இந்தியா எம்மதமும் சம்மதம் என உலகின் அமைதிக்கு , பல மதத்தவர் ஒற்றுமையாக சகோதரத்துவமாக வாழும் நாட்டுக்கு ஒரு உதாரணம் .
இபேர்பட்ட பெருமை வாய்ந்த இந்தியாவில் இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாம், பவுத்தம்,ஜெயின் இன்ன பிற மதங்களும் அதனை தழுவிய மக்களும் உள்ளனர். உலகின் பல சமயங்களும் இந்தியாவில் இருந்து சென்ற நல ஒழுக்க கோட்பாடுகளின் சாராம்சம் என்ற ஒரு கருது பரவலாக உண்டு.
இந்தியாவில் மிக பழைமையான வரலாறு உண்டு , இயேசு ,நபிகள் என்ன பிற மதங்கள் தோன்றும் முன்னே மிக தொன்மையான கலாச்சாரங்களை ,நாகரீகங்களை, வாழ்வியல் நெறிகளை கொண்ட நாடு இந்த புண்ணிய நாடு . இபேற்பட்ட இந்தியாவில் இன்று மதத்தை வைத்து ஒட்டு வியாபாரமும் , தொன்மையான சமய மக்களை பிற மதங்களுக்கு மாறும் செயலும் சர்வ சாதாரணமாக உள்ளது . இங்கு யார் எந்த சமய கோட்பாடுகளை வேண்டுமானாலும் விரும்பி பின்பற்றலாம் அதற்கு சட்டங்கள் எந்த குறுக்கீடும் செயாது. இந்த சுதந்திரம் தவறாக உபயோகபடுதபடுவதாக சில கண்டனங்கள் எழுவது உண்டு
இந்தியா என்னும் பெயர் பெருவாரியாக இந்து சமய மக்கள் வாழ்ந்த மதத்தில் இருந்து தருவி இருக்கலாம் இல்லையேல் சிந்து சமவெளியை வைத்து வந்திருக்கலாம் எனவும் இந்துஸ்தான் என முன்னர் அறியப்பட்ட நாடாகவும் இருந்திருக்கலாம் என்பர்.
இந்த பெருமைகளை உடைய இந்தியாவில் பல்வேறு அந்நிய படை எடுப்புகளும், அயல் நாடுகளுடன் வியாபார பரிவர்த்தனைகள் ஏற்பட்டு அதன் விளைவாக நாடே அடிமைப்பட்ட வரலாறும் உண்டு. இந்தியாவில் தொன்மை காலம் தொட்டு வாழ்த்த மக்கள் வழிபாடு முறைகள் , வாழ்க்கை கோட்பாடுகள் என்ன ? அவை காலத்தின் கோலத்தால் எவ்வாறு மாறுதல் கண்டன ? மக்கள் மீது படையெடுப்பால் திணிக்கப்பட்ட மத கோட்பாடுகள் யாவை என்பன பற்றி இந்த இழையில் நமக்கு தெரிந்த , பார்த்த ,கேட்ட கருத்துகளை அனைவரும் பதிவோம்
இந்துமதமானது இந்தியாவில் மக்கள் கலாசாரங்களை ஒட்டி , இயற்கை வழிபாடு முறைகளை மூலமாக கொண்டு தோற்றுவிக்கப்பட்டு மக்கள் செம்மையாக வாழ வாழ்வியல் நெறிமுறைகளையும் ,அரிய பல கருத்துக்களையும் கொண்டு பல வேந்தர்களால் பேணப்பட்ட ஒரு மதம்.
தொன்மையான இந்தியாவும் இந்து சமயமும் இரண்டற கலந்தவைகள். இந்து சமய கோட்பாடுகளை கொண்டு வாழ்ந்த மக்கள் கால போக்கில் எவ்வாறு பிற சமய கோட்பாடுகளை ஏற்று அதனை தழுவினர். தானாக விரும்பி சென்றனரா ? இல்லை வன் திணிப்பாக பிற மத கோட்பாடுகளை இஸ்லாமிய மன்னர்கள் நாட்டை கைபற்றிய போது மாறினரா இன்ன பிற தகவல்களை பார்போம்
கிறிஸ்தவ மதம் இந்தியாவில் காலூன்றிய விதம்
இந்தியாவில் தற்போது உள்ள மூன்றாவது பெரிய சமயமான கிறிஸ்தவம் காலூன்றிய முறையை காண்போம்
இந்தியாவில் மேற்கு கடற்கரையில் வணிகத்திற்காக வந்து இறங்கியா அயல் நாட்டினர் படி படியாக தங்கள் சமய கோட்பாடுகளை இந்தியாவில் போதித்தனர் ..இப்படி வளர தொடங்கிய கிறிஸ்தவ மதமானது இன்று இந்தியாவில் கிட்டதட்ட மூன்று கோடிக்கும் மேற்பட்ட கிறிஸ்து அன்பர்களை கொண்டு உள்ளது ..
