முன்னணி தினசரியில் இது சம்பந்தமாக ஒரு கட்டுரை ரசிக்கத் தக்க வகையில் வந்தது .. உங்களுக்கு தெரிந்த சில வழிமுறைகளை சொல்லுங்கள்
நடுநிசி 2 மணிக்கு போன் செய்து "என்னடா அதுக்குள்ள தூங்கிட்ட? குருவி படம் பாத்தியா? okda குட் நைட் " என்று தொடர்ச்சியாக மூன்று நாட்கள் முயற்சி செய்யுங்கள்.. உங்கள் அழைப்பை அதன் பின் எப்போது கண்டதுமே நண்பர் ஒரு வித கலவரம் கலந்த 'திகில்' அடைவார் ..
**இது உயிர் தோழனிடம் சோதித்து வாங்கி கட்டிக் கொண்ட முயற்சி
* ஒரு கேள்வியை நண்பர் கேட்டால் அதற்கு ஒன்பது பதில்களை கொடுங்கள் இல்லையெனில் ஒரே பதிலை நீளளளளளளளளளமாக கொடுங்கள் கேட்ட கேள்வியை மறந்து நண்பர் முறைப்பது அலாதியாக இருக்கும்
* நண்பர் ஏதாவது சீரியஸாக சொல்லும் பொது முகத்தை கவனிப்பது போல் வைத்து கொண்டு வேறு எதையாவது நினைத்து கொண்டு பின் நண்பர் சொல்லி ஓய்ந்ததும் "எங்க திரும்ப சொல்லுன்னு" ஒரு குண்டை போடுங்கள். நண்பர் காலி
கேள்விகளால் 'துளைத்து' எடுங்கள். ஒரு மூன்று டஜன் கேள்வியை யோசித்து வைத்து கொள்ளுங்கள்.
எப்படி இருக்க ? வீட்ல எல்லாம் சவுக்கியமா ? வேலை எப்படி போகுது ? மூணு வேலையும் ஒழுங்கா சாபிடுரீய ? நு ஆரம்பிச்சு நண்பர் ரொம்ப பாசக்கார பயால இருக்கானே நினைச்சிகிட்டு இருக்கிறப்ப திடீர்னு "கிர்ச்சாப் law" நா என்னனு கேளுங்க அது தெரியாட்டி " moore's law " ந என்னனு கேளுங்க.இப்படியே 'கஜகிச்தானோட' பிரதமர் யாருன்னு கேளுங்கள்
நண்பர் முகம் வெளுரி ஓட்டுரனு தெரிஞ்சிகிட்டு அடிக்க வருவது அலப்பறையான விஷயம்
No comments:
Post a Comment