Monday, February 23, 2009

"புரிந்து கொள்ளுங்கள் மக்கா"

"போராளிகளின் எதிர்பாளர்கள்" எனக் கூறும சில சிங்களவன் வால் பிடிக்கும் சிறு புத்திகாரர்கள் ஈன செய்கைகள் கருத்தில் கொண்டு உள்குத்தில் தமிழ் இன உணர்வை கையாண்டுள்ளதாக விளக்கம் அளித்த தமிழச்சிக்கு நன்றி ..

இப்படி ஒரு சலிப்பு நிலை இனி உண்மையில் வரும் முன்னர் பொய் உரைக்கும் சிங்கள அரசின் முகமுடியை கிழித்து போரை நிறுத்த தொடர்ந்து போராடுவோம் ..



தமிழச்சியின் விளக்கம் :
பேடி, பொறம்போக்கு, முட்டாள் - உள்குத்தில் தவறான புரிதல்!
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=987
"முல்லைதீவு முற்றுகை. இன்னும் சில நாட்களில் புலிகளிடம் இருந்து இராணுவம் மீட்டுவிடும். பொது மக்களை கேடயமாக வைத்து யுத்தம் நடந்துக் கொண்டிருப்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் ´வியூகம்´ வகுத்து போராடிக் கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம்." சில வாரங்களாகவே பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சியில் ஈழ யுத்தத்தை பற்றி நான்கு வரியில் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்துவிட்டு போகட்டும். இதுவரை எந்த உயிர்சேதத்தையும் ஏற்படுத்தாத வண்ணம் யுத்தம் நடந்துக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டு இருப்பதையும் விட்டுத் தொலைத்து .விடுவோம்.

