Monday, February 23, 2009

'இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள்' - மக்கள் பேரணி

http://indiansagainstgenocide.org/
இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள் அமைப்பு சென்னையில் இன்று நடத்திய ஒரு கவன ஈர்ப்பு பேரணி ஈழ தமிழ்ர்களின் வலியையும் , விடுதலை வீரர்களின் வீரத்தையும் ஒருங்கே இணைத்து சிறப்பாக நடந்தது இதில் சில வட இந்தியர்களும் கலந்து ஆதரவு கோஷம் எழுப்பியது கவனிக்கத்தக்கது ..

இந்த பேரணியை ஏற்பாடு செய்த "இன படுகொலைக்கு எதிரான இந்தியர்" எனும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், மாணவர்கள் , வாலிபர்களால் நடத்தப்படும் அமைப்புக்கும் பெரும் நன்றியை சொல்ல கடமைபடுளோம்

மற்றும் சிறப்புரை ஆற்றிய ஜகத் கஸ்பர் , கிறிஸ்தவ மிசினரிகளின் பங்கு தந்தைகள், சைவ சமய மடாதிபதிகள், வள்ளலார் சபை , வாழும் கலை உறுப்பினர்கள் என பலர் இதன் பின்னாணியில் இருந்து பெரிய அளவில் ஒரு கவன ஈர்ப்பு நிகழ்வை நடத்தியுள்ளார்கள் எனில் மிகையாகாது ..

ஆனால் சில நம்பிக்கைகளையும் கூடவே சிறிது சந்தேகங்களையும் இந்த " இன அழிப்புக்கு எதிரான இந்தியர்கள் " அமைப்பு விட்டு சென்றுள்ளது ..

"பொது மக்களால் நடத்தப்படும் ஒரு அமைதி பேரணி " என்ற விளம்பரத்துடன் வந்த அழைப்பை ஏற்று பங்கு கொள்ள நண்பர்கள் சகிதம் சென்றா போது அங்கு சென்னை சங்கமம் புகழ் "ஜகத் கஸ்பர் ராஜ்" தமிழின துரோகி அரசாங்கத்தின் கரிசனம் உள்ள இவர் மைக்கை பிடித்து பேசிய போது இங்கேயும் தமிழின துரோகியின் நட்பு கரங்கள் வந்து விட்டார்களா என ஒரு கணம் விக்கித்து போனேன் ..
இந்த பேரணியின் நிறைகள் :
* பெரும் திரளான பெண்கள் , குடும்ப பெண்கள், குழந்தைகள் , பள்ளி குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டது ஒரு நல்ல பெரும்
மாற்றம்

** கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து திரளான மக்கள் வந்து இருந்தனர்..மற்றும் சில திரளான மகளீர் அமைப்புகள் வந்து இருந்தான ..

**பள்ளி சீருடை அணிந்த சிறு குழந்தைகள் கைகளில் பதாகைகளை ஏந்தி இந்திய அரசே இனபடுகொலையை தடுத்து நிறுத்து என்று அந்த பிஞ்சு குரல்களில் கூறியா போது இந்த சிறு பிள்ளைகளை கூட வீதியில் இறங்கி போராட வைத்திருக்கும் இந்த தமிழின துரோகி,பகல் கொள்ளைக்காரன் , குட்ட முண்டம் முகர்ஜி மற்றும் காங்கிரஸ் கொல்லைகாரர்களை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது ..

** வடலூர் வள்ளலார் சபையை சேர்ந்த முதியவர்கள் வந்தது சிறப்பு மற்றும் திருநங்கையர் சிலர் வந்து இருந்தனர் .. திரளான வலைப்பதிவர்கள், இணைய நண்பர்கள் வந்து இருந்ததை காண முடிந்தது.. எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம் தான் ..
**கல்லூரி மாணவர்கள் பலர் வந்து இருந்தனர்

இந்த பேரணியின் குறைகள் :

* கடைசி நேரத்தில் மெரீனா கடற்கரை சாலை வழியாக வந்து காந்தி சிலையை அடையும் என சொல்லப்பட்ட பேரணி இராணுவ வளாகம், பொருட்காட்சி சுற்றி தந்தை பெரியார் சிலையை அடையும் வகையில் மார்ரிம் அமைக்கப்பட்டுள்ளது .. இதற்கான காரணத்தி ஜகத் கஸ்பர் சொல்லவில்லை .. கவால் துறை எனும் ஏவல் துறை அனுமதி கொடுக்கவில்லையா ? விடுமுறை நாளன்று பெரும் திரளான மக்கள் கடற்கரைக்கு வந்து உள்ள போது அந்த வழியே இப்படி ஒரு பெரும் பேரணி மகலீர்களையும்,வாலிபர்கலயயும் வைத்து சென்றால் அது மக்களிடையே ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திவிடும் என ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் வழியில் இறுதி நேரத்தில் பேரணி மாற்றி அமைக்கப்பட்டதா ? இதற்கு பதில் எதுவும் தரவில்லை ? ஏன் தமிழின துரோகியின் சர்வாதிகார தமிழக அரசை தரும் இடைஞ்சலை வெளியே சொல்ல கூடாது என்பதற்கா ?

