சீண்டும் பாகிஸ்தான்..தொடை நடுங்கும் இந்தியா!
முழு பூசணி காயை சோற்றில் மறைப்பது என்பதை பாகிஸ்தான் கண்கூடாக செய்கிறது . பிடிபட்ட தீவிரவாதி காசாவின் பெற்றோரை வீடு காவலில் வைத்து விட்டு தீவிரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவனல்ல என புருடா விட்டது மட்டும் இல்லாமல் ஒரு குண்டு வெடிப்புக்கு சந்மந்தம் இல்லாமல் இந்தியரை பிடித்து வைத்து ஒற்றன் என மீண்டும் இந்தியாவ்ரிக்கு கவுண்டர் அட்டாக் கொடுப்பது மட்டும் இல்லாமல் தனது இராணுவத்தை முருகேர்றி இந்திய எல்லையை நோக்கி நிலை கொள்ள செய்து உள்ளது.முதலில் இராணுவ ரீதியான மிரட்டலை விடுத்த இந்திய அரசு இப்பொது பாகிஸ்தானின் படி படியான இராணுவ முனேற்பாடு ,தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்த்து தொடை நடுங்கி போர் என்பதை யாரும் விரும்புவதில்லை என ஈன ஸ்வரத்தில் முனகி மெதுவாக பின் வாங்குகிறது.
இராஜ தந்திர ரீதியாக இந்தியாவிற்கு பாகிஸ்தானின் மீது சர்வதேச நிர்பந்தத்தை ஏற்படுத்தி தீவிரவாத வேர்களை களைய செய்யும் முயற்சியில் ஒரு பெரிய தோல்வி.. இந்தியா இப்பொது பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கையை எடுக்க முடியாமல் தொடை நடுங்க செய்வது ஒரே ஒரு காரணம் தான். அது பாகிஸ்தானின் அபிரிதமான அசுர வளர்ச்சி பெற்ற பாகிஸ்தானின் விமான படை .. ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட பாகிஸ்தானின் விமான படையின் வளர்ச்சியில் சீன நாட்டின் உதவி அளப்பரியது.. இன்று பாகிஸ்தானின் விமான படையின் பெரும்பாலான விமானகள் சீனாவில் இருந்து வாங்கப்பட்டன . இதற்கு மேலாக பாகிஸ்தானின் விமான தொஜில்நுட்ப பிரிவுக்கு சீனா செய்த உதவி எண்ணிலடங்கா .. இந்து பாகிஸ்தான் எந்த நாட்டிலிருந்து வரும் தாக்குதல் விமானங்களை துளியமாக கண்டறிந்து வழி மறித்து தவிடு பொடியாக்கும் அளவு விமான தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கி இந்தியாவிற்கு மிக பெரிய சவாலாக உள்ளது ..பாகிஸ்தானிடம் உள்ள அசுர வேகத்தில் சென்று எதிரியின் இல்லாகி துல்லியமாக தாக்கி ஆகாயத்திலே தேவைப்படின் எரிபொருள் நிரப்பும் வசதி உடைய நவீன விமானங்கால் எண்ணற்றவை...
பாகிஸ்தானிடம் உள்ள போர் விமானங்களை பார்கையில் இந்தியா கண்டிப்பாக அச்சம் கொள்ளவது அவசியம். சரி இந்தியாவில் போர் விமாங்கள் எந்த அளவில் உள்ளன .. இந்தியாவின் போர் விமானங்களில் தற்போது நம்பிக்கை அளிக்க கூடிய வகையில் இருபது பிரெஞ்சு தாயாரிப்பான மிராஜ் வகை விமாங்கள் மட்டும் தான்.
இதில் கொடுமை என்ன என்றால அதே மிராஜ் வகை விமான்களை, மிராஜ் வகைகளில் நவீன வடிவமைப்பு விமானங்களை இந்தியாவிற்கு சமமாக பாகிஸ்தானும் வாங்கி குவித்துள்ளது.. இந்தியாவின் "மிக்" ரக விமானங்கள் கவலை குள்ளாக இருகின்றன . வருடந்திற்கு இரண்டு மிக் விமானங்கள் பயிற்சியின் பொது விபத்துக்கு உள்ளாகின்றன ... இப்பொது இன்டிதாவில் உள்ள சீறி பாய்ந்து , தாக்குதலை நடத்து போர் விமானங்கள் வகைகள் முறையே
மிராஜ் 2000 (french made)
மிக் 29 (russian made)
சு -30 (russian made)
மிக் - 27 , 23 மற்றும்
21 (russian made)
இப்படி முற்றிலும் ரஷியன் பழைய வகை போர் விமான்களை மட்டும் நம்பி இருக்கும் இந்தியாவின் நிலை எப்படி எனில் எவ்வாறு மும்பையின் தீவிரவாத எதிர்ப்பு படைக்கு(ATS) anti terror squad காலாவதியான(obsoleted) துப்பாகிகளை கொடுத்து மிக நவீன தானியங்கி துபாகிகளை வைத்து இருக்கும் (Auto loading pistol ) தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பை மேற்கொண்டு சிறந்த காவல் துறை அதிகாரிகளை இழக்க நேரிடதோ அதே நிலை தான் விமான படையை பொறுத்த வரையும் ..
