காயகல்பம் என்பது என்றும் தேகத்தை இளமையாய் வைத்து,ஆயுளை நீடிக்கும் முறை. இந்த காய கல்ப முறைக்கு பல்வேறு சித்தர்கள் , ஆயுர்வேத நிபுணர்கள் பல்வேறு குறிப்புகளை கொடுத்துள்ளனர்
குறிப்பகா சித்தர் தேசமான "சதுர கிரி" மலையை சுற்றி சில மூலிகைகளை ,மரங்களை மூல பொருளாக பயன்படுத்தும் குறிப்புகள் உள்ளன.காலத்தால் அத்தாவரகள் அழிந்திருபினும் இதனை கான மஞ்சரி தொகுத்துள்ளார் .
இந்த காய கல்ப முறை பற்றி அனைவரும் தெரிந்த கருத்துகளை ,முறைகளை விவாதித்து அனைவர் ஆயுளையும் நீட்டிபோம்
குறிப்பு:
இது தொகுக்கப்பட்ட சித்தர் குறிப்புகளின் சுருக்கம்.இதன் நோக்கம் இங்கு குறிபிடபட்டுள்ள மூலிகைகளை கேள்விபட்டு இருக்கிறீர்களா என்பது?
இதன் குறிப்புகளுக்கு ஒத்து உள்ள செடிகளை தேர்ந்த சித்த வைத்தியரிடம் உறுதி படுத்தி கொள்ளாமல் பரிசோதிக்க வேண்டாம்
புசுண்ட மகரிஷி கூறும் காயகல்பம் :
------------------------------------
சதுரகிரி வனங்களில் "அழுகண்ணி " என்ற மூலிகை உண்டு இதன் பூ மஞ்சள் நிறமாகவும் , இலைகள் பலாச்சுளை போலவும் எந்நேரமும் நீர் வடிந்து இருக்கும் அதனால் அலுகன்னி என பெயர் . காய்கள் செந்தட்டிகாய்கள் போல் இருக்கும் இதனை வேருடன் பிடுங்கி வந்து காய வைத்து இடித்து ,பசு நெய்யுடன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட நரை திரை மாறும்.
"தொழுகன்னி" என்ற மற்றொரு மூலிகை உண்டு .இதன் இலை அலறி இல்லை போலவும்,தூர் கருப்பு நிறமாகவும் இருக்கும் இது எப்போது கதிரவனை நோக்கியே இருக்கும் இந்த தொழுகன்னி இலையில் சிறிதும் அழுகண்ணி இலையில் சிறிதும் சேர்த்து இடித்து பொடி செய்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும்
விபத்துகள்,தற்கொலைகள் போன்ற துர் மரணங்களை விடுத்து ஒருவர் இயற்கை மரணம் என்பது அவரவர் உணவு பழாக்கம்,கெட்ட பழக்கவழக்கங்களை பொறுத்து மாறுபடும்.
" உணவே மருந்து" என்பது இதனை தான் . நம்மை போன்ற சமைத்த உணவை உண்பதை காட்டிலும் இயற்கை உணவு உண்பவர் தேக ஆரோகியமுடன் இருப்பார் என்பது உறுதி..
உணவு பழக்க வழக்கங்களையும், வாழ்வியல் சூழ்நிளைகளையும் பொறுத்து ஆயுள் எவ்வாறு மாறுபடுகிறது என்பதற்கு ஒரு சிரூ உதாரணம்
என் கொள்ளு தாத்தா 90 வயது வரை தேக ஆரோகியத்துடன் வாழ்ந்தார். அவர் வாழ்க்கை முறையை எடுத்து கொண்டால் கிராமத்தில் அதிகாலையில் எழுந்து வில் வண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைசியாராமன் கோயில் நதியில் நீராடி , அருகில் உள்ள தியான் மேடையில் மான் தோலில் தியானித்து மணி கணக்கில் பல்வேறு ஆசன்களை செய்வார். காலையில் கருட தரிசனம் முடித்து விட்டு உணவே உண்பார். மூன்று வேலையும் வாழை இழையில் உண்பவர்.தான் உணவில் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்து இருந்தவர்.நல்ல உழைபாளி . இயற்கை வைதியத்தை நம்புபவர்.எந்த ஒரு நோயும் இறுதி வரை அன்டாதவர்
அடுத்த தலைமுறையான என் தாத்தாவோ 75 வயதில் உடல் வருந்தி இயற்கை மரணம் எய்தினார். உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. தியானம்,ஆசனம் எதுவும் பண்ணமாட்டார், ஊர் நாட்டாமையாக பிரச்சனைகளை குழபிக் கொண்டு அமைதி இல்லாமல் இருப்பார். சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருந்துகளை எடுத்து கொண்டு அதன் பின் விளைவுகளால் அவதிபட்டார்.
அவர்கள் வாழ்கை முறை , கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப இருவரின் மரணங்கள்
இடைவெளி 15 ஆண்டு காலங்கள் குறைந்தது.
