சில மாதங்களுக்கு முன்பு இந்திய பங்கு சந்தை பெருமளவில் சரிந்து பலரை நட்டத்தில் தள்ளியது . எல்லாம் அந்நிய முதலீட்டாளர்களின் கைவரிசை .. ஏகத்துக்கும் மும்பை பங்கு சந்தையில் முதலீடு செய்து பங்கு சந்தையில் காளை ஆதிக்கத்தில் (ஏறுமுகமாக ) இருப்பது போல் மாயையை ஏற்படுத்தி பல சிறு இந்திய முதலீட்டாளர்களை முதலீட்டு செய்ய வைத்து சந்தை உயர்ந்ததும் திடீரென் பணத்தை எடுத்து சென்று விடுவர் இந்திய பங்கு சந்தையும் நட்டத்தில் செல்லும் ..
இப்படி மேலும் கீழும் செல்லும் இந்திய பங்கு சந்தையில் சூடு பட்டு கற்று கொண்ட பல சிறு முதலீட்டார்கள் இப்பொது முதலீட்டு செய்ய துவங்கி இருப்பது தங்கத்தில் மீது .. தங்கம் பெருமளவில் நட்டத்தையும் , மிக பெரிய இலாபத்தையும் கொடுக்கா விட்டாலும் கூட பாதுகாப்பான முதலீடு ...
இன்று தங்கத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்வது மிக எளிது . புற்றீசல் போல் வளர்ந்து இருக்கும் பல பங்கு சந்தை ஏஜெண்டுகள்
(iciici direct,sharekan,abn amro etc) ஆண்லைன் முதலீட்டு முறையை அறிமுக படுத்தியுள்ளனர் .. யார் வேண்டுமானாலும் எளிதாக ஆன்லைன் மூலம் முதலீடு செய்யலாம் ..
ஆக் இன்று பங்கு சந்தையில் புதிதாக் முதலீடு செய்ய வரும் கத்து குட்டிகள் பலர் தங்க பங்குகளை வாங்க ஆரம்பித்து விட்டனர் .. பொருலாஃதரதில் உள்ள முக்கிய கோட்பாடு தேவை அதிகரிக்கும் பொது விலை ஏற்ற துவங்கும் . இந்தியாவில் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு Rs 13,000 வரை(24 crt) உயர்ந்து நிற்கிறது ..
இதிலும் அரசாங்கம் அலட்சியம் காட்டுகிறது , உண்வு தானியங்கள் ஆன்லைன் வர்த்தகத்தால் விலை உயர்ந்து நிற்பது போல தங்கத்தின் விலையையும் உயர விட்டு பாமரர்கள் தங்கத்தை கனவில் மட்டும் காணும் நிலைக்கு இட்டு செல்ல போகிறது ..
தங்கம் விலை இந்தியாவில் உயர போகிறது உஷார் ..
No comments:
Post a Comment