பாகிஸ்தானில் பர்வேஷ் முஷராப் காலத்தில் இராணுவத்தின் வல்லமையை இந்தியாவின் பலவீனத்தை நன்கு கணித முஷராப் விமான படைக்கு அதி நவீன விமாங்களை அமெரிக்காவிடம் இருந்து சீனாவிடம் இருந்து வாங்கினார் பல விமாங்களுக்கு முன் தொகையும் கொடுத்து வைத்தார்.. அனால் வழக்கம் போல் உறங்கி கிடந்த இந்திய அரசு இந்தியா விமான படைக்கு தேவையான நவீன போர் வீமாங்களை வாங்காமல் போர் விமாங்களுக்கு வர்ணம் பூசி குடியரசு, சுதந்திர தினத்தில் வானத்தில் குட்டி கரணம் அடித்து வித்தை காட்டும் பொருளாக எண்ணி அந்த நிலையிலே வைத்து உள்ளனர்
பாகிஸ்தானின் விமான படையின் பலமும் அதன் விமானகளும் அச்சுரதலை உருவாக்கும் திறன் கொண்டவை. அவைகள் முறையே
F-16s அமெரிக்க தயாரிப்பு மிகவும் அதி நவீனமானது
F-7MPs சீன தாயரிப்பு -மிக் ரக விமானங்களுக்கு சவால் விடுபவை
F-7PGs சீன தாயாரிப்பு
Mirage IIIs பிரெஞ்சு தயாரிப்பு
JF-17 Thunders சீன தாயரிப்பு - பாகிஸ்தான் சுயமாக இந்த அதி நவீன விமான்கங்களை தயாரிக்கு திறன் பெற்றுள்ளது
Mirage Vs பிரெஞ்சு J-10/ F-10 Vanguard சீன தயாரிப்பு பாகிஸ்தான் இவ்வாறு ஆயிரகணக்கான போர் விமான்களை வாங்கி வைத்துள்ளது .. அது மட்டும் இல்லாமல் பாகிஸ்தான் போர் விமானக்ளை சொந்தமாக தாயரிக்கும் திறன் உடையது JF-17 போர் விமானங்கள் பாகிஸ்தானில் தாயரிக்க படுகின்றன
மேற்கொண்ட பாகிஸ்தானின் போர் விமாங்களுடன் இந்தியாவில் உள்ள விமான்களை ஒப்பிடுகையில் கண்டிப்பாக நாம் சிறிதேனும் பின் தங்கி உள்ளோம் . மேலும் நான் அறிந்து வகையில் இந்தியாவில் சொந்தமாக பாகிஸ்தானை போல ஒரு போர் விமானத்தை தாயரிக்கும் அற்றல், தொழிற்சாலைகள் இல்லை.. மனித வளத்தில் நாம் ராணுவ ரீதியாக சிறந்து விளங்கினாலும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் இந்தியா ராணுவம் தொழில் நுட்ப ரீதியாக போர் விமானங்களை பொறுத்த வரையில் முன்னேறி உள்ளதா என்பது சந்தேகமே ... பாகிஸ்தானும் இந்தியாவிற்கு சரி நிகராக அணுகுண்டு தொழில் நுட்பத்தில் முன்னேறி உள்ளது .. பாகிஸ்தானும் அணுகுண்டு தாக்குதல் என்பதை இறுதி ஆயுதமாக தான் எடுக்கும்.. ஆக்க மொத்ததில் பாகிஸ்தானின் வறட்டு பிடிவாதம், திமிருக்கு பினனணி அதன் மிரட்டல் விமான படை மட்டுமே ...