** இந்தியா அரசை நிர்பந்தம் செய்ய சொல்லி இயற்றப்பட்ட தீர்மானங்கள் ஒரு வரி கூட ஏன் தமிழாக மக்கள் ஓட்டை வாங்கி கொண்டு பாசை துரோகம் செய்து கபட நாடகம் ஆடும் தமிழாக அரசை கண்டிக்க வில்லை ? முதலில் தமிழக அரசை கண்டித்து விட்டு தானே இந்திய அரசை கண்டிக்க வேண்டும் .. நாங்கள் கடந்த நாடளுமன்ரா தேர்தலுக்கு வாகளித்து துரோகியின் கட்சிக்கு தானே ? எங்கள் ஓட்டை கொண்டு பாய் காங்கிரஸ்காரனுக்கு அடகு வைச்ச மகா பாவி தானே இந்த தமிழின துரோகி

பேரணியின் சிறப்பம்சங்கள் :
** அமிதிக்கு குந்தகம் விளைவிக்கும் கோஷங்கள் எழுப்ப கூடாது என்றாலும் , பெரும் திரளான போலீசார் குவிக்க பட்டு இருந்தாலும் ப்பீ சென்ற மாணவர் படைகளும், சில தகவல் தொழினுட்ப வலோனர்களும் , வார்த்தைகளில் மன்மோகன், சோனியா,முகர்ஜி,சிவசங்கரமேனன், சு.சாமி , காங்கிரஸ் ஒழிக என கோஷங்கள் எழுப்பி வருத்து எடுத்தனர்
** இராணுவ வளாகத்தின் முகப்பை கடக்கும் போது பெரும் திரளான போலீசார் கையில் தடியுடன், இராணுவ வீரர்கள் சிலரும் பாதுகாப்பு நின்று இருந்தனர் .. அப்போது உணர்ச்சி போங்க வாலிபர் படை இந்தியா இராணுவமே வந்தாலும் எதனை ஆயுதங்கள் ஏந்தி வந்தாலும் தமிழார் ஒரு போதும் பயந்ததில்லை என்பதை பறை சாற்றுவது போல் இராணுவ வீரகளை பார்த்து "இந்திய இராணுவ நாய்களே மண்ணை விட்டு வெளியேறு " எனவும் "கூட்டி கொடுக்கும் இந்தியா இராணுவமே ராடாரை , துருப்புகளை திரும்ப பெறு என்று வீர முழக்கம் இட்ட போது " இங்கு நின்ற் இராணுவ வீரர்கள் ஒரு சிலர் மவுனமாக தலை குனிந்து நின்றா காட்சி மனதை நெருடியது.. இந்திய அரசியல் துட்டு பொருக்கி தலைவர்கள் செய்யும் செப்படி வித்தைகளுக்கு , அவர்கள் கூட்டி கொடுக்கும் வெளியுறவு கொள்கைகளுக்கு , எமது தாய் மண்ணின் இராணுவ வீரர்கள் சொந்த மண்ணிலே சகோதரர்காளால் அவமானப்பட்டு நிற்பதை பார்க்கும் போது சிறிது கலக்கமாக இருந்தது ..
** மிக முக்கியமான சிறப்பம்சம் என என்றால் "கடவுள் இல்லை, இல்லவே இல்லை " எனும் பகுத்தறிவு பாசறையை சேர்ந்த அறிவுமதி, சு.ப.வீரபாண்டியன் இன்னும் சில பகுத்தறிவு இயக்கங்கள் மற்றும் இந்து சமய மடாதிபதிகள் , கிறிஸ்தவ, பவுத்த , இஸ்லாம் சமய பெரியோர்கள் என அனைவரும் ஒரே தலத்தில் இருந்து "இன படுகொலைக்கு எதிராக எழுப்பிய குரல் " ஒரு பெரிய சமூதாய கருத்தியால் மாற்றத்தை கொண்டு வந்து அனைவரும் இலங்கை இன பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உடனே காணப்பட்டு அங்கு அப்பாவிகள் கொல்லப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என நினைப்பது அளப்பரியது

**ஏழு தீர்மானங்கள் நிரவேர்றப்பட்டன் (இந்திய , தமிழக அரசுகளுக்கு போய் சேருமா ? ) பேரணியின் இறுதியில் இன்று கலந்து கொண்டார்கள் அனைவரும் மீண்டும் ஒரு பேரணி இனி நடத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் அதற்கு கண்டிப்பாக வருவதற்கு உறுதிமொழி தருமாறு பெறப்பட்டது ..