பிரான்ஸில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏகப்பட்ட போராட்டங்களை நடத்திவிட்டார்கள். ஒன்று கூட ஊகடங்களில் வரவில்லை. ஒட்டுமொத்தமாக தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசுவது கண்டனத்திற்கு உரியது என்று பிரான்ஸ் அரசாங்கம் சொல்கிறது. தமிழ்நாட்டிலேயே இப்படித்தானே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இதையும் விட்டுத் தொலைத்து விடுவோம்.இப்போதைய புதிய பிரச்சனை லண்டனைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர் சுவீஸ்லாந்தில் இருக்கும் ´ஐநா சபை´ முன்பு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக யுத்தத்தை நிறுத்தக்கோரி தீக்குளித்து இறந்ததற்கு பின் ஐரோப்பிய மேற்கத்திய மக்களிடம் வேறு கோணத்தில் பார்க்கப்படுகிறது. சில தற்கொலை முயற்சிகள் அதுவும் மனிதர்கள் தீப்பந்தங்களாக எரிந்து போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவர்கள் அறிவு அப்படி. நம் நாட்டில் முத்துக்குமரனின் தீக்குளிப்பு மக்களிடம் ஆவேசத்தையும், அரசாங்கம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாகவும் முடிந்துவிட்டது. தமிழர்கள் என்றால் தீவிரவாதி; தீவிரவாதி என்றால் அவன் தமிழன். ஏன் இப்படி வெளி உலகத்திற்கு தெரிகிறார்கள்? மேற்கு பக்கங்களில் உளவியல் மூலமாக நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன. ஒரு சாரர் உளவீயல் தாக்கத்தால் அந்த இளைஞன் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்றும்; மற்றொரு சாரர் புலி இயக்கத்தினரின் மூளைச்சலவையாக இருக்கக்கூடும் என்றும் அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள். சூழல்களை திசை திருப்புவதற்காகவும், தங்களுக்கு ஆதரவான முறையில் திசைமாற்றம் செய்வதற்காகவும் எடுக்கப்படும் தந்திரமிக்க நடவடிக்கை என்று
குற்றம்சாட்டுகிறார்கள்?தமிழ் ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் உலவும் யுத்தக்காட்சிகள் இளைஞர்கள், குழந்தைகள், பலவீனமாகவர்கள் பார்க்கும் போது உளவீயல் ரீதியாக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதன் சலிப்பும், விரக்தியும் தற்கொலைவரை செல்கிறது. இதை புலிகள் ஓர் யுக்தியாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்று ஒரு பிரென்ஞ்ச் பெண் சொன்னாள். அவளுக்கு ஈழப்போராட்டத்தின் சதிகளைப் பற்றி என்ன தெரிந்துவிடக் கூடும்? அதிக பட்சம் தொலைக்காட்சியில் சொல்லப்படும் வாக்கியங்களிலும், ஊடகங்களில் வெளிவரும் செய்திகளிலும் அர்த்தம் கண்டுப்பிடிக்கும் புத்தசாலிகள் அவர்கள். திட்டமிட்டே திரிபுவாதங்களை இந்திய, இலங்கை அரசுக்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன. அதற்காகத்தானே புலிகளின் மக்கள் தொடர்புள்ள நிறுவனங்களை இழுத்து மூடவைத்தது. இருபக்க கருத்து வாதங்களையும் முன்வைக்காமல் ஒருதலைப்பட்சமான கருத்துக்களை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருந்தால் அவை எந்தவித்ததில் ஊடக நியதியாக இருக்க முடியும்? புலிகளின் மக்கள் தொடர்புகள் முடக்கப்பட்டதும் இப்படியாகத்தானே! வன்னியில் இருந்த வெளிநாட்டு உதவி அமைப்புகளை வெளியேற்றிவிட்டு இனப்படுகொலையை செய்துக் கொண்டிருக்கிறது "கூட்டாளி கூலிப்படைகள்" அதற்கு, "இராணுவம்" என்ற பெயர். இந்தியாவில் இருந்து "கூலிப்படைகள்" (இராணுவம்) போகிறது. சர்வதேசமும் இதை அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றது. ஈழத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்றும் தெரியிவில்லை. இணையதளம் மூலமாக ஒரளவுக்கு நடக்கும் யுத்தத்தின் கொடுரங்களை புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. புலிகள் யுத்தத்தில் மக்களை கேடயமாக பயன்படுத்துவதாக பலமான குற்றச்சாட்டை வைத்து இலங்கை அரசு ´திரிபுவாதம்´ செய்ய முற்படுகிறது. அதை சர்வதேசத்திடம் எப்படி அம்பல்படுத்துவது? புலம்பெயர்ந்த ஈழ தமிழர்கள் பலவகைகளில் தங்களுடைய எதிர்ப்புக்களை அமைதியான முறைகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை ஏன் "புலிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்" என்று புரிந்து கொள்கிறார்கள். யுத்தத்தில் கேடயமாக பயன்படுத்தும் அப்பாவி தமிழர்களை காப்பாற்றுவதற்காக பதறிக் கொண்டு இருக்கிறார்கள் என்று ஏன் எடுத்துக் கொள்ள முடியவில்லை? ஏதாவது ஈழதமிழர்களுக்கு ஆதரவாக நம் கருத்துக்களை வைக்க முற்பட்டால், உனக்கும் ´மூளைச்சலவை´ செய்யப்பட்டிருக்கிறது. அதான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறாய் என்கிறார்கள் மூளையில்லாதவர்கள். மௌனமாகிப் போவதா? இணையத்தில் புலம்பி வைக்கலாம் என்றாலும், எவனோ புலிகளுக்கு ஆதரவாக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று வைக்க வேண்டிய இடத்தில் வத்தி வைத்துவிட்டான் பண்ணாடை. மற்ற பதிவர்களைப் போல் நான் சாதாரண ஆளாக இருந்திருந்தால் என் எழுத்துக்கள் கண்காணிப்பிற்குள்ளாகி இருக்காது. பிரான்சில் அரசாங்கம் அனுமதி பெற்ற அமைப்பை வைத்துக் கொண்டிருப்பதால் ஒன்றும் புடுங்க முடியவில்லை. புலிகளுக்கு ஆதரவாக எதுவும் செய்யக் கூடாது என்றால் ´ராசபட்சா´வுக்கு எதிராக எதையாவது கிறுக்கியாவது வைப்போம் என்று உள்குத்து வைத்து கிறுக்கினால் அதுவும் வம்பாக போய்விட்டது. என் வாசகர் வாசுக்கு மனத்தாங்கல். பொறுப்புள்ள எழுத்தாளரான நீங்கள் இப்படியொரு கவிதையை எழுதலாமா? என்று குமுறலோடு மின்னஞ்சல் செய்திருந்தார்.