பசிக்கு புசிக்க கொடுப்பது போல் பிணியால் வருந்தும் தேகத்துக்கு மருந்து கொடுப்பது
அவசியம்.
நம் வாழ்க்கை முறையை ஆசனம்,தியானம் என செம்மை படுத்தி கொண்டால் பிணி வெகுவாக அண்டாது, அவ்வாறு பிணி ஏற்படின் அதற்கு தக்க பின்விளைவுகள் அல்லாத வைத்தியம் சால சிறந்தது .
தர்ம,வாழ்கை நெறிமுறைகளை அனுசரித்து கடவுள் மேல் உள்ள பய்த்தினால் வாழ்பவன் ஒரு நேர் கோட்டில் கட்டுப்பாடுகளை விதித்து வாழ்க்கையை கொண்டு செல்லுவர். அவ்வாறு வாழ்ந்திடினும் பிணிகள்,ஆரோக்கிய தேக்க நிலைகள் சுற்று புற சூழ்நிலைகளால், தொற்று நோய்களால் ஏற்படலாம் அதனை நிவர்த்தி செய்ய இந்த மூலிகைகள் தேவைபடுகின்றன.
எமனை,சிதிரகுப்தனை பார்த்ததில்லை ஆனால் மரண வீட்டில் நாய்கள் வித்தியாசமாக ஊளை இடுவதை கேட்டிருக்கிறேன்
---------
**இறப்பு என்றால் என்ன ? "இருதயம் நின்று போவது ".. மூளை மட்டும் செயளிழந்தால் அது கோமா ஆனால் இறப்பு இல்லை .
**இருதயம் எப்போது நிற்கும் ? இதய தசைகள் பலவீனம் அடைந்தால் , இருதய இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் .
** இதய தசைகள் எப்போது பலவீனம் அடையும் ? எப்பூது அடைப்பு ஏற்படும் ?
இதய தசைக்கு போதுமான இரத்தம் செல்லவிடின் இல்லை கொழுப்பு அடைத்து கொண்டால்.
**இரத்தம் சுத்தமாக இருந்தால் கிட்னி ,இருதயம் வேலை பளு குறையும். இருதயம்,கிட்னி வேலை பளு குறைந்தால் அதன் ஆயுள் நீடிக்கும்
** இருதயம் ,கிட்னி நீண்ட நாள் வேலை செய்தால் நமது ஆயுள் நீடிக்கும்
இரத்தத்தை சுத்தமாக் வைத்து கொள்ள இயற்கையாக அத்தி பழாம்,ஆப்பில் போன்ற பழங்களில் மூல பொருட்கள் உள்ளன. இந்த பழா வகைகளில் உள்ள அதே இரத்த விருத்திக்கான மூல பொருட்கள் சில மூலிகைகளில் உள்ளன.
**நெல்லிக்கனி ஒரு அருமையான மூலிகை . இரத்த விருத்தி ,சுத்திகரிப்பு,சீரணம் இன்னும் பல பலன்கள் உள்ளன.அதனால் தான் அதியமானுக்கு அவ்வையார் ஒரு மலை நெல்லி கனியை நீண்ட நாள் வாழ்வதர்காக் கொடுத்தார்.
** ஆக தினமும் ஒரு நெல்லிகாயை நீங்கள் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகுமா ?
அதனால் இருதயமும்,கிட்னியும் அதிக பழுவுடன் வேலை பார்ப்பது தவறிகப்படுமா ?
ஆக இருதயமும் ,கிட்னியும் அதிக நாட்கள் உழைக்கும் .அவ்வாறு உழைத்தால் நமது ஆயுள் கூடும். இந்த மூளிககளில் உள்ள வேதி , மூல பொருட்கள் உடல் பாகங்களின் வாழ்நாளை ,செயல் திறனை கூட்டி நமது ஆயுளை , இயற்கை மரண நாட்களை நீட்டிப்பு செய்கின்றன
3 comments:
இன்னும் பல மூலிகைகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வாழ்கையை இனிமையாக ஆக்கிக் கொள்ள thamizthendral.blogspot.com தொடர்ந்து படியுங்கள் .மேலும் தங்களது இந்த படைப்பு நல்லதொரு இன்றியமையாத தகவலாக இருந்தது. தொடரட்டும் இந்தப் பணி.
காயகல்பம் என்பது ஒரு மருந்தல்ல. அது ஒரு பயிற்சி முறை. வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மன்றங்களின் மூலம் கற்றுத்தரப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் உயிர் வளத்தை பெருக்கி, ஆயுளை நீடிக்கச் செய்யலாம். முதுமையை தள்ளிபோடலாம். பயிற்சி பெற்ற ஆசிரியர் மூலம் கற்றுக் கொள்ளவும். வாழ்க வளமுடன்.
அனைவரின் ஆயுள் அறியும் ரகசியம்
http://saramadikal.blogspot.in/2013/07/blog-post_6.html
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
இவண்
சாரம் அடிகள்
94430 87944
Post a Comment