இந்தியாவில் கிறிஸ்தவம் மதம் பரவிய முறை , பரவ காரணமான பாதிரியார்கள், கிறிஸ்தவ கோட்பாடுகளை பரப்ப நிர்மாணிக்கப்பட்ட குழுக்கள் , அறக்கட்டளைகள் என சிலவற்றை காண்போம் . பின்னர் தானே பரவிய சமய கோட்பாடுகளுக்கும் பரப்பப்பட்ட சமய கோட்பாடுகளுக்கும் மக்களிடையே உள்ள தாக்கங்களை பார்போம்
இந்தியாவில் கிறிஸ்தவ் மதத்தை பல காலங்களில் பரப்பிய கிறிஸ்தவ மத குருமார்கள் முறையே
Judas Thomas (or ) Didymus
Saint Francis Xavier
Mother Teresa
Reginald Heber
Kuriakose Elias Chavara
Henry Martyn
George Edward Lynch Cotton
William Carey
Anthony Norris Groves
Hugh Findlay
Charles Freer Andrews
Alphonsa Muttathupandathu
St. Gheevarghese Mar Gregorios of Parumala
Judas Thomas (or ) டித்ய்முஸ்
இவரை செயின்ட் தாமஸ் என பரவலாக அழைப்பர் . இவர் மிக முக்கியமான கிறிஸ்தவ மத குரு. இவர் இயேசுவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர் எனபடுபவர் . இவர் அக்காலத்தில் "மலபார்" எனும் கேரளா பகுதிக்கும் "கோரமண்டல்" என அழைக்க பட்ட சென்னை கடற்கரை பகுதிகும் வந்து உள்ளார். இவர் நினைவாக தான் பரங்கி மலை எனப்படும் செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆலயமும் , சாந்தோம் பீச்சில் ஆலயமும் நிறுவ பெற்றன
இவர் இந்தியாவுக்கு வரவே இல்லை என மற்றொரு ஆராய்ச்சி சொல்கிறது அனால் கிறிஸ்தவர்கள் இவர் சென்னையில் தான் மரித்தார் என்பர் ..வணிகம் செய்ய மட்டும் வந்த அயல்நாடினர் மத்தியில் இவர் மதத்தை பரப்பும் நோக்கோடு கேரளா கொடுங்கல்லூர் வந்து இறங்கினார் . அன்று இந்தியாவில் ஆரம்பித்த கிறிஸ்தவ மதம் படி படியாக கேரளா , தமிழ்நாடு கடற்கரை பிரதேசங்களில் , அருணாசல பிரதேசங்கிளில் விரைந்து பரப்ப பட்டது
செயின்ட் தாமஸ் அவர் சீடர்கள் பரப்பிய கிறிஸ்தவ கோட்பாடுகள் அதனை தழுவிய இந்திய மக்களை தாமஸ் கிறிஸ்துவர்கள் என்பர் . அக்காலத்தில் கிறிஸ்தவ சமயத்தில் பல பிரிவுகள் இருந்தான ..
பங்கு தந்தைகளும் , திருச்சபைகளும்
-------------------------------------------------
எனக்கு தெரிந்த வரை இந்தியாவில் கிறிஸ்தவ குடும்பங்கள் ஏதாவது ஒரு ஆலயத்தின் (church) உறுபினராக இருப்பார் . அந்த மாதிரி சிறு சிறு ஆலயங்களை ஒன்று இணைத்து ஒரு திரு சபை இருபதாகவும அதற்கு பேராயர் ஒருவர அல்லது தலைமை பங்கு தந்தை ஒருவருக் இருப்பார் . இந்த இந்தியாவில் உள்ள கிறிஸ்தவா ஆலயங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்க பட்டு மறைமுகமாக அயல் நாடில் உள்ள தலைமை கிறிஸ்தவ சபைகளுடன் செயல் ரீதியாக பிணைக்க பட்டிருக்கும் .