பேரணியில் புதிதாகவும் நம்பத்தகுந்த ஒரு செய்தி கிடைத்தது அது என்ன என்றால் இலங்கை அரசு கடந்து ஒரு சில வாரங்களாக போராளிகள் வசம் இருக்கும் இடங்களிலும் மற்றும் அதனை ஒட்டிய பாதுகாப்பு வளைய பகுதிகளிலும் சுமார் எழுபதி ஆயிரம் பேர் தான் இருக்கிறார்கள் என ஒரு பொய் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது .. இதன் காரணம் என்ன என்றால் ? இலங்கை அரசு இந்த போரை ஒட்டு மொத்தமாக புலிகள் வசம் இருஉகும் இடத்தை குண்டுகளால் சகல திசைகளிளுக் இருந்து சல்லடையாக அபாய குண்டுகளை தொடர்ச்சியாக பல தினங்கள் இடைவிடாது போட்டு அந்த பகுதியில் இருக்கும் சுமார் ஒரு இலட்சம் அப்பாவி தமிழ்ர்களை போராளிகளோடு சேர்த்து கூண்டோடு கைலாசம் அனுப்ப முடிவு செய்துள்ளது .. உலக வரலாற்றில் இது வரை ஹிட்லரின் நாசி படைகள் கூட செய்யா துணியாத ஒரு கொடும் இன படுகலையை இன்னும் நான்கு வாரங்களில் அதாவது சிங்கள புத்தாண்டு பிறக்கும் முன்பாக செய்து விட முடிவு செய்து அதற்கு ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது .... இதற்க்கு அச்சாரம் இடும் விதமாக தான் கடந்த வாரம் கோதபாய ராஜபக்ஷே இலங்கை இராணுவ வீரர்கள் மத்தியில் உரை ஆற்றும் போது
" தமிழ் பெண்கள் இலங்கை இராணுவ வீரர்களுக்கு விருந்தாகட்டும்இந்த தமிழ் இன மக்களை நாம் கொன்று குவிக்கும் குருதியில் இந்த இந்து மகா சமுத்திரம் சிவப்பு நிறமாகட்டும் " என கொக்கரித்து உள்ளான்...

ஆகவே அடுத்த நான்கு வாரங்கள் இலங்கை யுத்த வரலாற்றில் மிக கொடுமையான தினங்களாக அமையா போகிறது .. இவர்கள் உத்தேசித்துள்ள ஒரு இலட்சம் அப்பாவி தமிழ்ர்கள் படுகொலையை உலகத்தின் கண்ணில் இருந்து மறைபதற்காக தான் இன்று வன்னியில் போர் நடைபெறும் பகுதிகளில் ஆட்களின் கனக்கை குறைத்து காட்டி உள்ளது

சில சந்தேகங்கள் !

ஜகத் கஸ்பாரின் தலையீட்டை பற்றி அந்த அமைப்பை சார்ந்த சிலரிடம் கேட்டேன் .. மாணவர்களால், பொது மக்களால் நடத்தப்படும் பேரணி என சொல்லிவிட்டு எங்கு ஜகத் கஸ்பர் பேசுகிறார் என்ன என்றேன் ?

அதற்கு அவர்கள் சில தலையீடுகளை தவிர்க்க இயலவில்லை எனவும் .. குறிப்பாக காவல் துறைஇடம் போராட்ட அனுமதி , இவர்கள் உத்தேசித்துள்ள ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மான கொண்டு வர கோரிக்கை , உலக போர் குற்ற நீதிமன்றாதில் இலங்கைக்கு எதிரான் வழக்கு இன்ன பிற செய்கைகளுக்கு ஜகத் கஸ்பர் தலையீடு தேவை இருக்கிறது என்றும் ஆயினும் அவர் தலையீட்டையும் மீறி அது மாணவர்கால் , தகவல் தோழி நுட்ப வல்லோனர்காளால் நடத்தப்படும் அமைப்பு தான் தயக்கமின்றி பங்கு கொள்ளுங்கள் என்றனர் .. இதில் எந்த அளவு உண்மை என்பது ஆண்டவனுக்கு தான் வெள்ளிச்சம் ..

ஜகத் கஸ்பர் இந்த சந்தேகத்தை வலுவாக களைவதை போல தான் உரை ஆற்றினார் .. இது முற்றிலும் மனிதாபிமாந அடிப்படையில் அமைத்த அரசியல் சார்பிலாத இயக்கம் என்று .. இருந்தாலும் எனக்கும் இந்த அமைப்பு தமிழின துரோகியின் திரை மறைவு வேலையாள் தகவல் தொழினுட்ப வலூனர்களின் எழுச்சியை சிதறடிக்க செய்ய கூடாது என்பது தான் விருப்பம் .. அதனால் தான் முதலில் நான் சில சந்தேகங்களையும் இட்டு சென்றுள்ளது என பதிந்துள்ளேன் .இதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் உள்ள அமைப்பாக கொண்டு செல்வது வரை ஒத்து கொள்ளலாம் .

No comments:

Post a Comment