திரை படத்தில் நகை சுவைக்கு இந்த வஞ்ச புகழ்ச்சியை வைத்து போல் தமிழ் பாடல்களில் அக்கால புலவர்கள் செய்யும் வித்தைகள் பல.
பழிப்பது போல் புகழ்வது , இரு பொருள் பட சிலேடையாக கூறுவது ,பாடலின் முதலும் முடிவும் கேட்டு பாடுவது, அகர,தகர வரிசையில் பாடுவது , வல்லினம் ,மெல்லினம் ,இடையினம் அமைய பாடுவது என படிபதறகு ஆர்வம் அளிக்கும் வகையில் பாடுவர். இந்த வகையில் அக்காலத்தில் "பாலபத்திர ஓனான்டியாக" இந்த வித்தைகளை செய்தவர் "காளமேக புலவர்"
அவர் மற்றும் வேறு சில புலவர்கள் இருப்பின் "இகழ்வது போல் புகழ்ந்து" பாடிய பாடல்களை இங்கு பதிவோம்
அப்பன் இரந்துண்ணி ; ஆத்தாள் மலை நீலி
ஒப்பரிய மாமன் உறி திருடி ; சப்பைகால்
அண்ணன் பெரு வயிறன் ஆறுமுகத்தானுக்கு இங்கு
என்னும் பெருமை இவை
காளமேக புலவர் சிவனை இரந்து உண்ணுபவர் என்றும் பார்வதியை மலை நீலி எனவும் , உறி திருடி என பெருமாளை , பெரு வயிறன் என விநாயகரை சொல்லி இவர்கள் முருக பெருமானுக்கு உறவுகள் என்கிறார் . இந்த பாடலை பார்த்தல் இவர் முருகன் குடும்பத்தை இழிவு படுத்துவது போல் தோன்றும் அனால் இது பெருமைகளை பழிப்பது போல் சொல்வது
கண்டீரோ ? பெண்காள் கடம்பவனது ஈசனார்
பெண்டீர் தமைச்சுமந்து பித்தனார் எண்சிதைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பை இட்டார்
அக்காளை எறினாராம்
சிவபெருமானை மிக அசிங்கமாக திட்டுவது போல் இருக்கும் அனால் இது மதுரையில் இருக்கும் மீனாட்சி மணவாளன் சொக்கநாதரை பற்றி பாடியது
வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரழிவு ஆம்
பேதப் பெரு வயிறு ஆம் பிள்ளை தனக்கு!- ஓதக் கேள்
வந்த வினை தீர்க்க வகை அறிவர் வேறூரார்
எந்த வினை தீர்ப்பார் இவர்
சிவனின் ஒற்றைக் கால் நடனத்தையும் , பாற்கடல் பரந்தாமனையும் , விநாயகரையும் இகழ்ந்துரைப்பது போல் வைதீஸ்வரன் திருகோயில் வைதீசுவர் புகழ் பாடுவது
No comments:
Post a Comment