கிறிஸ்தவ ஆலயங்களில் பங்கு தந்தைகள் எனப்படும் பாதிரியார்கள் இயேசுவின் அருள் பெற்றவராக அந்த திரு சபை உடன் இணைக்க பட்டிருக்கும் குடும்பங்களால் நம்பபடுபவர். ஒவ்வொரு குடும்பத்தில் ந்டக்கும் நல்ல மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு அந்த திரு சபை ப்ங்கு தந்தைக்கு முதல் அழைப்பும் மரியாதையும் செய்யப்படும். அவரை கடவுள் உருவாக பார்த்து மிகுந்த மரியாதை கொண்டு இருப்பார்.
அயல் நாடுகளில் இருந்து மத பிராச்சாரம் , வளர்ச்சிக்காக தொகுதி வாரியாக வரும் பணம் இவர்கள் நிர்ணயிக்கும் திட்டப்படி அந்த திரு சபை வளர்ச்சிக்கு , சமய மாற்றத்துக்கு தேவையான வகையில் திட்டமிடப்படும் என நம்புகிறேன் .
இந்த church network பற்றி விபரம் தெரிந்தவர்கள் பதிக்கவும் அல்லது தவறு எனில் திருத்தவும்
இப்போது இவ்வாறு இணைக்கப்பட்ட அந்த சர்ச்சுகள் , மிசிநரி மூலம் இந்திய மக்களுக்கு இயேசு பற்றி போதனைகள் பரப்ப படுகின்றன என்பதை சற்று பார்போம் . குறிப்பாக உலகின் அணைத்து மூளை முடுக்குகளுக்கும் பரவயுள்ள இந்த கிறிஸ்தவ மத போதனைகள் பரப்பும் மிஷினரி அமெரிக்க உளவுத் துறைக்கு பல்வேறு புவியியல் , மக்கள் தொடர்பான இரகசிய தகவல்களை தருவதாக ஒரு கருத்து உண்டு .
அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் பதவிக்கு வந்த பின் இந்த மிஷினரிகள் வளர்ச்சி அபிரிதமாக உள்ளதாகவும் இது மறைமுகமாக அமெரிக்க ஆதரவு மனப்பானமையை வளரும் நாட்டு மக்களிடையே பரப்ப முயல்வதாக ஒரு குற்ற சாட்டு உண்டு ..
இந்த அமெரிக்க கிறிஸ்தவ மிஷினரிகள் ஜோஷ்வா I , ஜோஷ்வா II எனும் செயல் திட்டத்தை தீட்டி மத பிரசாரங்களை பல நாடுகளில் மேற் கொண்டன
இந்தியாவில் கிறிஸ்தவ மதம் மிசினரிகளால் தற்போது வளர்க்கப்படும் விதம்
இந்த படத் தொகுப்பு இங்கு உள்ள அனைவரும் ஒரு நிமிடம் ஒதுக்கி பார்த்தல் நல்லது . மதமாற்றம், மத பிரச்சாரம் நடப்பதை துல்லியமாக படம் பிடித்து மிக அருமையான வர்ணனையோடு கொடுகபட்டது
வட இந்தியாவில் மிசோராம்,திரிபுரா,மணிபூர்,நாகலாந்து இன்ன பிற பழ்ங்குடி மக்கள் உள்ள கிராமங்களில் கிராமம் கிராமமாக இந்து மக்களை மதம் மாற்றுவது விவரிக்கப்பட்டுள்ளது
http://youtube.com/watch?v=NIPaN55hwac
http://youtube.com/watch?v=D0F22UhEsHk
புண்ணிய ஸ்தானம் எனும் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றும் முறை உத்திர
பிரதேசத்தில் படமாக்கப்பட்டது
http://youtube.com/watch?v=LuaiuTmUq8s
கிறிஸ்தவர்களாக வட மேற்கு மாநிலங்களில் மதமாற்றம் செய்யப்பட்ட மக்கள் சதவீதம்
மிசோராம் - 95 %
நாகலாந்த் 95 %
மேகாலாயா 75 %
திரிபுரா 80 %
மணிபூர் 70 %
No comments:
Post a Comment