பாகிஸ்தான் தெற்கு இந்தியாவை தாக்குவதற்கு இலங்கை கண்டிப்பாக அதன் விமான தளத்தை உபயோக படுத்துவதற்கு அனுமதிக்கும் .. என்றும் இலங்கை இந்தியாவின் முதுகில் குத்த தாயராக தான் இருக்கும் . இதற்கு அஞ்சி தான் இந்தியா ராணுவம் இலங்கை ராணுவத்தை தாஜா செய்து தளவாடங்களை வழஅங்கி அப்பாவி தமிழ்ர்களை கொன்று குவிக்க மறைமுகமாக உதவுகிறது .. இலங்கை பாகிஸ்தான் விமான்களை நிலை நிறுத்த இடம் கொடுப்பின் இந்தியாவின் தெற்கு மாநிலங்கள் கடும் விமான தாக்குதல்களுக்கு உள்ளாகும் .. ஆக்க மொத்தத்தில் இந்தியா பாகிஸ்தான் என்ன தான் சீண்டினாலும் , மறைமுகமாக தீவிரவாதத்தை வளர்த்தாலும் , பாகிஸ்தானை வாய் சொல்லில் சமாளிக்க செய்ய முயலுமே ஒழிய இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கு, சவால்களுக்கு விட்டு கொடுத்து தான் செல்லும்.. இந்தியா எல்லை தாண்டி தீவிரவாத முகாம்களை அளிப்பது என்பது மிக அரிதாக தான் நடக்கும் .. பாகிஸ்தான் இந்தியா எல்லையில் அதன் துருப்புகளை நிலை கொள்ள செய்கின்றது.. இந்த துருப்பு நிலை கொள்ள செய்வதற்கு குறைந்த பட்சம் ஒரு வார காலம் ஆகும் .. அனால் இந்தியா இப்பொது உறங்கி கொண்டு தான் இருக்கிறது .. பாகிஸ்தானின் துருப்புகள் முழுமையாக இந்திய எல்லையில் நிலை கொண்ட பிறகு சர்வதேச எல்லையில் நிகழும் ஒரு பட்டாசு வெடி சத்தம் கூட பாகிஸ்தானின் மூர்க்க தன தாக்குதலை இந்திய எல்லையில் தூண்டும் .. ஆக்க மொத்தத்தில் ராஜிய ரீதியாக இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானிடம் தோற்று விட்டது ..
மறைமுகமாக இந்தியாவில் தீவிரவாதிகளை வளர்த்து ஏவி பாகிஸ்தான் போர் தொடுத்து ஏக பட்ட ஆண்டுகள் ஆகிறது .. இன்னும் இந்திய அரசு உறங்கி கொண்டு தான் இருக்கிறது . விழிக்க வில்லை .. இவர்கள்ளுக்க் அடுத்த தேர்தலில் எப்படி வெற்றி கொள்வது என்பது மட்டும் தான் குறிக்கோள் .. தீவிரவாதிகளும் அவர்கள் தாக்குதல்களுக்கும் அதனை ஒட்ட நறுக்குவது இரண்டாம் கட்ட பிரச்னை .. அப்பாவி , சாமானிய மக்கள் உயிர்கள் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானால் இந்த அரசு கண்டு கொள்ளாது சர்வதேச சுற்றுலா பயணிகள் , பணகார விடுதிகள் என்றால் மட்டும் இந்த அரசு கர்ஜித்து மீண்டும் உறங்க சென்று விடும் .. ஆக இந்தியா பாகிஸ்தானோடு இப்பொது போர் புரியாது .. புரியவும் முடியாது.. மிரட்டி பார்த்து விட்டு பின் அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவார் . ஆனால் பாகிஸ்தான் சீண்டி பார்க்க தயார் ஆகி விட்டது .. இந்தியா அரசு தொடை நடுங்குகிறது..
ஒரு தகவல் தொழில் நுட்ப வல்லுநர் இந்தியாவில் வரியாக முப்பது ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை ஆண்டு ஒன்றிற்கு வரி கட்டுகிறான் .. ஏறத்தாள ஒரு கோடி தகவல் தொழில் நுடம் சார்ந்த வலுனர்கள் வரி கட்டுகிறார்கள் .. என்னும் எதனை கோடை மக்கள் எதனை துறைகளில் வரி கட்டுகிறார்கள் .. வரி கட்டிய நான் கேட்கிறேன் இந்தியா அரசே இந்தியா தேசத்துக்காக , அமைதிக்காக தன் குடும்பத்தை, மனைவியை, பச்சிளம் குழந்தையை விட்டு நாட்டின் எல்லையில் , போர் முனையில் மரண பூமியில் சீறி தெறிக்கும் தோடாகளுக்கு மத்தியில் போரிட உயிரை துச்சமென மதித்து போரிட போகிறானே ராணுவத்தில் பணிபுரியும் என் சகோதரர்கள் அவர்கள் கையில் காலாவதியான துப்பாகியை மட்டும் கொடுத்து அனுப்பாதே.. டாட பிள்ளைகளும், அம்பானிகளும் , மிட்டல்களும் என உலக பணகாரகளை உருவாக்கி கொடுத்த அரசே என் சகோதரனுக்கு ஒரு தானியங்கி துப்பாகியை கொடுத்து அனுப்பு அதற்கு உனக்கு வக்கு இல்லையில் ஆட்சியை விட்டு ஓடி இராணுவத்தின் பொறுப்பில் சில காலம் விடுங்கள் ..
1 comment:
kandippaga nanba kangeress endra duroki nattai
allumvarai nam nadu munnarapovathillai
Post a Comment