தப்பாக புரிந்து கொண்டீர்களே, அதில் இருக்கும் உள்குத்து புரியவில்லையா? என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தேன். இருப்பினும் அவர் அந்த கிறுக்கலை "ஹைக்கூ" வாக்கி விட்டார். (எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா) அதையாவது ஒழுங்காக போட்டிருக்கலாம். தலைப்பை நீக்கிவிட்டார். தலைப்பில் தான் ஒட்டுமொத்த உள்குத்தும் இருந்தது. ´வசந்தசேனன்´ இணையத்திற்கு புதியவர் போல... இணைய உள்குத்துக்களை புரிந்து கொள்ள முடியவில்லை. "ஐயா ராசா, சில நேரங்களில் நேரடியான வார்ததைகளை விட உள்குத்துக்கு வலிமை அதிகம். நமக்கும் பாதுகாப்பானது." இதுக்கும் மேலே ஏதாவது நான் எழுத ஆரம்பித்தால் இதுவே என்னுடைய வாக்குமூலமாக போய்விடும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

"புரிந்து கொள்ளுங்கள் மக்கா"

தமிழச்சி
22/02/2009

[ அந்த 'சலிப்பு' தான் எனக்கு இன்னும் புரியவில்லை மற்றபடி அனைத்து புரிந்து விட்டது ]

சிங்கள வால் பிடிக்கும் கொவனாண்டிகளே !!


போராளிகள் பிறப்பதில்லை .. உருவாக்கபடுகிறார்கள் , ஆயுதங்கள் தூக்க படுவதில்லை திணிக்க படுகின்றன்..


இந்தியா இராணுவத்தில் பொறியாளர் பிரிவில் சேர்வதை குறிக்கோளாக கொண்டு ஒரு காலம் நான் N.C.C,N.S.S என அதி தீவிரமாக பயிற்சி எடுத்து இராணுவம் மற்றும் விமான படை தான் எனது கனவு தேசமாக வாழ்ந்தது உண்டு .. இந்த அரசியல்வாதிகள் சவபெட்டி ஊழல் செய்த பொது ஒட்டு மொத்த கனவை தூக்கி வைத்து விட்டு வேறு வேலை தேடி கொள்ள முடிவெடுத்தேன் .. நான் கனவு கண்ட இந்த இந்திய இராணுவத்தின் வளாகத்தில் நின்று இந்தியா ராணுவத்தின் இலங்கைக்கு கொடுக்கும் திருட்டு உதவிக்கு எதிராக ராணுவ வீரர்களை பார்த்து ஆவேஷமாக கோஷங்கள் எழுப்பிய பொது ஒரு சில ராணுவ வீரர்கள் தலை குனிந்து நின்றதை பார்க்கும் பொது என் கண்கள் கலங்கின ..

அரசியல் நாதாரிகள் தங்கள் சொந்த ஆசை பாசைகளுக்கு ஆடும் அரசியல் பகடை ஆட்டங்களுக்கு , கீழ்த்தரமான இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு அந்த குட்டையன் முகர்ஜி தமிழ் இன மக்களுக்கு செய்த துரோகத்துக்கு என் தாய் மண்ணை காக்கும் ராணுவ வீரர்கள் தாய் மண்ணிலேயே சகோதரர்களால் அவமானபடுதப்பட்டு தலை குனியும் நிலை .. அரசியல் வாதிகளே நீங்கள் போபர்ஸ் ஊழலையும், ச்பெக்ட்ரும் ஊழலையும் மறைப்பதற்கு எங்கள் தமிழ் மக்களை இன அழிப்பை பகடை காய் ஆக்காதீர்கள் ..

எனக்காக போராட வேண்டிய இந்த அரசு ,
நான் வாக்களித்த,வரியளித்த இந்த அரசு இன்று கை கட்டி நிற்கிறது .. அங்கு அழிவது என் சகோதர இனம் ..

இன்று நாங்கள் அஹிம்சை வழியில் போராடி பார்க்கிறோம், கதறுகிறோம்,மன்றாடுகிறோம், எங்களை தீயிட்டு வேண்டுகிறோம் .. இதற்கும் செவி சாய்க்காமல் நீ உன் சுய லாபத்திற்காக செவிட்டு முண்டமாய் நிற்கும் பொது உன் செவிபரையை கிழிப்பது எங்கள் கடமை .. எங்கள் கையில் ஆயுதங்களை திணிக்காதே ...



1 comment:

இட்டாலி வடை said...

அருமை... கயமைகளை வெளிப்படுத்துவோம்... குட்டையான முகர்ஜியை அவன் பொண்டாட்டியே மதிக்காதபோது.. அவன் பர்றி நமக்கென்ன...

வாழ்த்துக்கள்

Post a Comment